பண்டைய சமூகத்தில் வாழ்ந்தவர்கள் பற்றிய ஒரு தெளிவினை பெற்றுக் கொள்வதற்கு தொல்லியல் முறைமை துணை புரிகின்றது. அதாவது அக்கால மக்கள் விட்டுச் சென்ற தடயங்கள் போன்றவற்றை பற்றி அறிந்து கொள்வதற்கு தொல்லியல் ஆய்வானது அவசியமாகின்றது.
தொல்லியல் என்றால் என்ன
தொல்லியல் என்பது பண்டைய கால மனிதன் விட்டுச் சென்ற எச்சங்களை ஆய்விற்குற்படுத்தி அதனூடாக அவர்களின் பண்பாட்டை அறிந்து கொள்வதாகும். அதாவது பழங்காலத்தில் விட்டுச்சென்ற கல்வெட்டுக்கள், எச்சங்கள் பற்றி ஆய்வுகளை மேற்கொள்வதாகும்.
அகழாய்வுகளை மேற்கொள்வதன் ஊடாகவே இன்று தொல்லியல் ஆய்வு முறைகள் இடம் பெறுகின்றன.
பண்டைக்கால சமூதாயத்தினர் விட்டுச் சென்ற எச்சங்களில் இருந்து கடந்த காலத்தை உருவாக்கும் ஒரு முறைமையே தொல்லியலாகும். இது மனிதன் தோன்றிய காலம் முதல் இன்று வரை இடம் பெற்றுக் கொண்டு வருகின்ற ஒரு முறைமையாகும்.
தொல்லியல் ஆய்வு முறைகளின் அவசியம்
பழமை வாய்ந்த விடயங்களை இலகுவாக தெரிந்து கொள்வதற்கு தொல்லியல் ஆய்வு முறைமையானது அவசியமாகின்றது. மறைக்கப்பட்ட பழமைகளை எடுத்துக்காட்டி அதனூடாக பண்டைய கால மக்களின் பண்பாட்டினை வெளிப்படுத்தக் கூடியதாக காணப்படுகின்றன.
பண்டைய காலங்களில் தயாரிக்கப்பட்ட கற்கருவிகள், செம்புக்கருவிகள், கற்கால மனிதர்களின் ஈமச் சின்னங்கள், பானையோடுகள், குகை ஓவியங்கள், இடைக் கால நாணயங்கள் போன்றவை பற்றி அறிந்து கொள்ள தொல்லியல் அவசியமாகும்.
மனிதன் எவ்வாறு நெருப்பைக் கண்டுபிடித்தான், உலோகங்களை எவ்வாறு உபயோகப்படுத்தினார்கள், காட்டு விலங்குகளை எவ்வாறு மனிதன் வீட்டு மிருகமாக வளர்க்க கற்றுக் கொண்டான் போன்றவற்றை அறிவதற்கு தொல்லியல் ஆய்வு முறை துணை புரிகின்றது.
தொல்லியலின் வகைகள்
தொல்லியலானது பல்வேறு வகைகளாக காணப்படுகின்றது. அவற்றை பின்வருமாறு நோக்கலாம்.
இன மரபுத் தொல்லியல்
பண்டைய மக்களின் பழக்கவழக்கங்கள் போன்றவற்றை ஆய்வு செய்து இன்றைய பழங்குடியினரின் வாழ்வுடன் ஒப்பிட்டு ஆய்வினை மேற்கொள்ளுதல் இனமரபுத் தொல்லியலாகும்.
பொருளாதார தொல்லியல்
பொருளாதார தொல்லியல் என்பது பண்டைய கால மனித சமூதாயத்தின் பொருளாதார நிலைகளை ஆய்வு செய்வதாகும். பொருள்களின் உற்பத்தி, வணிகம், பரிமாற்றம், நீர்ப்பாசனம், கால்நடை வளர்ப்பு, பொருளாதார வளர்ச்சி முதலான அம்சங்கள் பொருளாதார தொல்லியலினுள் அடங்கும்.
அழிவு மீட்பு தொல்லியல்
அழிவு மீட்பு தொல்லியலுக்கு உதாரணமாக ஆந்திர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட நாகர்ஜூனா சாகர் அகழாய்வின் போது கிருஸ்ணா நதிக்கரையில் இருந்த புத்த தூபிகளும் அகற்றப்பட்டு வேறு ஓர் இடத்திற்கு கொண்டு சென்று நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
தொல்லியல் ஆய்வின் நன்மைகள்
வரலாற்றிற்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த மனிதர்களுடைய வாழ்க்கை முறைமைகள் பற்றி அறிந்து கொள்வதற்கு தொல்லியல் துணை புரிகின்றது. அக்காலத்தில் வாழ்ந்த மக்களுடைய வாழ்க்கை முறைமைகளை அறிய பல்வேறு சுவடுகள் மற்றும் கல்வெட்டுக்களின் ஊடாக அக்கால மக்களின் பண்பாட்டினை அறிந்து கொள்ளலாம்.
பண்டைய கால மனிதனானவன் எவ்வாறு அக்காலப் பகுதிகளில் உலோகங்களை பயன்படுத்தினான், எவ்வாறு தானியங்களை சேமித்து வைத்து வாழப்பழகிக் கொண்டான் போன்ற பல விடயங்களைப்பற்றி தெரிந்து கொள்வதற்கு தொல்லியல் ஆய்வானது துணை புரிகின்றது.
எனவேதான் தொல்லியல் ஆய்வு முறைமையானது அறிவியல் ரீதியாக மாத்திரமின்றி ஆரம்ப கால மனிதனுடைய வாழ்க்கை முறைமைகள் பற்றிய சிறந்த வழிகாட்டலிற்கும் இந்த தொல்லியல் ஆய்வு முறைமையானது அவசியமாகின்றது.
You May Also Like: