புதைபடிவ எரிபொருள் என்றால் என்ன

puthaipadiva eriporul in tamil

பல்வேறுபட்ட ஆற்றலினை தன்னகத்தே கொண்டுள்ளதாக புதைபடிவ எரிபொருள் காணப்படுகிறது.

புதைபடிவ எரிபொருள் என்றால் என்ன

புதைபடிவ எரிபொருள் என்பது புதுப்பிக்க முடியாத ஆற்றல் வளமாகும். இது விலங்கு மற்றும் தாவர எச்சங்களிலிருந்து, கரிம பொருட்களின் சிதைவிலிருந்து உருவாகிறது. அதாவது இறந்து புதைத்த உயிரிகளின் உயிரகமற்ற சிதைவு போன்ற இயற்கை நிகழ்வுகளால் புவிக்கடியில் தோன்றிய எரிபொருள்களாகும்.

எண்ணெய், நிலக்கரி, இயற்கை எரிவாயு போன்றவை புதைபடிவ எரிபொருள்களாகக் காணப்படுகிறது.

புதைபடிவ எரிபொருளின் உருவாக்கத்திற்கு கரிமப்பொருளானது இயற்கை உருமாற்ற செயல் முறைக்கு இணங்கவேண்டியது அவசியமாகக் காணப்படுகிறது. இதனூடாகவே புதைபடிவ எரிபொருள் உருவாகியது எனலாம்.

புதைபடிவ எரிபொருள்கள்

இயற்கை எரிவாயு

இயற்கை எரிவாயு என்பது நிலத்தடியில் இருந்து கிடைக்கப் பெரும் புதைபடிவ எரிபொருளாகும். இது தீப்பற்றி எரியும் தன்மை உடையதாகும். இந்த இயற்கை எரிவாயுவில் பிற நீரியக்காரியங்களை எத்தேன், புரொப்பேன், பியூட்டேன், பென்ட்டேன் போன்றவை சிறிதளவில் காணப்படுகிறது.

இன்றைய உலகின் எரிம ஆற்றல் தேவைகளை தீர்த்துவைக்கக்கூடியதாக இந்த இயற்கை எரிவாயு காணப்படுகிறது. இது குறைவான மாசுபாடு உடையதாகவும் தூய்மையானதாகவும் காணப்படுகிறது. இது எண்ணெய் வயல்களிலிருந்து வாயு வடிவில் எடுக்கப்படுகின்றது.

பெற்றோலியம்

பெற்றோலியமானது திரவமாக பல்வேறு வகையான ஹைட்ரோகார்பன்களின் கலவையாக காணப்படுகின்றது. பல்வேறு எரிபொருள் மற்றும் துணை தயாரிப்புக்களை பெற பயன்படுகின்றது. இதனிலிருந்தே பெற்றோலானது பிரித்தெடுக்கப்படுகின்றது. இது பிரதானமாக அகத்தகன இயந்திரங்களில் எரிபொருளாக பயன்படுத்தப்படுகின்றது.

நிலக்கரி

நிலக்கரியமானது தொல்லுயிர் எச்சங்களிலிருந்து உருவாகும் திண்ம எரிபொருளாக காணப்படுகின்றது. பொரும்பாலும் கரி மற்றும் ஹைடிரோகார்பன்களால் ஆன நிலக்கரி கந்தகம் உட்பட பல இதர வேதிப் பொருட்களையும் கொண்டிருக்கும். இந்த நிலக்கரியானது மின் உற்பத்தி போன்ற பல்வேறு பயன்பாட்டினை உடையதாக காணப்படுகின்றது.

தார் மணல் மற்றும் எண்ணெய்

இவை களிமண் அளவிலான மணல்களால் உருவாக்கப்படும் பொருட்களாகும். இவை கரிமப் பொருட்களின் சிறிய எச்சங்களை கொண்டுள்ளது. இவை எண்ணெய் போன்றதாக காணப்படும்.

புதைபடிவ எரிபொருளின் நன்மைகள்

புதைபடிவ எரிபொருள்களானவை இன்று பல்வேறுபட்ட வகையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றமையினை காணலாம். அதாவது புதைபடிவ எரிபொருள் பிரித்தெடுப்பானது. எளிதானதாக காணப்படுவதோடு பொருளாதார இயக்க செலவுகள் குறைவாகவே காணப்படுகின்றது.

ஒப்பீட்டளவில் குறைந்த விலையில் அதிக சக்தியை வழங்க கூடியதாகவும் காணப்படுகின்றது. அதாவது இதனுடைய வலுவானது மிகவும் வினைத்திறனானதாகவும் மலிவானதாகவும் காணப்படுகின்றது.

போக்குவரத்து மற்றும் சேமிப்பிற்கு எளிதானதாகவே இப் புதைபடிவ எரிபொருட்கள் காணப்படுகின்றது. அதாவது சமயலறை பாவனை, அனைத்து வகையான தொழில்துறை இயந்திரங்களுக்கு என பலவாறான பயன்பாடுகளுக்கு இவை உதவுகின்றன.

புதைபடிவ எரிபொருள்களினால் ஏற்படும் பாதிப்புக்கள்

புதைபடிவ எரிபொருள் பிரித்தெடுத்தல் மூலமாக சுற்றுச் சூழல் மாசுபாடானது அதிகரித்து கொண்டே காணப்படுகின்றது. உதாரணமாக எண்ணெய் பிரித்தெடுத்தலை நோக்குவோமேயானால் இதன் போது எண்ணெய் கசிவுகள் ஏற்படுகின்றது. மேலும் உயிரினங்களின் அழிவில் இது தாக்கம் செலுத்துகின்றன எனலாம்.

இந்த புதைபடிவ எரிபொருள்களான பெற்றோல், டீசல் போன்றவை வளிமண்டலத்தில் காபனீரொட்சைட்டு வாயுவின் செறிவை அதிகரிக்கின்றது. இதன் காரணமாக புவி வெப்பமடைந்து காணப்படுவதோடு மேலும் சுவாச மற்றும் இருதய நோய்கள் ஏற்படுகின்றது.

மக்கள் தொகையில் உணர்திறன் வாய்ந்த துறைகள் கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் போன்றவர்களே அதிகளவில் பாதிப்புக்களை எதிர்கொள்கின்றனர்.

எனவேதான் இதன் பயன்பாட்டினை சிறந்த முறையில் மேற்கொள்வதன் மூலம் வாழ்க்கையினை சிறப்பாக வாழ முடியும்.

You May Also Like:

புதுப்பிக்கத்தக்க வளங்கள் என்றால் என்ன

ஆற்றல் ஓட்டம் என்றால் என்ன