புயல் என்றால் என்ன

puyal endral enna in tamil

புயல் என்றால் என்ன

உலகில் நிகழும் இயற்கை அழிவுகளில் புயலும் ஒன்றாக உள்ளது. வருடா வருடம் நிகழும் பருவமழை மாற்றங்களைப் போல் புயலும் உலகின் பல நாடுகளிலும் உருவாகுவதை நாம் காண முடிகின்றது.

இவ்வாறு உருவாகும் புயலில் சில புயல்கள் மாபெரும் அழிவுகளை ஏற்படுத்துகின்றது, சில சமயங்களில் பெரும் அழிவை ஏற்படுத்தாமலும் கரையைக் கடப்பதுண்டு.

புயல் என்றால் என்ன

புயல் என்பது கிரேக்க மொழிச் சொல்லிருந்து வந்ததாகும். அதாவது “சுரண்டு கிடக்கும் பாம்பு” என்பதற்கான கிரேக்கச் சொல்லிருந்து வந்தது.

புயல் என்பதற்கான எளிய வரையறையாக ஒரு பருப்பொருளின் அமைதி குலைந்த நிலையைக் குறிப்பது புயல் என வரையறை செய்யலாம்.

புயலின் வகைகள்

பொதுவாக புயலானது காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலம் போன்ற படிநிலைகளைக் கடந்து புயலாக வலுப்பெறுகின்றது. இதன் பின்னர் புயலின் தீவிர தன்மையை பொறுத்து அதிதீவிரப்புயல், மிக தீவிரப்புயல், சூப்பர் புயல் என்றெல்லாம் பலவாறு வகைப்படுத்தப்படுகின்றது.

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருக்கும்போது 31 – 50 கிலோமீட்டர் வேகத்தில் மணிக்கு காற்று வீசும்.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருக்கும் போது மணிக்கு 51 – 62 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும்.

புயலாக வலுப்பெறும் போது மணிக்கு 88 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும். இப் புயலானது தீவிர புயலாக வலுப்பெறுகின்ற போது காற்றின் வேகம் மணிக்கு 89 – 117 கிலோமீற்றர் ஆக வீசும்.

இவை தவிர மிக அதி தீவிரப்புயலாக கரையைக் கடக்கும் போது மணிக்கு 119-220 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக அதிகப்படியான மற்றும் வலுவான புயலாக சூப்பர் புயல் காணப்படுகின்றது. சூப்பர் புயலானது மணிக்கு 221 கிலோமீட்டர் வேகத்திற்கும் அதிகமாக காற்று வீசும்.

இவ்வாறாக காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தில் தொடங்கி சூப்பர் புயல் வரைக்கும் புயலின் தீவிரத் தன்மை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தப்படுகின்றது.

புயலுக்கு பெயர் சூட்டப்படுவது எப்படி

வானிலை ஆய்வாளர்கள் இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற காலத்தில் புயல்களை அடையாளம் காண்பதற்கு பெண்களின் பெயர்களை வைக்கும் வழக்கத்தை தொடங்கி வைத்தனர்.

ஆனால் அழிவை ஏற்படுத்தும் புயலுக்கு பெண்களின் பெயர்களை சூட்டுவதனை பெண்ணியவாதிகள் கடுமையாக எதிர்த்தனர். இதன் காரணமாக 1978 முதல் புயலுக்கு பெயர் சூட்டுவதில் ஆண்களின் பெயர்களும் இடம்பெற்றன.

வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயலுக்கு பெயர் வைக்கும் நடைமுறையானது 2000 ஆம் ஆண்டிலேயே தொடங்கியது. குறிப்பாக டெல்லியில் உள்ள உலக வானியல் அமைப்பின் மண்டலத்தின் சிறப்பு வானிலை மையமானது 2004 செப்டம்பரில் இருந்து புயலுக்கு பெயர் வைக்க 64 பெயர்களைக் கொண்ட ஒரு பட்டியலை வெளியிட்டது.

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், ஓமான், மியான்மர், மாலைதீவுகள், தாய்லாந்து, வங்கதேசம் ஆகிய நாடுகள் இந்த பெயர்களை வழங்கியுள்ளன. புயலுக்கு எண் கொடுப்பதால் ஏற்படும் குழப்பம் இதன் மூலம் தவிர்க்கப்பட்டது.

புயலுக்குப் பெயர் சூட்டப்படும் போது பெயர்கள் சுருக்கமாக இருக்க வேண்டும் என்பது கருத்திற் கொள்ளப்படுகின்றது.

ஒவ்வொரு புயலுக்கும் தனி தனி பெயர்கள் சூட்டுவதன் நோக்கம் வானிலை ஆய்வாளர்கள், பொதுமக்கள், மாலிமிகள் போன்றோர் வானிலை எச்சரிக்கையினை புரிந்து கொண்டு செயல்படவும், ஞாபகத்தில் வைத்துக் கொள்வதற்குமே ஆகும்.

மேலும் ஆபத்துக்கள் பற்றிய விழிப்புணர்வு, பாதுகாப்பு போன்றவற்றை மேற்கொள்வதற்கும் புயலின் பெயர் உதவியாக இருக்கும்.

You May Also Like:

புவிசார் குறியீடு என்றால் என்ன

சப்ஜா விதை நன்மைகள்