இந்த உலகமானது அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கு ஏற்ற கோளாக இயற்கையால் படைக்கப்பட்டுள்ளது. அத்தகைய பூமியில் மனித வர்க்கம் தோன்றிய காலம் முதல் இன்று வரை மனித சமூகத்தில் செல்வாக்கு செலுத்தும் பிரதானமான அம்சமாகப் பொருளாதாரம் திகழ்கின்றது.
பொருளாதாரத்தின் கட்டமைப்பு
ஒரு நாட்டினுடைய பொருளாதாரமானது அதன் புவியியல், வரலாறு, சட்டங்கள், கலாசாரம், அரசியல் நிர்வாக முறைமை போன்ற இன்னும் பல பிற காரணிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றது. மனிதனுக்கு தேவையான யாவற்றினதும் உற்பத்தி, நுகர்வு ஆகிய இரு அம்சங்களை ஆதாரமாக வைத்தே இந்த பூமி இயங்குகிறது.
பொருளாதாரத்தின் அடிப்படையில் இந்த பூமியில் இலவசம் என்று எதுவும் கிடைப்பதில்லை.
எல்லா பொருட்கள், உணவுகள், உடைகள் போன்ற அனைத்தும் கஷ்டப்பட்டு கடினமான முறையில் உற்பத்தி செய்யப்பட்டு அதற்கான உரிய விலை நிர்ணயம் செய்யப்பட்டு, விற்கப்பட்டு, வழங்கப்பட்டு அதன் பின்னரே அது பல விதங்களில் விநியோகிக்கப்பட்டு மக்களைச் சென்றடைகின்றது.
மனித வர்க்கத்திற்கும் பொருளாதாரத்திற்கும் இடையிலான தொடர்பு
குறிப்பாக பொருளாதாரம் என்பதன் யதார்த்தமான அடிப்படைத் தத்துவமே செல்வத்தை திரட்டுதல் என்பது ஆகும். ஏனெனில் பொருளாதாரத்தின் நோக்கம் என்னவென்பது இந்த உலகத்தின் வளங்கள் குறைவாக காணப்படுகின்றமையாலும் மனிதனுடைய தேவைகள் மிகமிக அதிகமாகவும் காணப்படுதல் ஆகும்.
இன்னும் விளக்கமாக கூறுவதாயின் ஏற்படுகின்ற பொருளாதார பிரச்சனைகள் எல்லாவற்றையும் தகர்த்தெறிந்து ஒரு நாட்டின் வருமானத்தை உயர்த்துவது ஆகும்.
நாம் செலவு செய்யும் பணமே இன்னொரு மனிதனுடைய வருமானமாக மாற்றம் பெறுகின்றது. இது ஆங்கிலத்தில் One man expenditure another man income என கூறப்படுகின்றது. அதுமட்டுமல்லாமல் ஒரு நாட்டின் செலவீனமே இன்னொரு நாட்டிற்கு வருமானமாக மாறுகின்றது.
மேலும் இவ்வாறு ஒன்றுக்கொன்று சுயநலம் சார்ந்ததாகவும் அத்தகைய விடயங்களைப் பற்றி பொருளாதாரம் கூறுவதால் பொருளாதாரத்துறை அந்த துறை சார்ந்த அறிஞர்களால் இருண்ட அறிவியல் என அழைக்கப்படுகின்றது.
இன்றும் உலகில் உள்ள அனைத்து நாடுகளும் பொருளாதாரத்தை அடிப்படையாக வைத்தே வகைப்படுத்தப்படுள்ளன. வல்லரசு நாடுகள், வளரும் நாடுகள், வளர்ந்து வரும் நாடுகள், வறுமையில் வாடும் நாடுகள் என அபிவிருத்தியை அந்த நாடுகள் பொருளாதாரத்தை எவ்வாறு சரியான விதத்தில் கையாண்டு தங்களது நாடுகளுக்கு வருமானம், செல்வத்தை சேர்த்தமையினால் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
பொருளாதாரம் என்றால் என்ன
பொருட்களினுடைய உற்பத்தி, விநியோகம், அத்துடன் பயன்பாடுகள் குறித்ததே பொருளாதாரம் என அழைக்கப்படுகின்றது. முந்தைய காலத்தில் அரசியல் பொருளாதாரமாக அழைக்கப்பட்ட போதும் 19ம் நூற்றாண்டில் ஆல்பிரட் மார்ஷல் அவர்களினால் பொருளாதாரம் / பொருளியல் என மாற்றம் செய்யப்பட்டது.
மேலும் சர்வதேச நாடுகளில் இடம்பெறும் உற்பத்தி முறைகள், விநியோகங்கள், கொடுக்கல் வால்கல்கள், நுகர்ச்சிகள், சேமிப்புகள் போன்ற எல்லா நடவடிக்கைகளையும் கொண்டு மேற்கொள்ளும் செயற்பாடே பொருளாதாரம் ஆகும்.
பொருளாதார வகைகள்
பொருளாதாரமானது பிரதானமாக இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தன்னிறைவுப் பொருளாதாரம், முறையற்ற பொருளாதாரம் என்பனவே அவையாகும்.
எல்லோருக்கும் சிறப்பானதொரு வளமான வருமானத்தை வழங்குவது தன்னிறவுப் பொருளாதாரம் ஆகும். தன்னிறைவுப் பொருளாதாரத்தில் பல நன்மைகள் கிடைக்கின்றன. நாட்டில் கடன் தொல்லைகள், நிதிப் பற்றாக்குறை போன்ற பிரச்சனைகள் குறைவாக இருக்கும்.
You May Also Like: