உடல் ஆரோக்கியத்தை போலவே மன ஆரோக்கியமும் இன்றியமையாதவொன்றாக காணப்படுகின்றது. மனநலமே ஒருவர் தங்களை தாங்களே ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள கூடிய ஒரு சொத்தாக காணப்படுகின்றது.
மனநலம் என்றால் என்ன
மனநலம் என்பது மன அழுத்தம் இல்லாமல் காணப்படுவதே மனநலமாகும். அதாவது உளவியல் நல்வாழ்வின் நிலையையும் மனநோய் இல்லாத நிலையினையும் சுட்டுவதாக மனநலமானது காணப்படுகின்றது. மனநலமானது மன ஆரோக்கியத்தை குறித்து நிற்கின்றது.
மனநலத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள்
மனம் விட்டு பேசுதல் ஒரு சிறந்த மனநலத்துடன் காணப்பட வேண்டுமாயின் மனம் விட்டு பேசுவதென்பது மிக முக்கியமானதொன்றாகும்.
அதாவது சில பிரச்சினைகள் மற்றும் சூழல்கள் எம்மை மன ரீதியான பல சிக்கலான தன்மைக்கு கொண்டு செல்ல கூடியதாக காணப்படும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் மனம் விட்டு பேசுவதானது எமது மன ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.
எப்பொழுதும் நேர்மறையான சிந்தனைகளுடன் காணப்படல் வேண்டும். இதன் மூலமாக எமது மனநலமானது ஆரோக்கியமானதாக காணப்படும்.
சிறந்த தூக்கம் என்பது மனநலத்தில் மிக முக்கிய பங்கினை வகிக்க கூடியதாக காணப்படுகின்றது. அதாவது தூக்கமின்மையானது மனநலத்தை பாதிக்க கூடிய ஒரு காரணியாக காணப்படுகின்றது. எனவே சிறந்த தூக்கமானது மனநலத்தை மேம்படுத்துவதற்கு துணைபுரியும்.
சிறந்த முறையில் ஓய்வினை எடுத்து கொள்தல் என்பது மனநலத்தில் மிக முக்கியமான ஒரு வழிமுறையாகும். அதாவது மன அழுத்தமானது ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில் யோகாசனம் போன்றவற்றை பின்பற்றுவதன் மூலமாக சிறந்த மன ஆரோக்கியத்தை பெற்று கொள்ள முடியும்.
உடற்பயிற்சி செய்வதன் மூலமாக மனமும் உடலும் ஒரு ஊக்கத்தை பெறுகின்றது. அதாவது உடற்பயிற்சி செய்வதனூடாக மகிழ்ச்சியான ஹார்மோன்களை வெளிப்படுத்துகின்றது.
இது மனதிற்கும் உடலுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது. மேற்குறிப்பிட்ட செயற்பாடுகளை மேற்கொள்வதன் ஊடாக ஆரோக்கியமான மனநலத்திற்கு வழிவகுக்கும்.
மனநல பாதிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்
மூளையே மனதின் இருப்பிடமாக காணப்படுகின்றது. எனவே அது பாதிப்படைகின்ற போது மனநல பாதிப்பானது ஏற்படுகின்றது. எனவே இவ்வாறான மனநல பாதிப்பு ஏற்படுவதற்கான காரணங்களை பின்வருமாறு நோக்கலாம்.
உடலியல் காரணிகள்
மரபியல் காரணங்கள் அதாவது மரபியல் ரீதியான உடலியல் சார்ந்த காரணங்களாலும் மனநல பாதிப்பானது ஏற்படுகின்றது.
மூளையில் இரசாயன மாற்றங்கள் ஏற்படுதல், மூளையில் கட்டி ஏற்படுதல், இரத்த ஓட்டத்தின் பாதிப்பு போன்றவற்றை குறிப்பிடலாம்.
இரத்தத்தில் அதிக அளவில் நச்சுப் பொருள்கள் இருப்பதன் காரணமாக ஏற்படல், ஊட்டச்சத்து குறைபாடு போன்றவையாகும்.
உளவியல் காரணங்கள்
மாறுபட்ட குணாதிசயங்களை கொண்டிருத்தல். அதாவது வழக்கத்திற்கு மாற்றமான சில பண்புகளை கொண்டு காணப்படுவதாகும்.
மன அழுத்தம், குறைவான மன நோய் எதிர்ப்பு சக்தி, முறையற்ற குழந்தை வளர்ப்பு, கசப்பான குழந்தைப் பருவம் மற்றும் விடலை பருவ அனுபவங்கள்.
சமூகவியல் காரணங்கள்
குடும்ப ரீதியான பிரச்சினைகள் ஒருவருடைய மனநல பாதிப்பில் பாரிய தாக்கத்தினை செலுத்துகின்றது.
குடி மற்றும் போதை பழக்கவழக்கம்.
ஏமாற்றங்களை தாங்கி கொள்ள முடியாத மனநிலை.
மனப் போராட்டத்திற்கு விடை காண முடியாமை.
இன்றைய காலகட்டத்தில் மனநலம்
இன்றைய கால கட்டத்தில் மனிதனானவன் மனநலத்தோடு காணப்படுவதானது மிகவும் அரிதாகவே காணப்படுகின்றது. அதாவது மனதினை சிறப்பாக வைத்திருப்பது என்பது மிக இன்று முடியாத ஒரு செயலாகவே காணப்படுகின்றது.
ஏனெனில் ஓய்வின்றி பணம் ஈட்டுவதற்கான வழிகளிலேயே காலத்தினை கொண்டு செல்கின்றார்களே தவிர மனநிம்மதி என்பது மிகவும் அரிதாகவே இன்றைய சமூதாயத்தினரிடம் காணப்படுகின்றது.
எனவே மனநலத்தினை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இதனூடாக ஆரோக்கியமான சிறந்த வாழ்க்கையை பெற்றுக் கொள்ள முடியும்.
You May Also Like: