வேட்கை பத்து என்றால் என்ன

vetkai paththu enral enna

ஐங்குறு நூறில் இடம் பெறும் செய்யுளே வேட்கை பத்தாகும்.

வேட்கை பத்து என்றால் என்ன

வேட்கை என்பது விருப்பத்தினையும் பத்து என்பது பத்து பாடல்களையும் குறிப்பிடுகின்றது. இந்த அடிப்படையில் அமைந்த பத்து பாடல்களின் தொகுப்பாக வேட்கை பத்து காணப்படுகின்றது.

வேட்கை பத்து பாடலடிகளும் விளக்கமும்

வாழி ஆதன் வாழி அவினி!
நெல் பல பொலிக! பொன் பெரிது சிறக்க!
என் வேட்டோளே, யாயே : யாமே
நனைய காஞ்சிச் சினைய சிறு மீன்
யாணர் ஊரன் வாழ்க!
பாணனும் வாழ்க! என் வேட்டேமே

விளக்கம்: தலை மகளானவள் நெல்லின் விளைச்சலானது பெருகி பொன் வளம் சிறக்க வேண்டும் என வேண்டிக் கொள்கின்றாள். ஆனால் அவளோ தன் கணவனும் அவனை பாதுகாத்து கொள்ளும் பாணனும் நலமுடன் வாழ வேண்டும் என்று வேண்டிக் கொண்டான் என்பதினூடாக ஊரின் சிறப்பு மற்றும் கணவனின் மீதுள்ள பற்றினையும் சுட்டிக் காட்டுகின்றது.


வாழி ஆதன் வாழி அவினி!
விளைக வயலே! வருக இரவலர்!
என வேட்டோளே, யாயே : யாமே,
பல் இதழ் நீல மொடு நெய்தல் நிகர்க்கும்
தண் துறை ஊரன் கேண்மை வழி வழிச்
சிறக்க! என வேட்டேமே

விளக்கம்: விளைச்சலானது பெருகி அதனை தான் வழங்க இரவலர்கள் மிகுதியாக வர வேண்டும் என வேண்டிக் கொள்கிறாள். ஆனால் மகளோ கணவனுக்கும் எனக்கும் உள்ள நட்புறவானது என்றுமே தொடர வேண்டும் என வேண்டிக் கொள்கின்றாள்.


வாழி ஆதன், வாழி அவினி!
பால் பல ஊறுக! பகடு பல சிறக்க!
என் வேட்டோளே யாயே : யாமே,
வித்திய உழவர் நெல்லொடு பெயரும்,
பூக் கஞல் ஊரன் தன் மனை
வாழ்க்கை பொலிக! என வேட்டேமே

விளக்கம்: பசு பால் ஊற வேண்டும் உழும் எருதுகள் பெருக வேண்டும் என தலை மகள் வேண்டிக் கொள்கிறாள் ஆனால் கணவன் வாழ்க்கை பொழிவுற வேண்டும் என மகளே வேண்டுகின்றாள்.


வாழி ஆதன் வாழி அவினி!
பகைவர் புல் ஆர்க! பார்ப்பார் ஓதுக!
என வேட்டோளே யாயே : யாமே,
பூத்த கரும்பின் காய்த்த நெல்லின்,
கழனி ஊரன் மார்பு
பழனம் ஆகற்க! என வேட்டேமே

விளக்கம்: பகைவர் இறந்து பார்ப்பார் ஓதித் தரும் புல்லுணவை உண்ண வேண்டும் என தலை மகள் வேண்டுகிறாள், மகளானவள் தன் கணவன் மார்பு தனக்கு பழையதாக மாறக் கூடாது என வேண்டுகிறாள்.


வாழி ஆதன் வாழி அவினி
பசி இல்லாகுக! பிணி சேண் நீங்குக!
என வேட்டோளே யாயே : யாமே
முதலைப் போத்து முழு மீன் ஆரும்
துன் துறை ஊரன் தேர் எம்
முன் கடை நிற்க என வேட்டேமே

விளக்கம்: பசி, பிணி போன்றவை இல்லாது காணப்பட வேண்டும். என்று வேண்டுவதோடு மகளோ, தன் ஊரனின் தேர் ஊர்தி எப்போதும் தன் இல்லத்தின் முன்னர் நிற்க வேண்டும் என வேண்டி கொள்கின்றான்.


வாழி ஆதன் வாழி அவினி!
வேத்து பகை தணிக!
யாண்டு பல நந்துக!
என வேட்டோளே யாயே : யாமே
மலர்ந்த பொய்கை, முகைந்த தாமரைத்
தண் துறை ஊரன் வரைக!
எந்தையும் கொடுக்க! என வேட்டேமே

விளக்கம்: வேந்தனானவன் பகை உள்ளம் தணிந்து வாழ வேண்டும் என வேண்டிக் கொள்கிறான் தன் ஊரன் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும், தன் தந்தை தன்னை தன் ஊரனுக்கு தர வேண்டும் என தலைவி வேண்டி கொள்கிறாள்.


வாழி ஆதன் வாழி அவினி!
அறம் நனி சிறக்க அல்லது கெடுக!
என வேட்டோளே யாயே : யாமே
உளைப்பூ மருத்துக் கிளைக்குருகு
இருக்கும்
தண் துறை ஊரன் தன் ஊர்க்
கொண்டனன் செல்க என வேட்டேமே

விளக்கம்: ஊரில் அறம் சிறக்க வேண்டும். அறமல்லாத மறம் இருக்க கூடாது என வேண்டிக் கொள்கிறான். மகனானவர் தன் ஊரன் அவன் ஊருக்கு தன்னை கொண்டு செல்ல வேண்டும் என வேண்டிக் கொள்கிறாள்.


வாழி ஆதன் வாழி அவினி!
அரசு முறை செய்க! களவு இல்லாகுக!
என வேட்டோளே யாயே : யாமே,
அலங்குசினை மாஅத்து அணி மயில் இருக்கும்
பூக் கஞல் ஊரன் சூள் இவண்
வாய்ப்பதாக! என வேட்டேமே

விளக்கம்: அரசனானவன் நடு நிலையோடு தீர்ப்பினை வழங்க வேண்டும், திருட்டு இருக்க கூடாது என தலை மகள் வேண்டுகிறாள். மகள் தன் ஊரன் தன்னை பிரிய மாட்டேன் என சூளுரைத்தானே அது பலிக்க வேண்டும் என வேண்டகிறான்.


வாழி ஆதன் வாழி அவினி
நன்று பெரிது சிறக்க! தீது இல்லாகுக!
என வேட்டோளே யாயே : யாமே,
கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும்
தண் துறை ஊரன் கேண்மை
அம்பல் ஆ கற்க என வேட்டமே

விளக்கம்: நல்லவையே நடக்க வேண்டும் என தலை மகள் வேண்டுவதோடு மகளோ தன் ஊரனுக்கும் தனக்குமுள்ள நட்பு ஊருக்கு தெரிய கூடாது என வேண்டுகிறாள்.


வாழி ஆதன் வாழி அவினி
மாரி வாய்க்க! வளம் நனி சிறக்க!
என வேட்டோளே, யாயே : யாமே
பூத்த மாஅத்து புலால் அம் சிறு மீன்,
தண்துறை ஊரன் தன்னொடு
கொண்டனன் செல்க என வேட்டேமே

விளக்கம்: தலை மகளானவள் மழை பொழிந்து வளமாக இருக்க வேண்டும் என வேண்டுவதோடு ஊரன் தன்னோடு தன்னை அழைத்து செல்ல வேண்டும் என மகள் வேண்டி கொள்கின்றாள்.


You May Also Like:

கலைத்திட்ட முகாமைத்துவம் என்றால் என்ன

செவியறிவுறூஉ என்றால் என்ன