7 வள்ளல்கள் பெயர்கள் மற்றும் சிறப்புகள்

7 vallalgal in tamil

சங்ககால இலக்கியமான பத்துப் பாட்டில் மூன்றாம் பாடலான சிறுபாணாற்றுப் படையைப் பாடிய நல்லூர் நாத்தனார் ஏழு வள்ளல்கள் பற்றியும் சிறப்பாக பாடியுள்ளார்.

7 வள்ளல்கள் பெயர்கள்

  1. பேகன்
  2. பாரி
  3. காரி
  4. ஆய்
  5. அதியமான்
  6. நள்ளி
  7. ஓரி

7 வள்ளல்கள் பெயர்கள் மற்றும் சிறப்புகள்

1. பேகன்

பேகன் என்பவர் பொதினி மலையின் தலைவன் ஆவான். தற்போது இந்த இடத்தினை பழனிமலை என்று அழைக்கின்றனர். இவர் சிறந்த கொடையாளி ஆவார். மழை வளம் மிக்க அந்த மலை காட்டில் மயில்கள் திரிந்து கொண்டிருந்தது.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் பேகனானவன் மழை பொழியும் மலை சாரல் பாதையில் சென்று கொண்டிருந்த போது மயில் ஆடிக் கொண்டிருந்தது.

மயில் குளிரால் நடுங்குகிறது என்று எண்ணி போர்வையை அதன் மீது போர்த்தி விட்டவன். இதன் காரணமாக மயிலிக்கு போர்வையளித்த வள்ளல் என்று பேகன் மன்னனுடைய சிறப்பானது போற்றப்படுகிறது.

2. பாரி

பாரி என்பவர் பறம்பு மலையை ஆண்ட குறுநில மன்னராவார். இவரை வேள் பாரி என்றும் அழைக்கின்றனர். பாரியின் பறம்பு நாடானது 300 ஊர்களை கொண்டதொரு பகுதியாக காணப்படுகிறது.

வள்ளல்களில் சிறந்த வள்ளலாக பாரி மன்னன் திகழ்கின்றார். இவர் சென்ற வழியில் தம் தேரை தடுத்த முல்லைக் கொடி தேரை விரும்பியதாக கருதி அது படர்வதற்கு தனது பெரிய தேரினையே அளித்த வள்ளலாவார்.

3. காரி

திருக்கோயிலூரை தலைநகராக கொண்டு மலாட்டை ஆட்சி புரிந்தவர் காரி ஆவார். அதாவது திருக்கோயிலூர்க்கு மேற்கே தென்பெண்ணையாற்றின் தென்கரை அடங்கிய பகுதியே மலாடு ஆகும். இவர் மலையமான் திருமுடிக் காரி என்றும் மலையமான் என்றும் கோவற் கோமான் என்றும் அழைக்கப்படும் வள்ளலாக திகழ்கின்றார்.

இவர் கொடை கேட்டு வருபவர்களிடம் எப்போதும் அருள் நிறைந்த சொற்களை பேசும் இயல்புடையவர் ஆவார்.

தலையாட்டம் என்ற அணியைத் தலையிலும் ஒலிக்கும் மணியை கழுத்திலும் அணிந்து ஆடுகின்ற குதிரையையும் மற்றும் ஏனைய செல்வங்களையும் இனிய மொழிகளுடன் கொடை கேட்டு வந்தவர்களுக்கு இல்லை என்று கூறாது வழங்கினான்.

காரியை போற்றி பாராட்டிப் புலவர்களான கபிலர், பெருஞ்சாத்தனார் ஆகியோர் பாடிய பாடல்கள் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது.

4. ஆய்

பொதிய மலையை ஆட்சி செய்த மன்னனே ஆய் ஆவார். இவர் வேந்தனாகிய தான் மட்டும் சமதளப்பரப்பில் வாழ்ந்தால் போதாது தன்னுடைய மக்களும் வாழ வேண்டும் என்று எண்ணி அரண்மணையை சுற்றி ஊரை உருவாக்கினான்.

அவ்வாறு உருவாக்கிய ஊரே ஆய்க்குடி ஆகும். கிடைத்ததற்கு அரிய நீல நாகத்தின் ஆடையை குற்றாலத்தில் உள்ள தென்முகக் கடவுள் சிலை ஆடை இல்லாமலிருப்பதை கண்டு அந்த சிலைக்கு போர்த்தி மகிழ்ந்த கொடை வள்ளல் ஆவார்.

5. அதியமான்

அதியமானை அதிகன், அதியமான், தெருமான் அஞ்சி, அஞ்சி என பல பெயர்களில் அழைக்கின்றனர். இவர் தகடூரை தலை நகராக கொண்டு ஆட்சி செய்த குறுநில மன்னராவார்.

பூஞ்சாரல் மலைப் பகுதியில் பழுத்திருந்த நீண்ட ஆயுள் தரும் நெல்லிக்கனி அதியமானுக்கு கிடைத்த போது அதை தான் உண்ணாமல் ஒளவையாரின் சேவை கருதி அவருக்கு ஈந்தான் என்பதினூடாக இவரது சிறப்பு போற்றப்படுகின்றது.

6. நள்ளி

அதிக மலைகள் கொண்ட கண்டீர நாட்டினராவார். இவரை நளிமலை நாடன் என்றும் கண்டீர கோப்பெரு நள்ளி என்றும் அழைக்கின்றனர். இவர் தன்னை விரும்பி வந்தவர்க்கு எல்லாம் கொடை அளித்தார். நள்ளியை போற்றி பாராட்டி வள்பரணர் பாடிய பாடல்களை புறநானூற்றில் காணமுடியும்.

7. ஓரி

ஓரியிடன் வரும் இசை வாணர்களுக்கு யானைகளை பரிசாக அளித்தான். பொற்பூ முதலிய பிற அணிகலன்களையும் அளித்தான்.

வறுமையில் வாடிய பாணர்களுக்கு விருந்துணவு அளித்து அவர்களது பசியையும் போக்கிய வள்ளலாக காணப்படுவதோடு கொல்லி மலை கலைஞர்களுக்கு தனது நாட்டை பரிசளித்தார் என்பதினூடாக இவரது கொடை சிறப்பானது விளக்கப்படுகிறது.

You May Also Like:

பாரதத்தின் சிறப்பு கட்டுரை

தமிழின் முதல் கள ஆய்வு நூல்