ஒரு நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றும் ஒரு துறையாக விவசாயம் காணப்படுகின்றது. அனைவருடைய உணவுத் தேவையையும் நிவர்த்தி செய்யக்கூடியதாகவே திகழ்கின்றது என்ற வகையில் இந்திய மண்ணின் முதுகெழும்பாக விவசாயமே சிறப்பிடம் பெற்று விளங்குகின்றது.
இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- இந்தியாவும் விவசாயமும்
- விவசாயத்தின் முக்கியத்துவம்
- இந்திய பொருளாதார வளர்ச்சியில் விவசாயம்
- சுதந்திரத்திற்கு பின்னரான இந்திய விவசாயம்
- முடிவுரை
முன்னுரை
விவசாயி ஒருவர் சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்பதற்கிணங்க எமது அடிப்படைத்தேவையை பூர்த்தி செய்வதே விவசாயமாகும்.
அதாவது இந்தியாவானது விளை நில உற்பத்தியில் உலகளவில் இரண்டாவது இடத்தில் காணப்படுகின்றது. இந்தியாவின் சமூகப் பொருளாதாரத்தில் பெரும்பங்கினை விவசாயமே வகிக்கின்றமை சிறப்பிற்குரியதாகும்.
இந்தியாவும் விவசாயமும்
இந்தியாவில் இன்று பொருளாதாரத்தை ஈட்டும் துறைகளுள் ஒன்றாக விவசாயம் காணப்படுகின்றது.
அதாவது பால், தோங்காய், தேயிலை, முந்திரி, மஞ்சள், கருமிலகு என உலகிலேயே அதிகமாக உற்பத்தி செய்யும் ஓர் நாடாக இந்தியா திகழ்கின்றது.
அதேபோன்று இந்தியாவானது சர்க்கரை, நிலக்கடலை, கோதுமை, அரிசி போன்றவற்றை உற்பத்தி செய்கின்ற நாடுகளின் வரிசையில் இரண்டாவதாக காணப்படுகின்றமையானது இந்தியாவின் முதுகெழும்பு விவசாயம் என்பதனை எடுத்துக்காட்டுகின்றது.
விவசாயத்தின் முக்கியத்துவம்
இந்திய பொருளாதாரத்தின் முதுகெழும்பாக விவசாயமே மக்களுடைய அடிப்படை தேவைகளான உணவுகளை உற்பத்தி செய்து நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது.
அதேபோன்று விவசாயமானது அந்நிய செலவாணியை ஈட்டித்தருவதில் முக்கிய பங்கினை ஆற்றுகின்றது.
மேலும் உற்பத்தி திறனை அதிகரித்து மக்களுடைய பசியை போக்குவதாகவே விவசாயமானது காணப்படுகின்றதோடு மக்களின் வாழ்க்கை தரத்தை சிறந்த முறையில் கொண்டு செல்வதில் முக்கியத்துவமிக்கதாகவும் திகழ்கின்றது.
இந்திய பொருளாதார வளர்ச்சியில் விவசாயம்
இந்தியாவில் மிகவும் முக்கியத்துவமிக்கதொரு தொழிலாகவே விவசாயம் காணப்படுகின்றது.
வெளிநாட்டு வாணிபத்தில் பெரும் பங்கினை வகிப்பதோடு நாட்டின் வருமானத்தை ஈட்டித்தரும் ஒரு துறையாகவும் விவசாயம் திகழ்கின்றது. மேலும் உள்நாட்டு உற்பத்திகளில் மக்களால் அதிகளவில் விவசாய உற்பத்திகளே மேற்கொள்ளப்படுவது விவசாயத்திற்கு இருக்கும் முக்கியத்துவத்தினை எடுத்துக்கூறுகின்றது.
வறுமையை ஒழித்து மக்களின் வாழ்க்கையை மட்டுமின்றி நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதிலும் அளப்பரிய பங்கினை விவசாயம் பெற்று வருகின்றது.
சுதந்திரத்திற்கு பின்னரான இந்திய விவசாயம்
இந்திய நாடானது சுதந்திரம் பெற்றதன் பின்னர் விவசாயமானது ஒரு தேக்க நிலையிலையே காணப்பட்டது. இத்தகையதொரு சூழலில் விவசாய துறைக்கு அடித்தளமிட்டவரே நேரு அவர்கள் ஆவார்.
இதன் பின்னரே இந்திய மண்ணில் விவசாய கல்வி, விவசாய ஆராய்ச்சி என பல்வேறுபட்ட வகையில் விவசாயத் துறையின் வளர்ச்சியானது இடம்பெற்றது. அந்த வகையில் பிரதமர் நேருவின் ஐந்தாண்டு திட்டத்தில் ஒன்றே உணவு பற்றாக்குறையை நீக்கி விவசாயம் மற்றும் நீர்பாசன துறைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டமையாகும்.
இதன் பின்னரே அதிக முதலீடு, கால்நடை வளர்ப்பு, உரம், உற்பத்தி திறன் அதிகரித்தல், சாகுபடி நிலப்பெருக்கம் என விவசாயமானது வளர்ச்சியினை கண்டு வந்தது. இன்றுவரை விவசாயமே இந்திய மண்ணின் சிறந்த தொழிலாக காணப்படுகின்றது என்பது சிறப்பிற்குரியதாகும்.
முடிவுரை
நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பங்களிப்பினை செய்து வரும் தொழிலாக விவசாயமே காணப்படுகின்றது என்றடிப்படையில் விவசாயத்துறையின் வளர்ச்சிக்கு அனைவரும் பங்களிப்பதோடு மட்டுமல்லாது விவசாயிகளை மதித்து நடத்தலும் அவசியமாகும்.
You May Also Like: