மருத்துவப் பணி கட்டுரை

maruthuva pani katturai in tamil

எமது உடல் நலனை காப்பதில் பாரிய பங்களிப்பை செய்வதே மருத்துவமாகும். அந்த வகையில் இன்று காணப்படும் பல்லாயிரக்கணக்கான நோய்களை குணப்படுத்துவதை நோக்காக கொண்டே மருத்துவ துறையானது தனது பணியினை மேற்கொண்டு வருகின்றது.

மருத்துவப் பணி கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • மருத்துவத்தின் தோற்றம்
  • மருத்துவ துறையின் வளர்ச்சி
  • முக்கியத்துவமிக்க மருத்துவ பணி
  • இன்றைய காலகட்டத்தில் மருத்துவ கல்வி
  • முடிவுரை

முன்னுரை

நவீன உலகின் பல்வேறு செயற்பாடுகளின் காரணமாக இன்று மனிதனானவன் இலகுவாக நோய்களுக்கு உட்பட்டு வருகின்றான். இத்தகையதொரு சூழலில் மருத்துவத்தின் தேவை அவசியமானதொன்றாக காணப்படுகின்றது.

உடலில் ஏற்படும் நோய்களை கண்டறிந்து நோய் தீர்க்கும் பணியை மருத்துவத்தினூடாக மேற்கொள்ள முடிகின்றது.

மருத்துவத்தின் தோற்றம்

பண்டைய காலங்களில் பெருவாரியாக நோய் ஏற்படுவதானது குறைவாக காணப்பட்டமையால் அக்காலப்பகுதிகளில் மூலிகை செடிகளை பயன்படுத்தி வந்தனர்.

அதாவது தமிழர்கள் தங்களது பாரம்பரிய மருத்துவமாக சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேதத்தினை அடிப்படையாகக் கொண்டே வந்ததோடு பின்னரே ஆங்கில மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவ துறை பெரும் வளர்ச்சி கண்டது.

மேலும் பண்டைய கிரேக்க மருத்துவமானது மரபு வழி சீன மருத்துவத்தை அடியொட்டியதாக காணப்பட்டது.

மருத்துவ துறையின் வளர்ச்சி

ஆரம்பகால கட்டத்தில் மருத்துவமானது இயற்கையோடு ஒன்றியதாக காணப்பட்டதோடு மட்டுமல்லாமல் தொழிநுட்ப கருவிகளின் பயன்பாடும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

அதாவது சத்திரசிகிச்சை உபகரணங்களின் வளர்ச்சியும் பண்டைய காலத்திலேயே காணப்பட்டமை மருத்துவ துறையின் வளர்ச்சியை எடுத்தியம்புகின்றது.

மேலும் மருத்துவ துறையின் பணிகளானது தொற்று நோய்களுக்கான தடுப்பூசிகள், நுரையீரல், இதயம், மூளை என பல்வேறு உறுப்புகளுக்கான சிகிச்சைகளை உள்ளடக்கி வளர்ச்சியடைந்து வருகின்றது.

அதுபோலவே மனிதனை அழிவுக்குட்படுத்தும் புற்றுநோயை கட்டுப்படுத்தும் சிகிச்சை முறைகளும் இன்று இடம்பெற்ற வண்ணமே காணப்படுகின்றது.

உடலினுல் எக்ஸ் கதிர்களை அனுப்பி நோயை கண்டறிவதோடும், இயந்திர மனிதர்களினூடாக அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளல் என பல்வேறு நவீன தொழிநுட்பங்களை உள்வாங்கி மருத்துவ பணியானது இன்று வளர்ச்சியினை கண்டே வருகின்றது.

முக்கியத்துவமிக்க மருத்துவ பணி

ஒவ்வொரு மனிதனினதும் உடலிலுள்ள நோய்களை கண்டறிந்து அவர்களை குணப்படுத்துவதில் பிரதான பங்கினை மருத்துவ பணியே செய்கின்றது.

மனித உயிர்களை காப்பதற்கான ஒரு துறையாக மருத்துவ துறை காணப்படுவதால் மருத்துவ பணியினை மேற்கொள்பவர்களான வைத்தியர், தாதியர் போன்றோர் சமூகத்தில் உயர்ந்த இடத்தில் வைத்து பார்க்கப்படுகின்றார்கள்.

மருத்துவ பணியினை மேற்கொள்பவர்கள் தனது முழு முயற்சியின் ஊடாக சிறந்த பணியினை வழங்குவதில் அர்ப்பணிப்புடனேயே தனது மருத்துவ சேவையை வழங்குகின்றார்கள்.

இன்றைய காலகட்டத்தில் மருத்துவ கல்வி

இன்றைய காலகட்டத்தில் மருத்துவ கல்வியானது பல்வேறு வளர்ச்சியினை கண்டே வருகின்றது. அதாவது மருத்துவ பல்கலைக்கழகங்களானவை கனடா, ஐக்கிய அமெரிக்கா என பல நாடுகளில் பல்வேறு நவீன தொழிநுட்பங்களோடு வளர்ச்சியினை அடைந்து வருகின்றது.

மருத்துவத்துறை மாணவர்கள் தங்களை முழு அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்தியே மருத்துவ கல்வியை பயில்கிறார்கள்.

இன்று கெரோனா போன்ற நோய்களில் இருந்து எம்மை பாதுகாப்பதற்காக அரும்பாடுபட்டவர்கள் மருத்துவர்களே எனவேதான் மருத்துவக்கல்வியை விரிவுபடுத்துவதோடு மட்டுமல்லாமல் சிறந்த மருத்துவ கல்வியையும் அரசாங்கம் வழங்குவதினூடாகவே மருத்துவ பணியானது சிறப்பாக இடம்பெறும்.

முடிவுரை

தனது குடும்பங்கள் மற்றும் சொந்தபந்தங்களை பிரிந்து சமூகத்திற்காக தன்னை அர்பணிப்பவர்களே மருத்துவர்களாவர். இத்தகைய மருத்துவர்கள் ஆற்றும் மருத்துவ பணியானது அளப்பரியதாகவே காணப்படுகின்றது. இத்தகைய மருத்துவர்களை நாம் போற்றுவது எம் அனைவரதும் கடமையாகும்.

You May Also Like:

செவிலியர் பணி கட்டுரை

குழந்தைகள் பாதுகாப்பு கட்டுரை