எமது உடலிலுள்ள நோயை குணப்படுத்தும் ஒரு பொருளாக மருந்தானது காணப்படுகின்றது. அந்த வகையில் நோயை கண்டறியவும் அந்த நோயானது எம்மை வந்தடையாமல் தடுப்பதற்கும் துணை புரிகின்றது.
மருத்துவ துறையின் பிரதான சிகிச்சைகளுள் ஒன்றே மருந்தை பயன்படுத்தி சிகிச்சையளித்தலாகும். இன்று பல்வேறு நோய்களுக்காக பல்வேறு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு நோய்களும் குணப்படுத்தப்பட்டு வருகின்றமை சிறப்பிற்குரியதாகும்.
மருந்து வேறு பெயர்கள்
- ஒளடதம்
- பிணி நீக்கி
மருந்துகளின் வகைகள்
மருந்துகளானவை பல்வேறு வகைகளாக காணப்படுகின்றது. அதாவது வலி நீக்கும் மருந்துகள், உற்சுரப்பி மருந்துகள், சிறுநீரக மருந்துகள், ஒவ்வாமை மருந்துகள், நோய்தடுப்பு மருந்துகள் என பல வகையாக பிரிக்கப்பட்டு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
மருந்துகளின் பயன்பாடு
மருந்துகளின் பயன்களானவை எண்ணிலடங்காதவைகளாக காணப்படுகின்றன. அந்த வகையில் மருந்தானது எமது உடலில் இயங்கி நோய்களையும் நோய்குறைபாடுகளையும் தீர்க்கும் வல்லமை உடையதாகும். அதேபோன்று எமது வலி நீக்கியாகவும், நுண்ணுயிர் எதிர்ப்பியாகவும், காயங்கள் மற்றும் புண்களை குணப்படுத்தக் கூடியதாகவும் திகழ்கின்றது.
You May Also Like: