மின்சாரம் பற்றிய கட்டுரை

minsaram katturai in tamil

மின்சாரம் நமது அன்றாட வாழ்க்கையில் மிகவும் இன்றியமையாத ஒன்றாகவும், தவிர்க்க முடியாத ஒன்றாகவும், மனித வாழ்வியலுடன் இரண்டறக் கலந்தும் விட்டது.

இன்று மின்சாரத்தின் தேவையானது அனைத்துத் துறைகளிலும் அதிகரித்து விட்ட போதிலும், தேவையைப் பூர்த்தி செய்யும் அளவிற்கு மின்சாரத்தின் உற்பத்தி அதிகரிக்கப்படாதது மின்சாரம் மீதான சவாலை ஏற்படுத்தியுள்ளது.

மின்சாரம் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • மின்சாரம் – பொருள்
  • மின்சாரத்தின் அவசியம்
  • மின்சாரத்தின் பயன்கள்
  • மின்சாரம் வீணடிப்பு
  • மின்சாரத்தைச் சேமிக்கும் வழிகள்
  • முடிவுரை

மின்சாரம் – பொருள்

எலக்ட்ரிக் என்ற சொல் கிரேக்க மொழியான எலக்ட்ரான் என்பதிலிருந்து தோன்றியதாகும். இது ஆங்கிலத்தில் Electricity எனவும் அழைக்கப்படுகிறது.

மின்சாரம் என்பது ஆற்றலின் ஒரு வடிவம் எனச் சுருக்கமாக வரையறுக்கலாம். மேலும் மின்சாரம் எனப்படுவது மின்னணுக்களின் ஓட்டத்தால் உருவாகும் ஒரு நிகழ்வாகும்.

மின்சாரத்தின் அவசியம்

நமது அன்றாட வாழ்வியல் தேவைகளுக்கு மின்சாரம் என்பது மிக மிக அவசியமாகும். வீட்டில் சமையல் உபகரணங்களை பயன்படுத்துவதற்கும், வீட்டை ஒளிமயமாக வைத்திருப்பதற்கும் மின்சாரமே இன்றியமையாதது ஆகும்.

இன்று அனைத்து விதமான தொழில்துறைகளுக்கும் மின்சாரம் முக்கியமானதாகும். மருத்துவம், பொறியியல், போக்குவரத்து, தொழில்துறை என அனைத்திற்கும் மின்சாரமே இன்றியமையாதது.

மின்சாரத்தின் பயன்கள்

வீட்டிலேயே நாம் இன்று பல உபகரணங்களை பயன்படுத்துகின்றோம் வெளிச்சம் தருகின்ற மின்குழிழ்கள், தொலைக்காட்சிகள், மின்விசிறிகள், குளிர்சாதனப் பெட்டிகள், சலவை இயந்திரங்கள், மின்னழுத்திகள், நீர் இறைக்கும் மோட்டார்கள், மின்சார அடுப்புக்கள், கணினிகள் என பல வகையான மின்சார சாதனங்களை நாம் பயன்படுத்துகின்றோம்.

மின்சாரம் வீணடிப்பு

நாம் நமது தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தினந்தோறும் அதிகளவான மின்சாரத்தை பயன்படுத்துகின்றோம். இதன் காரணமாக மின்சாரம் அதிக அளவில் வீணடித்துக் கொண்டிருக்கின்றோம்.

நாம் பயன்படுத்தும் மின்சார சாதனங்களை பயன்படுத்திய பின் அதனை நிறுத்தாமல் விடுவது, தேவையற்ற மின் சாதனங்களை பயன்படுத்துவது இதனால் மின்சாரமானது வீணாகின்றது.

ஆதிகாலத்தில் நெருப்பு மனிதனுக்கு வெளிச்சமாக இருந்தது. தற்காலத்தில் மின்சாரம் வெளிச்சமாக இருக்கின்றது. இவ்வுலகத்தின் இருளை மின்சாரம் போக்குகின்றது. எனவே மின்சாரம் இல்லையெனில் உலகமே இயங்காது எனலாம்.

மின்சாரத்தைச் சேமிக்கும் வழிகள்

மின்சாரத்தின் தேவையானது மனித குலத்திற்கு இன்றியமையாததாக மாறிவிட்டதால் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தி பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்படாது எனவே இப்போதே விழித்துக் கொள்வோம்.

அதிக மின்சாரத்தை பயன்படுத்தும் கருவிகளை தவிர்த்துக் கொள்வதன் மூலம் மின்சாரத்தை சேமித்து கொள்ள முடியும். மின்சார சாதனங்களைப் பயன்படுத்திய பின்பு நிறுத்த வேண்டும். அதிக மின்சாரத்தைப் பயன்படுத்தும் கருவிகளைத் தவிர்த்துக் கொள்வதன் மூலம் மின்சாரத்தைச் சேமிக்கலாம்.

தொலைபேசி மடிக்கணினி போன்றவற்றை சார்ஜ் செய்தவுடன் அதன் பிளக்கை இணைப்பிலிருந்து எடுத்துவிட வேண்டும், மேசை விளக்கினை அறையின் ஓரத்தில் வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் விளக்கின் வெளிச்சம் இருபுறச் சுவர்களிலும் பட்டு பிரகாசமாக எரியும், மின் சிக்கனமும் பேணப்படும்.

முடிவுரை

இன்றைய காலகட்டத்தில் மின்சார உற்பத்திக்கான அதிகளவு எரிபொருட்கள் தகனமடையச் செய்வதனால் அதிக சூழல் சார்ந்த பிரச்சனைகள் உருவாகின்றன. இதனால் அபிவிருத்தியடைந்த நாடுகள் Solar Panel மூலம் மின்சாரங்களை உருவாக்கும் நகரங்களை அதிகளவு உருவாக்கி வருகின்றது சிறப்பாகும்.

இவ்வாறு முன்மாதிரியான வழிமுறைகளை நமது நாடும் பின்பற்ற வேண்டும். அதுமட்டுமல்லாது மக்களாகிய நாமும் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பாவிக்க வேண்டும். அப்போதுதான் எதிர்கால சந்ததியை இருளிலிருந்து பாதுகாக்க முடியும்.

You May Also Like:

மின்புலம் என்றால் என்ன

மின்சாரத்தை கடத்தும் அலோகம் எது