பெரியார் வழியில் கலைஞர் கட்டுரை

periyar valiyil kalaignar katturai in tamil

தந்தை பெரியார் சமூக நலன் பேண செயற்பட்டது மட்டுமல்லாமல் தனது பேச்சாற்றலினால் மக்கள் மனதில் நின்றவர் ஆவார். தந்தை பெரியாரின் வழியில் ஒன்றிணைக்கப்பட்டவராக கலைஞர் திகழ்ந்தது இவர்களது ஒற்றுமையினையே எடுத்தியம்புகின்றது.

பெரியார் வழியில் கலைஞர் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • சுய மரியாதை இயக்கத்தில் இணைந்த கலைஞர்
  • உழவர் உரிமையில் கலைஞரின் பங்கு
  • பெரியாரின் அன்புக்கு பத்திரமானவர்
  • கலைஞரின் இராஜதந்திரத்தை பாராட்டிய பெரியார்
  • முடிவுரை

முன்னுரை

பெரியாரின் கொள்கைகளுள் பிரதானமானதாக சுய மரியாதை இயக்கம் காணப்படுகின்றது என்ற வகையில் இதனோடு தன்னை இணைத்துக் கொண்டு செயற்பட்டவரே கலைஞர் கருணாநிதி ஆவார் என்றடிப்படையில் பெரியாரும் கலைஞரும் சமூகத்திற்காக அரும்பாடுபட்ட மாமனிதர்களாவார்.

சுய மரியாதை இயக்கத்தில் இணைந்த கலைஞர்

தந்தை பெரியாரது கொள்கைகளில் ஒன்றாக காணப்படும் சுய மரியாதை இயக்கமானது பொருளாதார ஏற்றத்தாழ்வு மற்றும் சமூக ஏற்றத்தாழ்வால் சுய மரியாதை பாதிப்படையும் விதத்தை பற்றி பேசுகின்றது.

1925ம் ஆண்டு காங்கிரசை விட்டு பெரியார் வெளியேறிய நாளினையே சுய மரியாதை இயக்க நாளாக திகழ்கின்றது. இத்தகைய சுய மரியாதை இயக்கத்தில் இணைந்து சிறந்த பேச்சாளராகவும், அரசியல் வாதியாகவும் திகழ்ந்வரே கலைஞர் ஆவார்.

1938ம் ஆண்டு கலைஞர் அவர்கள் தந்தை பெரியாருடன் சுயமரியாதை இயக்கத்தில் இணைந்து செயற்பட்டமையானது பெரியாரின் வழியில் கலைஞர் செயற்பட்டமையினையே எடுத்தியம்புகின்றது.

உழவர் உரிமையில் கலைஞரின் பங்கு

பெரியாரின் கொள்கைகளை கடைபிடிப்பவராக கலைஞர் செயற்பட்டார் என்றடிப்படையில் வைக்கம் சத்தியாக்கிராகத்தில் உழவர்களுடைய உரிமையானது நிலை நாட்டப்பட்டதன் பின்னரே ஈரோடு திரும்பியமையானது தான் சொன்னதை திறம்பட செய்யும் பெரியாரின் பண்பினை கொண்டவர் என்பதற்கான சான்றாகும்.

மேலும் கலைஞர் சாதி ஒழிப்பினையும் மேற்கொண்டு வந்தமை கலைஞரது சிறப்பினையே எடுத்துக்காட்டுகின்றது.

பெரியாரின் அன்புக்கு பத்திரமானவர்

கலைஞரானவர் தன்னுடைய கவிதையில் பெரியாரோடு இணைந்து செயற்பட்டமையினை குறிப்பிடுகின்றார்.

அதாவது பெரியார் தலமையினை ஏற்று நானும் அவருடனே ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பத்தெட்டில் ஆருரில் மாணவனாய் இருந்த போதே இணைந்து விட்டேன் என குறிப்பிட்டதோடு தந்தை பெரியாரின் பேரன்புக்கு பத்திரமானவராகவும் திகழ்கின்றார்.

மேலும் புதுவையில் பெரியார் தாக்கப்பட்ட போது உதவியவராக கலைஞர் திகழ்ந்தமையானது பெரியாரின் மீது கலைஞர் கொண்டுள்ள அன்பின் வெளிப்பாடே ஆகும்.

கலைஞரின் இராஜதந்திரத்தை பாராட்டிய பெரியார்

தந்தை பெரியார் கலைஞரை பற்றி குறிப்பிடுகையில் இராஜ தந்திரமிக்கவர் என்றே கூறுகின்றார்.

இந்திய நாட்டின் நேர்மை, ஒழுக்கம் பற்றி மக்கள் கவலைப்படாத போதும் தமிழ்நாட்டின் பிரச்சினைகளை தீர்த்து வைத்து சிறந்த நாடாக வளர்ச்சியடைய துணை நிற்பவரே கலைஞர் கருணாநிதி ஆவார் என்று தந்தை பெரியாரே குறிப்பிடுவதானது பெரியாருக்கும் கலைஞருக்குமிடையிலான ஒற்றுமையின் எடுத்துக்காட்டாகும்.

முடிவுரை

கலைஞர் கருணாநிதி அவர்கள் தந்தை பெரியாரின் வழியில் பல்வேறு கொள்கைகளை கடைபிடித்ததோடு மட்டுமல்லாது பல சமூக சீர்திருத்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளமை சிறப்பிற்குரியதாகும். இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர்களாக பெரியாரும், கலைஞரும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

You May Also Like:

முத்தமிழ் அறிஞர் கலைஞர் பற்றிய கட்டுரை

தொலைநோக்கு சிந்தனையாளர் கலைஞர் கட்டுரை