இன்று போரானது பல நாடுகளுக்கிடையே இடம் பெற்ற வண்ணம் காணப்படுகின்றது. அந்த வகையில் போர் என்பது பன்னாட்டு தொடர்புகள் சார்ந்ததும் நாடுகளின் படைகளிடையே நடைபெறும் ஒழுங்கமைந்த வன்முறைகளால் வெளிப்படுவதுமான பிணக்காகும்.
இன்றைய காலப்பகுதிகளில் உள்நாட்டு போர் மற்றும் வெளிநாட்டு போர் என்பன இடம் பெறுகின்றது என்ற வகையில் போர் என்ற சொல்லானது பல்வேறுபட்ட பெயர்களில் அழைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
போர் வேறு சொல்
- யுத்தம்
- சமர்
- அமர்
- சண்டை
- மோதல்
போர் வகைகள்
போர்களானவை பல்வேறு வகைகளாக இடம் பெற்று வருகின்றன. அந்த வகையில் சமச்சீரற்ற போர், உள்நாட்டு போர், வெளிநாட்டு போர், இணையப் போர், தகவல் போர், அணு ஆயுதப் போர், ஆக்கிரமிப்பு போர் என பல வகைகளாக காணப்படுகின்றன.
போரினால் ஏற்படும் விளைவுகள்
போரானது மனித வாழ்வில் பாரியதொரு பாதிப்பினை ஏற்படுத்தக் கூடிய தொன்றாகவே காணப்படுகின்றது. அந்த வகையில் போரின் காரணமாக சுற்றுச் சூழல் பாதிப்பு, உயிர்ச் சேதம், கல்வி தடைகள், பொருளாதார ரீதியான சிக்கல்கள் போன்றவை இடம் பெறுகின்றன. எனவேதான் மனிதர்களாகிய அனைவரும் போரிற்கு வழிவகுக்காது சிறந்த முறையில் வாழப் பழகிக் கொள்ளல் வேண்டும்.
You May Also Like: