இவ் உலகில் பிறந்த மனிதனோடு கூடப் பிறந்த ஓர் உணர்வின் வெளிப்பாடே சிரிப்பாகும். அந்த வகையில் வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்ற பழமொழி சிரிப்பிற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
சிரிப்பானது எம்மை வலிமைப்படுத்தி புத்துணர்வோடு வைத்திருப்பதற்கு உதவுகின்றது. அதேபோன்று சிரிக்கும் போது எமது உடலில் உள்ள 300 தசைகள் அசைகின்றன.
மேலும் எம்மை ஆட்கொண்டுள்ள மன அழுத்தங்களையும் எம்மை விட்டு விரட்டுவதற்கு சிரிப்பே துணை நிற்கின்றது.
சிரிப்பு வேறு பெயர்கள்
- நகைப்பு
- புன்னகை
- புன் முறுவல்
சிரிப்பின் மருத்துவம்
சிரிப்பானது பல்வேறு வகையில் எம் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கின்றது. அந்த வகையில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்தல், சந்தோச ஓமோன்களை உடலுக்குள் தெளித்தல், இரத்த ஓட்டம் சீர் பெறல், மனதை வலிமைப்படுத்தல், மாரடைப்பை ஏற்படுத்தும் மன அழுத்த வளரூக்கிகளை குறைவடையச் செய்து எமது ஆரோக்கியத்தை பேணுவதாக சிரிப்பானது காணப்படுகின்றது.
சிரிப்பின் வகைகள்
- அசட்டுச் சிரிப்பு
- ஆணவச் சிரிப்பு
- ஏளனச் சிரிப்பு
- சாகசச் சிரிப்பு
- புன் சிரிப்பு
- நையாண்டிச் சிரிப்பு
You May Also Like: