ஆறுமுக நாவலர் கட்டுரை

arumuga navalar katturai tamil

உலகின் தமிழ் மற்றும் சைவம் என்பவற்றை வளர்ப்பதற்காக தமது வாழ்வை அர்ப்பணித்த பெரியவர்களில் ஈழத்தில் வாழ்ந்த ஆறுமுக நாவலர் எனும் பெரியார் முக்கியமானவராக காணப்படுகிறார்.

ஆறுமுக நாவலர் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • பிறப்பு
  • ஆரம்ப வாழ்க்கை
  • சைவசமயப் பணி
  • கல்விப் பணி
  • முடிவுரை

முன்னுரை

இளமையிலேயே புலமை நலம் சிறக்கப் பெற்றுக் காணப்பட்ட ஆறுமுக நாவலரை யாழ்ப்பாணத்து மக்கள் எல்லாம் தம் சமயக்குரவர் என போற்றி வந்தனர்.

இவர் “தமிழ் மற்றும் சமயம் ஆகிய இரண்டும் என் கண்கள். அவை இரண்டும் ஒளி குன்றாமல் இறுதிவரை காத்து பயன் கொள்வதே என் கடன். அவை வாழ பணிபுரிதலே என் வாழ்வின் குறிக்கோள்” என்று வாழ்ந்து பல பணிகளை புரிந்தவராக ஆறுமுகநாவலர் காணப்படுகிறார். இவரது வாழ்க்கை மற்றும் பணிகள் பற்றி இக்கட்டுரையில் ஆராய்வோம்.

பிறப்பு

ஆறுமுக நாவலர் இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் நல்லூரில் வாழ்ந்த கந்தப்பிள்ளை என்பவருக்கும் சிவகாமிக்கும் கடைசி மகனாக 1822 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ம் திகதி பிறந்தார். இவர் மிகச் சிறந்த உரை ஆசான், உரை நடை வல்லான், பதிப்பாசிரியர் ஆவார்.

ஆரம்ப வாழ்க்கை

ஆறுமுகநாவலர் தனது ஐந்தாவது வயதில் தனது கல்வி நடவடிக்கைகளுக்கு அத்திவாரம் இட்டார். சுப்பிரமணிய உபாத்தியாயரிடம் தின்னை பள்ளிக்கூடத்தில் மூதுரை முதலிய நீதி நூல்களையும், நிகண்டு முதலிய கருவுலூ நூல்களையும் பயின்றார்.

இவர் தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் புலமை பெற்றவராக காணப்பட்டார். சரவண மூர்த்தி புலவர் மற்றும் சேனாதிராசா முதலியாரிடம் உயர்கல்வியை கற்றார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வெஸ்லியன் மெதடிஸ்ட் மிஸன் மத்திய கல்லூரியில் ஆங்கில மொழியை பயின்றார்.

சைவசமயப் பணி

ஆறுமுக நாவலரது சமயப் பணிகளை நோக்குகின்ற போது இவர் பிரசங்கங்கள் மூலம் சைவத்தை இவ்வுலகில் நிலை நிறுத்த முயற்சி செய்தார். 1847இல் வண்ணார் பண்ணை சிவன் கோவிலில் நாவலர் தம் முதல் பிரசங்கத்தை நிகழ்த்தினார்.

இலங்கையில் அமெரிக்கா மிஸன் அமைப்பு வட்டக்கோட்டை குருமடம், தெள்ளிப்படை கல்லூரி முதலியவற்றை நிறுவி தீவிரமாக பரப்பு செய்தார்.

போர்த்துகேயர் காலத்தில் அழிக்கப்பட்ட, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நகுலேஸ்வரன் எனும் ஆலயத்தை புனர்நிர்மாணம் செய்ய உதவி செய்தார். மற்றும் பல இடங்களுக்கு யாத்திரை சென்று சமய சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.

ஆறுமுக நாவலர் தமது இல்லத்தில் வித்தியாலனுபாலன ராஜேந்திரசாலை எனும் பெயரில் அச்சுக்கூடம் ஒன்றை நிறுவி பாலர்பாடம், ஆத்திசூடி, கொன்றை வேந்தன் உரை, சிவாலய தரிசன விதி, சைவசமய சாரம், கொலை மறுத்தல், நன்னூல் விருத்தி உரை, திருசெந்தினிரோட்டக யமகவந்தாதி உரை, திருமுருகாற்றுப்படை உரை போன்ற பல நூல்களை அச்சிட்டு வெளியிட்டு உள்ளார்.

1859 ஆம் ஆண்டு வைகாசி மாதம் திருவாசகம், திருக்கோவையார் போன்ற நூல்களை வெளியிட்டார். 1869 ஆம் ஆண்டு தமிழகத்தின் இராமநாதபுரம் சமஸ்தானுக்கு சொற்பொழிவாற்றினார். அதனைத் தொடர்ந்து திருப்பள்ளிருக்கு வேளூர், சீர்காழி ஆகிய ஊர்களில் சொற்பொழிவு ஆற்றினார்.

கல்விப் பணி

சைவ சமயத்தை வளர்ப்பதற்கு கல்வி பணியை சிறந்தது என கருதி பல கல்வி பணிகளையும் மேற்கொண்டார்.

அவையாவன, அரபி 848 யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையில் சைவபிரகாச வித்யாசாலையை நிறுவியமை, மாணவர்களுக்கு ஏற்ற வகையில் பாலர் பாடம் 1 ஆம், 2ஆம், 3ஆம், 4ஆம் பாகம் என புத்தகங்களை எழுதி வெளியிட்டமை, 1849 நல்லூரில் வித்தியாசமான யந்திர சாலை எனும் அச்சியந்திர சாலையை நிறுவி பல நூல்களை அச்சிட்டு வெளியிட்டமை, 1864 ஆம் ஆண்டு தமிழகத்தில் சிதம்பரம் என எடுத்த சைவ பிரகாச வித்யாசாலையை நிறுவியமை, 1872 கோப்பாய் மற்றும் புலோலி ஆகிய இடங்களில் சைவப் பிரகாச வித்யாசாலைகளை நிறுவியமை மற்றும் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நன்னெறி, நல்வழி போன்ற நூல்களுக்கு உரை எழுதியமை என பல பணிகளை ஆற்றியுள்ளார்.

மேலும் 1870 ஆறுமுக நாவலர் ஒரு சைவக் கல்வி நிலையம் ஒன்றை ஆரம்பித்து அதனை தனது செலவில் நடாத்தியமை, வண்ணார் பண்ணையில் ஆங்கில பாடசாலை ஒன்றை 1772 ஆம் ஆண்டு தை மாதம் நிறுவி நடத்தியமை போன்ற பல பணிகளை மேற்கொண்டுள்ளார்.

முடிவுரை

இவ்வாறு பல பணிகளை புரிந்த ஆறுமுக நாவலர் ஈழத்து சைவ சமயத்தின் மறுமலர்ச்சி தந்தையாகவும், விடிவெள்ளியாகவும் கருதப்பட்டார்.

இவர் 1879 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 21ஆம் தேதி இறைவனடி சேர்ந்தார் இவரது பூத உடல் ஆனது யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை கோம்பையன் மணல் மாயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவர் மறைந்தாலும் இவரது சமய தமிழ் பணிகளை அவரது நூல்கள் மூலமும் அவரால் அமைக்கப்பட்ட பாடசாலைகள் மூலமும் இன்று வரை வாழ்வதை நாம் கண்கூடாக அறிந்து கொள்ளலாம்.

You May Also Like:

அன்பே உலகாளும் கட்டுரை

எமது நாடு இலங்கை கட்டுரை