இட ஒதுக்கீடு வாயிலாக சமூக நீதி கட்டுரை

ida othukeedu katturai

ஒடுக்கப்பட்டவர்களுக்கான உரிமைகளை வழங்கவதன் மூலம் இந்தியாவில் சமூக நீதியானது மேம்படுத்தப்படுகிறது. இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்கள் பல்வேறு வகையான பயன்களை பெறுகின்றனர்.

இட ஒதுக்கீடு வாயிலாக சமூக நீதி கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. இட ஒதுக்கீடு
  3. இட ஒதுக்கீட்டுக்கான காரணங்கள்
  4. இட ஒதுக்கீட்டின் வரலாறு
  5. இட ஒதுக்கீட்டின் பயன்கள்
  6. முடிவுரை

முன்னுரை

ஆரம்ப காலத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரிடமிருந்து சில உரிமைகள்  பறிக்கப்பட்டன.

இவற்றை தற்காலத்தில் கலைந்து அவர்களுக்கு உரிய உரிமைகளை வழங்கி சமூகத்தில் சமத்துவத்தை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட இட ஒதுக்கீடானது சமூகத்திற்கும் தனிநபருக்கும் இடையிலான சமூக நீதியை வழங்கும் சிறந்த முறையாக காணப்படுகின்றது.

இட ஒதுக்கீடு

இட ஒதுக்கீடு என்பது ஒடுக்கப்பட்டவர்களுக்குரிய சமூக ரீதியான உரிமைகளையும், கல்வி ரீதியான உரிமைகளையும், அரசு வேலை வாய்ப்புகள் சம்பந்தமான உரிமைகளையும், அரசியலில் ஈடுபடும் உரிமைகளையும் மேம்படுத்தும் பொருட்டு உருவாக்கப்பட்ட திட்டமாகும். இட ஒதுக்கீட்டுக்கு ஆணிவேராக காணப்படுவது வகுப்பு உரிமை ஆகும்.

இட ஒதுக்கீட்டுக்கான காரணங்கள்

ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை முன்னுரிமைப்படுத்துதல், அவர்களுக்கான போதிய பிரதிநிதித்துவத்தை வழங்குதல், கல்வி ரீதியாக அவர்களை வலிமைப்படுத்துதல், அவர்களுக்கான அதிகாரங்களை அளித்தல், சமூக ரீதியாக பின் தங்கியுள்ளவர்களை மேம்படுத்தல், தீண்டாமையை ஒழித்தல்,

காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதியை வழங்கள் அதாவது ஆரம்ப காலத்தில் சில பிரிவினர்களுக்கு மட்டுமே கல்வி கற்கும் உரிமை காணப்பட்டது.

இவை யாவற்றையும் கலைந்து கல்வி ரீதியாக அவர்களை மேம்படுத்தல் போன்ற காரணங்களை அடிப்படையாகக் கொண்டு இட ஒதுக்கீடானது வழங்கப்படுகிறது.

இட ஒதுக்கீட்டின் வரலாறு

1921 ஆம் ஆண்டு முதல் நடைமுறைகள் இருந்து வரும் இட ஒது கேட்டுக்கொள்கை சமுதாயத்தின் பல்வேறு பிரிவினர்களாலும் எழுப்பப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படைகள் பல்வேறு பயனுள்ள மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டது. பின்னர் இந்திய உச்ச நீதிமன்றத்தால் 1951 ஆம் ஆண்டு நிராகரிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து தந்தை பெரியார் அவர்கள் தமிழ்நாட்டில் வழி நடத்திய பெருந்திரளான எதிர்ப்பு ஊர்வலங்கள் மற்றும் கண்டன கூட்டங்களின் விளைவாக அரசமைப்பு சட்டத்தில் பிரிவு 15 (4) சேர்க்கப்பட்டு முதல் அரசமைப்பு சட்டல் சீர் திருத்தத்திற்கு வழிவகுத்தது.

தற்போது தமிழகத்தில் உள்ள 69% இட ஒதுக்கீடு மாநிலத்தில் 1990 ஆம் ஆண்டு முதல் செயற்படுத்தப்படட்டது.

கல்வி நிறுவனங்களை பொருத்தமட்டில் 69% இட ஒதுக்கீடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிலையங்கள் மட்டுமே கடைபிடிக்கப்பட்டு வந்தது. இது 31.5.2006 ஆம் அன்று சட்டமன்ற பேரவைகளில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இட ஒதுக்கீட்டின் பயன்கள்

இட ஒதுக்கீட்டின் மூலம் கல்வித்தரம் உயர்கின்றது, பொருளாதார பின்னடைவுள்ள மக்கள் சிறந்த பொருளாதார நிலையினை அடைகின்றனர், காது கேளாதவர் வாய்பேச இயலாதவர் போன்றவர்களுக்கு அரச வேலையில் இட ஒதுக்கீடு வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்விலும் சிறந்த திருப்புமுனையாக அமைகிறது.

அத்துடன் மக்களுக்கிடையே சமத்துவ மனப்பான்மை கட்டி எழுப்பப்படுகின்றது. ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் ஒருவர் அரசியல் பொறுப்பை ஏற்பதன் மூலம் அவர்களது சமூகத்தின் தேவைகளை நன்கு அறிந்து அவற்றை அடிப்படையாகக் கொண்டு பல திட்டங்களை அறிமுகப்படுத்த முடிகின்றது.

முடிவுரை

இட ஒதுக்கீடு முறையானது காலம் காலமாக தாழ்த்தப்பட்டு ஒடுக்கப்பட்ட வாழ்ந்த மக்களுக்கு உரிய உரிமைகளை மீட்டுக் கொடுத்து சமூகத்தில் ஒரு சமத்துவ மனப்பான்மையை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்த இட ஒதுக்கீடு இந்திய சமூகத்தில் சிறந்ததொரு திட்டமாக காணப்படுகிறது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் நன்மை அடைகின்றார்கள்.

You May Also Like:

மானாவாரி என்றால் என்ன