இயற்கையும் மனித வாழ்வும் கட்டுரை

iyarkaiyum manithanum katturai

உலகில் உயிரினங்கள் வாழ்வதற்கு முக்கிய ஆதாரமாக விளங்குவது இயற்கையாகும். இயற்கையை பேணிப் பாதுகாப்பதன் மூலம் செழிப்பான வாழ்க்கையை கொண்டு செல்லலாம்.

இயற்கையும் மனித வாழ்வும் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • மனிதர்களுக்கு இயற்கை ஏன் மிகவும் முக்கியமானது
  • இயற்கை மாசடைவு
  • இயற்கை மாசடைவால் மனித வாழ்வில் ஏற்படும் பிரச்சினை
  • பாதுகாப்பு நடவடிக்கை
  • முடிவுரை

முன்னுரை

இயற்கை என்பது நம்மைச் சுற்றியுள்ள இயற்பியல் சூழலுக்கும் வளிமண்டலம், தட்பவெப்பநிலை, இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல், தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் மனிதர்கள் போன்றவற்றில் உள்ள வாழ்க்கைக்கும் இடையிலான தொடர்புகளைக் குறிக்கிறது.

பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களின் ஊட்டச்சத்துக்கான அனைத்து தேவைகளுக்கும் இயற்கை முதன்மை ஆதாரமாக உள்ளது.

மனிதர்களுக்கு இயற்கை ஏன் மிகவும் முக்கியமானது

மனிதர்கள் பூமியில் வாழ்வதற்கும் தங்களுடைய அன்றாட வேலைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கும் முக்கிய ஆதாரமாக விளங்குவது இயற்கையாகும். இயற்கையின் மூலமாக மனிதர்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கப்பெறுகின்றன.

உதாரணமாக மனிதர்கள் சுவாசிப்பதற்கு தேவையான சுத்தமான வளி(ஒட்சிசன்) இயற்கையின் மூலமாகவே கிடைக்கின்றது.

மேலும் அருந்துவதற்கு தேவையான நீர், ஒளி, வெப்பம், மழைவீழ்ச்சி, வாழ்விடங்களினை அமைத்துக் கொள்வதற்கு தேவையான மரங்கள், பலகைகள், விவசாயத்திற்கு தேவையான நிலம், மற்றும் பல்வேறு மனித நடவடிக்கைகளுக்கு தேவையான வளங்கள் இயற்கையின் மூலமாகவே கிடைக்கப்பெறுகின்றன.

புவியிலிருந்து கிடைக்கின்ற இயற்கை வளங்களை மனிதனாலேயே பெறுமதி மிக்கதாக மாற்றப்படுகின்றது.

அது மாத்திரம் இன்றி மனிதர்களுக்கு மிகவும் அவசியமான எரிபொருட்களையும் இந்த இயற்கையின் மூலமாகவே பெற்றுக் கொள்கின்றனர். (உதாரணமாக: நிலக்கரி, பெட்ரோலியம், எண்ணெய், கனியங்கள்)

மேலும் இயற்கையானது பொழுதுபோக்கு மற்றும் அழகியல் மதிப்பை வழங்குகிறது. இவ்வாறாக இயற்கையானது மனிதர்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக காணப்படுகின்றது.

இயற்கை மாசடைவு

இயற்கையின் மாசுபாடு என்பது இரசாயனங்கள், பிளாஸ்டிக்குகள் மற்றும் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் உமிழ்வுகள் போன்ற தீங்கு விளைவிக்கும் பொருட்களால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுகின்றது.

இந்த மாசுபாடு காற்று, நீர் மற்றும் மண்ணின் தரத்தை எதிர்மறையாக பாதிக்கிறது, இது சுற்றுச்சூழல் அமைப்புகள், வனவிலங்குகள் மற்றும் மனித ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது.

இயற்கை மாசடைவால் மனித வாழ்வில் ஏற்படும் பிரச்சினை

இயற்கை மாசடைவின் மூலமாக இயற்கையினுடைய வெப்பச் சமநிலையானது மாறுபடுகின்றது. இதனால் புவி அதிகளவு வெப்பமடைகிறது.

அமில மழை, பாலைவனமாதல், நிலம் வளமற்று போதல் போன்றவற்றால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது.

மேலும் அசுத்தமான காற்று, நீர் என்பன உடலினுள் உட்புகுவதால் தொற்று நோய், தொற்றா நோய் போன்ற சுகாதார நலக்குறைவுகளும் ஏற்படுகின்றன.

பாதுகாப்பு நடவடிக்கை

புவியில் உள்ள கூறுகள் மாசடைவதை தடுப்பதற்கு பல்வேறு விழிப்புணர்ச்சி செயற்பாடுகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.

இயற்கையின் முக்கிய வளங்களான நீர், காற்று, நிலம், வனம், கனிமங்கள் போன்றவற்றின் அழிவினைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுதல் வேண்டும்.

அந்த வகையில் மரங்களை நடுதல், இயற்கைப் பசளைகளை பயன்படுத்துதல், குப்பைக்கூழங்களை எரிப்பதை தவிர்த்து மண்ணிணுள் புதைத்தல், உக்காத பொருட்களை பொருத்தமான முறையில் அகற்றுதல், பொலித்தீன் பயன்பாட்டினை தடைசெய்தல் போன்ற செயற்பாடுகளின் மூலம் இயற்கை மாசடைவதை தவிர்க்கலாம்.

முடிவுரை

இயற்கை என்பது மனித வாழ்விற்கு இறைவன் அழித்த இன்றியமையாத சொத்து ஆகும். அதனைப் பாதுகாப்பது மனிதராய் பிறந்த எங்கள் ஒவ்வொருவரினதும் பொறுப்பும் கடமையும் ஆகும்.

இயற்கையின் கொடைகளை அரவணைத்து, அதன் எல்லைகளை மதித்து, ஒத்துழைப்பதன் மூலம், இயற்கைக்கும் மனித வாழ்வுக்கும் இடையே உள்ள ஒன்றுக்கொன்று சார்ந்திருக்கும் எதிர்காலத்தை நாம் உருவாக்க முடியும்.

எனவே இயற்கையை பாதுகாத்து சூழலுடன் நட்புறவாக இணைந்து சுகதேகிகளாக வாழ்வோம்.

You May Also Like:

இயற்கையின் நன்மைகள் கட்டுரை

இயற்கையும் சுதந்திரமும் பேச்சு போட்டி