இலக்கியம் என்றால் என்ன

ilakkiyam enral enna in tamil

மனிதர்களானவர்கள் தங்களது கருத்துக்களை பிறர் புரிந்து கொள்ளும் வகையில் ஒப்புவிப்பதற்கு இலக்கியமானது துணைபுரிகின்றது.

அதாவது ஒருவருடைய குறிக்கோள் அவர்களது வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகள் போன்றனவற்றை பற்றி அனைவரும் தெரிந்து கொள்வதற்கு உறுதுணையாக இலக்கியங்களே அமைந்துள்ளன.

இலக்கியமானது சங்க மற்றும் சங்க மருவிய காலப்பகுதிகளில் இருந்து வளர்ச்சி கண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இலக்கியம் என்றால் என்ன

இலக்கியம் என்றால் என்ன என்பது பற்றிய ஒரு பொதுவான விளக்கம் இன்று வரை காணப்படவில்லை என்றாலும் அது பற்றி பொதுவாக கூறுவோமேயானால் இலக்கியம் என்பது ஒரு சமுதாய மக்களுடைய வாழ்கை முறை, இலக்குகள் மற்றும் அவர்களது குறிக்கோள் போன்றனவற்றை எடுத்தியம்புவதாகும்.

மேலும் வாழ்வியல் மற்றும் அறம் சார்ந்த விடயங்களை உள்ளடக்கியதே இலக்கியமாக கொள்ளலாம்.

தனிமனிதனுடைய வாழ்க்கையில் இலக்கியத்தின் தாக்கமானது பல்வேறு வகையில் செல்வாக்கு செலுத்துவதோடு வாழ்வியல் மாற்றங்களை ஏற்படுத்தவும் துணை புரிகின்றது.

இலக்கியத்தின் அவசியம்

இலக்கியமானது ஆரம்ப காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறையினை எடுத்துரைப்பதற்கு அவசியமானதாகும். வரலாற்று நிகழ்வுகளை அறிவதற்கும் இலக்கியமானது துணைபுரிகின்றது. அதாவது மக்களின் வாழ்க்கை முறை அவர்களின் வீரதீரச் செயல்களினை எடுத்துரைப்பதற்கும் இது அவசியமாகின்றது.

வாழ்வியல் சார்ந்த ஒழுக்க நெறியினை மிகவும் துள்ளியமாக அறிந்து கொள்வதற்கு இலக்கியமானது அவசியமாகும். உதாரணமாக திருக்குறளானது பல்வேறுபட்ட வாழ்க்கைக்கான போதனைகளை எடுத்துரைக்க கூடியதாக அமைகின்றது.

இலக்கியமானது வாழ்க்கையின் தத்துவங்கள் பற்றிய கருத்துக்களை குறிப்பிடுவதற்கு அவசிமாகின்றது. அதாவது எல்லோராலும் புரிந்து கொள்ளக் கூடிய வகையிலேயேதான் இலக்கியமானது தொகுக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசர்களின் வீரச் செயற்பாடுகளை குறிப்பிடுவதனூடாக ஒரு மனிதனுடைய வாழ்விலும் வீரச் செயல்களை ஏற்படுத்துவதற்கு துணைபுரிகின்றது.

இலக்கியம் தனிமனித வாழ்வில் ஏற்படுத்துகின்ற தாக்கம்

இன்றைய காலப்பகுதியில் இவ் இலக்கியமானது மனித வாழ்வில் பல்வேறு வகையில் தாக்கம் செலுத்துகின்றது எனலாம். அதாவது கம்பராமாயாணம், திருக்குறள் பேன்ற இலக்கியங்கள் ஊடாகவே மனித சமூகமானது தனது வாழ்க்கை முறைமைகளை சரிவர பேணுகின்றனர்.

ஒரு மனிதனிடத்தில் காணப்படும் நற்குணங்களான பொறுமை, சகிப்புத்தன்மை, அன்பு காட்டல் போன்ற விடயங்களை தனது வாழ்க்கையில் கடைப்பிடிப்பதற்கு இத்தகைய இலக்கியமே பிராதானமான ஒரு காரணமாகும்.

இன்றைய காலகட்டமானது என்னதான் வளர்ச்சியினை கண்டாலும் இலக்கியமானது நடைமுறைப்படுத்தப்பட்டு கொண்டேதான் வருகின்றது. வாட்ஸப், பேஸ் புக் என பல சமூக ஊடகங்கள் சமூகத்தினை ஆட்கொண்டுள்ள போதும் நல்லுபதேசங்களை போற்றும் ஆத்திசூடி, நல்வழி போன்ற இலக்கிய நூல்களை இன்றும் பின்பற்றி கொண்டேதான் மனிதனானவன் வாழ்கின்றான்.

இந்த உலகமானது ஒரு மனிதனுடைய வாழ்வில் இன்பம் மற்றும் துன்பத்தினை மாறி மாறி ஏற்படுத்த கூடியதொன்றாகும்.

அந்த வகையில் இன்பத்தை கண்டு ஆடாமலும் துன்பத்தை கண்டு துவண்டு விடாமலும் இருக்க வேண்டும் என்ற தத்துவமானது இலக்கியங்களினூடாகவேதான் புலப்படுகின்றது.

இவ்வாறாக ஒவ்வொரு தனிமனிதனுடைய வாழ்க்கையிலும் இன்றியமையாத ஒன்றாக இலக்கியமானது காணப்படுகின்றது.

இலக்கியத்தின் சிறப்புக்கள்

இலக்கியத்தின் சிறப்பினை நோக்குவோமேயானால் வாழ்வியல் முறைகளான தானம் செய்தல், உதவி செய்தல் போன்றவற்றினை பறைசாற்றக்கூடியதாக காணப்படுகிறது எனலாம். இயற்கையினுடைய சிறப்பியல்புகளை எடுத்தியம்புவதாகவும் அமைகின்றது.

நாட்டினுடைய வளர்ச்சிக்கு அடித்தளமாக இலக்கியமானது காணப்படுகின்றது. மேலும் கலாச்சார ரீதியான விடயங்களுக்கு அடித்தளமிட்டுள்ளமையினையும் குறிப்பிடலாம்.

அதாவது வீரம், போர் பற்றிய விடயங்களை பேசக் கூடியதாக காணப்படுகின்றது. இவ்வாறாக இலக்கியமானது சிறப்பு பெற்று விளங்குவதோடு எவ்வளவு தான் நவீனத்துவம் வளர்ச்சியினை கண்டாலும் இலக்கியத்தின் செல்வாக்கானது இன்றும் ஆதிக்கம் செலுத்தி கொண்டேதான் வருகின்றது.

You May Also Like:

வெண்பா என்றால் என்ன

இயல் என்றால் என்ன