இளையராஜாவை வச்சு செய்யும் பிரபலங்கள்!-ஆடு தானா போய் சிக்கிடுச்சே

இணையத்தில் எங்கு பார்த்தாலும் இளையராஜாவோட சண்டை தான். ஒருபக்கம் இளையராஜா, வைரமுத்து சண்டை மறுபக்கம் இளையராஜா சன் பிக்சர்ஸ் விவகாரம் தான்.

இளையராஜா, வைரமுத்து இசை மொழி பிரச்சனை ரொம்பநாளாக நடந்து கொண்டிருக்கின்றது.

வைரமுத்து, இளையராஜா இசைதான் பெரிது என்று பேசினதுக்கு அப்புறம் ஒரு பாட்டிற்கு இசை, மொழி இரண்டுமே முக்கியம் இவை இரண்டும் இல்லாவிட்டால் இப் பாடல் முழுமை அடையாது என்றும் இதை அறியாதவன் ஞானி இல்லை என்றும் பேசியிருப்பார்.

இதற்கு இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் போட்டி ஒன்றில் வைரமுத்துவை மிரட்டுவது போன்று பேசியிருப்பார்.

இவர் பேசியது அனைவர் மத்தியிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வைரமுத்துவை தாக்கி பேசியதை அனைவரும் கண்டித்து வருகின்றனர்.

இதே போன்று கூலி பட டீஸரில் தனது இசை பயன்படுத்தபட்டதாக சன் பிக்ஸர் நிறுவனத்திற்கு நோடிஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் பத்திரிக்கையாளர் பாண்டியன் இளையராஜா தேன் கூட்டில் கை வைத்தது போல் சன் நிறுவனத்திடம் சிக்கிவிட்டார் என கூறியுள்ளார்.

அதாவது சன் நெட்வொர்க் மிகப் பெரிய அளவில் பிசினஸ் செய்பவர்கள். இதெல்லாம் அவர்களுக்கு ஒரு பிரச்சினையே கிடையாது. இதில்இருந்து ஈஸியா வெளியில வந்துவிடுவார்கள்.

பிரபல இயக்குனர் சீனு ராமசாமி அவருடைய கண்டனத்தையும் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். வைரமுத்துக்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்று இளையராஜா நினைத்தார்.

வைரமுத்து நல்ல இசையமைப்பாளர்களுக்கு நல்ல நல்ல பாடல்களை கொடுத்து பெரிய பாடலாசிரியராக வளர்ந்து விட்டார் என்று கூறியிருக்கின்றார்.

more news