எரிபொருள் சிக்கனம் கட்டுரை

eriporul sikkanam katturai in tamil

உலகில் பல கனிய வளங்கள் காணப்படுகின்றன. அவ்வாறான வளங்களில் ஒன்றே எரிபொருளாகும். எரிபொருள் என்பது எரிந்து ஆற்றல் தரக்கூடிய பொருட்களே எரிபொருள் எனப்படும். இவை தீயின் மூலமோ தீ இல்லாமலோ எரிந்து ஆற்றல் தரலாம்.

இவ்வாறான எரிபொருட்கள் தற்கால உலகின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கினை வகிக்கின்றது. எனவே நாம் எரிபொருட்களை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

எரிபொருள் சிக்கனம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • எரிபொருளின் வகைகள்
  • எரிபொருளின் பயன்பாடுகள்
  • எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த வேண்டியதன் அவசியம்
  • எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தும் வழிகள்
  • முடிவுரை

முன்னுரை

பொருளாதார புரட்சி நிறைந்த இவ்வுலகில் எரிபொருளின் முக்கியத்துவம் இன்றியமையாதது. இந்தியாவில் எத்தனையோ யுத்தங்கள் இடம்பெற்று உள்ளன.

ஆனால் இன்னொரு யுத்தம் நடைபெறுமாயின் அது எரிபொருளுக்கான யுத்தமே ஆகும். எனவே எமது வாழ்வில் இன்றியமையாத இடத்தை பிடித்த எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவது எமது கடமையாகும்.

இவ்வாறான எரிபொருட்கள் சூழல் மாசடைவுக்கும் காரணமாகின்றன ஆதலால் அதனை சிக்கனமாக பயன்படுத்தும் போது நம் சூழலையும் பாதுகாக்க முடியும். அத்தோடு எரிபொருள் பற்றாக்குறையையும் தடுக்க முடியும்.

எரிபொருளின் வகைகள்

எரிபொருட்கள் பொதுவாக இயற்கை, செயற்கை எரிபொருள் என இரண்டு வகைப்படும். இதில் இயற்கை அல்லது முதன்நிலை எரிபொருள் என்பதற்குள் நிலக்கரி மற்றும் இயற்கை வாயு போன்றவை உள்ளடங்கும்.

இரண்டாவது வகையான செயற்கை எரிவாயு என்ற வகைக்குள் மண்ணெண்ணெய், டீசல், பெற்றோல் போன்றன உள்ளடங்கும். எனினும் எரிபொருட்களை பொதுவாக திண்ம, திரவ, வளிம எரிபொருட்களாகவும் வகைப்படுத்தலாம்.

எரிபொருளின் பயன்பாடுகள்

வீடு முதல் தொழிற்சாலை வரை எரிபொருளை எரிக்கும் போது பெறப்படும் ஆற்றல் பயன்படுத்தப்படுகின்றது. எமது வாழிடமான வீட்டை பொறுத்தமட்டில் குப்பி விளக்குகளை எரிக்கவும் மின்சாரத்தை பயன்படுத்தி செய்யப்படும் செயற்பாடுகளுக்கும் சமையலை மேற்கொள்ளவும் எரிபொருட்கள் பயன்படுகின்றன.

மேலும் நாம் அன்றாடம் பயணங்களை மேற்கொள்வதற்கு பயன்படுத்தும் வாகனங்களை இயக்க எரிபொருட்கள் பயன்படுகின்றன. பொதுவாக கார், மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டிகள் போன்ற வாகனங்களை இயக்க எரிபொருட்கள் பயன்படுகின்றன.

மேலும் தொழிற்சாலைகளில் தொழில்சார் நடவடிக்ககைகளை மேற்கொள்ளும் தொழில்சார் இயந்திரங்களை இயக்க எரிபொருட்கள் பயன்படுகின்றன. இவ்வாறு எரிபொருட்களின் பயன்பாடானது எல்லையற்றதாக காணப்படுகின்றது.

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த வேண்டியதன் அவசியம்

இன்றைய கால கட்டத்தில் அழிந்து வரும் கனிம வளங்களில் எரிபொருட்களும் ஒன்றாகும். அதனால் எரிபொருட்களை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

உதாரணமாக ஒவ்வொரு நாட்டிலும் கிடைக்க கூடிய நிலக்கரி, மண்ணெண்ணெய், டீசல் போன்ற எரிபொருட்கள் குறைந்து கொண்டே செல்கின்றது. இதனால் எரிபொருட்களின் சிக்கனம் என்பது இன்றியமையாததாக காணப்படுகின்றது.

இதனாலேயே உலக நாடுகள் எரிபொருள் சிக்கன திகதியாக டிசம்பர் 14ம் திகதியை பிரகடனப்படுத்தி கொண்டாடுகின்றனர்.

மேலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்த எரிபொருள் சிக்கனம் அவசியமாகும். எதிர்கால எரிபொருள் தேவையின் நிமித்தம் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தும் வழிகள்

இன்றைய காலகட்டத்தில் அதிக வாகனப்பாவனை காணப்படுகின்றது. அதனால் குறுகிய பயணங்களை மேற்கொள்ளும் போது துவிச்சக்கர வண்டியில் செல்லுதல் உத்தமம். அவ்வாறு செய்யும் போது உடல் நலனும் பாதுகாக்கப்படும்.

எரிபொருளுக்கு பதிலாக மாற்று சக்தியான இயற்கை வளங்களை பயன்படுத்தல் ஒட்டு மொத்த உலகிற்கும் நன்மை அளிக்கும். மேலும் வாகனத்தில் செல்லும் போது முப்பது நிமிடங்களுக்கு மேலாக ஒரு இடத்தில் காத்திருக்க வேண்டுமாயின் வாகனத்தை நிறுத்தி வைத்தல் போன்ற செயற்பாடுகளின் மூலம் எரிபொருட்களை சேமிக்கலாம்.

மேலும் விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தல், குறைவான மின் சக்தியை பாவனை செய்யும் மின்குமிழ்களைப் பயன்படுத்தல் போன்ற செயற்பாடுகளின் மூலமாக எரிபொருட்களை சிக்கனமாக பயன்படுத்த முடியும். அதுமட்டுமல்ல நாம் வாழும் சூழலையும் பாதுகாக்க முடியும்.

முடிவுரை

எரிபொருட்களை சிக்கனமாக பயன்படுத்தினால் அது எமக்கு மட்டுமல்ல எமது எதிர்கால சந்ததியினருக்கும் நன்மை அளிக்கும்.

எனவே எதிர்கால எமது சந்ததியினரின் நன்மை கருதி நாம் எரிபொருட்களை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். எரிபொருள் சிக்கனமானது சூழல் மாசடைவையும் தடுக்க உதவுகின்றது. எனவே எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவோம் எதிர்காலத்தை காப்போம்.

You May Also Like:

கழிப்பறை சுத்தம் கட்டுரை