கலைஞரின் சுவடுகள் கட்டுரை

kalaignar suvadugal katturai in tamil

இந்திய விடுதலை இயக்க வரலாற்றில் பெரும் மாறுதல்களை ஏற்படுத்தியவர்களுள் ஒருவரான பேரறிஞர் அண்ணா அவர்களின் அடியொற்றி அரசியல் பணியும், கலைப்பணியும் பல சிறப்புற படைத்தவராக கலைஞர் அவர்கள் விளங்குகின்றார்.

கலைஞரின் சுவடுகள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • இலக்கியச் சுவடுகள்
  • கவிதை
  • திரையுலகப் படைப்புகள்
  • நாடக அரங்கேற்றம்
  • மொழிபெயர்ப்பு
  • முடிவுரை

முன்னுரை

இந்தியாவின் அரசியலில் காணப்படுகின்ற தலைவர்களுள் இலக்கிய ஆற்றல், அரசியல் பார்வை மற்றும் சமூகத் தொண்டு புரிதல் ஆகியவை வெற்றிகரமாக ஒருங்காக இணைந்த ஓர் தலைவராக முத்தமிழறிஞர் கருணாநிதி அவர்கள் காணப்படுகின்றார்.

இவர் பதிக்காத கலை வடிவங்களே இல்லை என சொல்லும் அளவிற்கு கவிதை, கட்டுரை, சிறுகதை, நாடகம், நாவல், வரலாறு என எல்லா வடிவங்களிலும் பங்காற்றியுள்ளார்.

இலக்கியச் சுவடுகள்

முத்தமிழறிஞரான கலைஞர் அவர்கள் தன்னுடைய பல அரசியல் பணிகளுக்கு மத்தியிலும் இலக்கியப் பணியை கைவிடாது தொடர்ந்தார்.

இவர் 10 நாவல்கள், 24 நாடகங்கள், 4 வரலாற்று புனைவுகள், 39 சிறுகதைகள், 9 கவிதைத் தொகுப்புகள், 3 உரைநூல்கள், 29 கட்டுரைகள், 16 சிறுகுறிப்புகள், 10 புதினங்கள், 12 கடிதத் தொகுதிகள், 1 பயணக்கட்டுரை என்பவற்றை தன் ஆக்கமாக வெளியிட்டுள்ளார். அத்துடன் 4 திரைப்படங்களுக்கு கதை, வசனம் என்பவற்றையும் எழுதியுள்ளார்.

கவிதை

இவர் வெளியிட்ட கவிதைத் தொகுதிகளாக அண்ணா கவியரங்கம், கலைஞரின் கவிதைகள், முத்தாரம், வாழ்வெனும் பாதையில், காலப்பேழையும் கவிதைச்சாவியும் என பலவற்றை இயற்றியுள்ளார்.

மேலும், கவியரங்கங்களுக்கும் தலைமை தாங்கி நடத்தியுள்ளார். அறிஞர் அண்ணா மறைந்தபோது, “பூவிதழின் மென்மையினும் மென்மையான புனித உள்ளம் – அன்பு உள்ளம் அரவணைக்கும் அன்னை உள்ளம்” என ஆரம்பமாகும் இரங்கற்பாவானது தமிழ் இலக்கிய வரலாற்றிலே சிறப்பான ஓர் இடத்தினை பெற்று காணப்படுகின்றது.

திரையுலகப் படைப்புகள்

இவர் தன்னுடைய 20 ஆவது வயதில், ஜுபிடர் பிக்சர்ஸ் எனும் திரைப்படங்களில் எழுத்தாளராக பணியாற்றினார்.

பின்னர் இராஜகுமாரி, மந்திரி குமாரி, மருதநாட்டு இளவரசி, பராசக்தி, தேவகி, பணம், திரும்பிப் பார் என 58க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம், பாடல் என்பவற்றை எழுதியுள்ளார்.

1947 ஆம் ஆண்டு வெளியான, “இராஜகுமாரி” திரைப்படமே இவரை மிகவும் பிரபல்யமடைய செய்தது.

நாடக அரங்கேற்றம்

கலைஞர் அவர்கள், 15 வயதில் “பழனியப்பன்” என்கிற நாடகத்தை எழுதி திருவாரூரில் அந்த நாடகத்தை அரங்கேற்றம் செய்தார். இந்த நாடகமே அவரது முதல் நாடகம் ஆகும்.

இந்த நாடகம், இவர் அரசியலில் காணப்பட்ட வேளைகளில், “நச்சு கோப்பை” என்கிற தலைப்பில் தமிழகம் எங்கும் திராவிடர் கழக மேடைகளில் நடத்தப்பட்டது. மொத்தமாக இவர் 24 நாடகங்களை எழுதியுள்ளார்.

இவர் ஒவ்வொரு நாடகத்தையும் திரைக்கதைகளிலின் வடிவிலே எழுதியுள்ளமை சிறப்புற்குரிய விடயமாகும்.

மொழிபெயர்ப்பு

முத்தமிழறிஞரான கலைஞர் அவர்களது தொல்காப்பிய பூங்கா, காலப்பேழையும் கவிதைசாவியும், தென்பாண்டி சிங்கம், பாயும் புலி பண்டாரக வன்னியன், பொன்னர் சங்கர், முத்துக்குளியல், கவிதை மழை 3 தொகுதிகள் , பராசக்தி மற்றும் மனோகரா, பூம்புகார் மற்றும் ஓரங்க நாடகங்கள் போன்ற 12 புத்தகங்களை தேர்வு செய்து, அதனை கோவை பாரதியார் பல்கலைக்கழகம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது.

முடிவுரை

1974ஆம் ஆண்டு, அன்றைய திமுக அரசு செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கத்தை நிறுவி பல இலக்கியப் படைப்புகளுக்கு உறுதுணையாக காணப்பட்டார்.

மேலும் அரசியலிலும் சரி, இலக்கியத்திலும் சரி நிகரான பணிகளை மேற்கொண்ட மிகச் சிறந்த தலைவரான இவரது சுவடுகள் என்றும் அழியாது மக்களிடையே இன்றும் பேசு பொருளாக காணப்படுகின்றது.

You May Also Like:

முத்தமிழ் அறிஞர் கலைஞர் பற்றிய கட்டுரை

கவியரங்கம் என்றால் என்ன