குழந்தை தொழிலாளர் ஒழிப்பு கட்டுரை

kulanthai tholilalar olippu katturai in tamil

பல்வேறு நாடுகளில் இன்று வறுமையின் காரணமாகவும், குடும்ப சூழலின் காரணமாகவும் பல குழந்தைகள் தொழிலாளர்களாக மாற்றப்படுகின்றனர்.

இது குழந்தைகளின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் ஒரு செயலாகும். எனவே இந்த குழந்தை தொழிலாளர் முறையினை ஒழிப்பது அவசியமான ஒன்றாகும்.

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • குழந்தை தொழிலாளர்கள் என்றால் யார்
  • குழந்தைத் தொழிலாளர்கள் உருவாதல் பின்னணி
  • இந்தியாவில் குழந்தை தொழிலாளர் சட்டங்கள்
  • குழந்தை தொழிலாளர்கள் உருவாவதை தடுக்கும் வழிமுறைகள்
  • முடிவுரை

முன்னுரை

ஒரு நாட்டின் எதிர்காலமானது அந்நாட்டில் உள்ள குழந்தைகளின் பிறப்பு வளர்ப்பிலேயே அடங்கியுள்ளது.

ஆனால் இன்று அதிகமான குழந்தைகளின் சுதந்திரம் பறிக்கப்பட்டு கூலித்தொழிலாளர்களாக வேலைக்கு அமர்த்தப்படுவதனை காணலாம். இவ்வாறான குற்றச்செயல்கள் ஒழிக்கப்படும் போதே அந்நாடு சிறந்த நாடாக விளங்க முடியும்.

குழந்தை தொழிலாளர்கள் என்றால் யார்

சிறுவயதிலேயே தங்களுடைய உரிமைகள் முடக்கப்பட்டு கூலித்தொழிலுக்கு அமர்த்தப்படும் சிறார்களே குழந்தைத் தொழிலாளர்கள் எனப்படுகின்றனர்.

அதாவது தன்னுடைய பெற்றோரை இழந்து அனாதையான, வறுமையால் பாதிக்கப்பட்ட, கல்விச் சுதந்திரம் பறிக்கப்பட்ட குழந்தைகள் வேலைக்கு அமர்த்தப்படுவதனையே இது குறித்து நிற்கின்றது.

குழந்தைத் தொழிலாளர்கள் உருவாதல் பின்னணி

வறுமையின் காரணமாகவும் பெற்றோரின் இழப்பினாலும் பல குழந்தைகள் பொருளாதாரத்தை ஈட்டும் ஆயுதங்களாக மாறுகின்றனர்.

அநாதை குழந்தைகள் சமூக விரோதிகளால் குழந்தை தொழிலார்களாக மாற்றப்படுவதோடு, பெற்றோரின் அறியாமை பாலின வேறுபாடு கல்வி அறிவு இன்மை போன்ற காரணிகளாலும் இந்த குழந்தை தொழிலாளிகள் உருவாகின்றனர்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் 07 தொடக்கம் 17 வயது வரை உள்ள குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை ஒன்றரை கோடியாகும் என ஐ.நா வின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் குழந்தை தொழிலாளர் சட்டங்கள்

இந்தியாவில் குழந்தைகள் வேலைக்கு அமர்த்தப்படுவதனை தடுப்பதற்காக பல்வேறு சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன அந்த வகையில்,

1952 ஆம் ஆண்டு தொழிற்சாலைகளின் சட்டமானது 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமரர்த்துவதனை தடை செய்தது,

2000 ஆம் ஆண்டு குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம் ஆனது ஆபத்தான வேலைகளுக்கு குழந்தைகளை ஈடுபடுத்துவதனை தடை செய்தது.

இவ்வாறாக இளம் நீதி பராமரிப்புச் சட்டங்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டங்கள் என்பன இன்று வரைக்கும் இந்தியாவில் நடைமுறையில் இருப்பதனை காணலாம்.

குழந்தை தொழிலாளர்கள் உருவாவதை தடுக்கும் வழிமுறைகள்

இன்றைய குழந்தைகளே நாளைய தலைவர்களாக மாறுவது எனவே குழந்தை தொழிலாளர்கள் உருவாவது அந்த நாட்டின் எதிர்காலத்தையே பாதிக்க கூடிய ஒரு செயலாகும்.

அந்த வகையில் குழந்தைகளை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகளும் பெற்றோர்களும் கடுமையாக தண்டிக்கப்படுதல், சமூகத்தில் குழந்தை தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வுகளை அதிகமாக்குதல்,

வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை பராமரித்தல், கல்வி உணவு போன்ற அத்தியாவசிய தேவைகளை அரசாங்கம் ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக வழங்குதல்

போன்ற வழிமுறைகளின் ஊடாக குழந்தை தொழிலாளர்களின் உருவாக்கத்தை தடுக்க முடியும்.

முடிவுரை

ஒவ்வொருவரது வாழ்விலும் மிகவும் மகிழ்ச்சியான காலம் இந்த குழந்தை பருவமாகும். ஆனால் குழந்தை தொழிலாளர்களாக மாற்றப்படும் சிறார்களின் அந்த பருவம் மிகவும் வேதனையான ஒன்றாகவே மாறிவிடுகின்றது.

எனவே சிறுவர் தொழிலாளர்கள் உருவாவதனை தடுப்பதோடு, எம்மால் முடிந்த அளவு ஏழை சிறுவர்களுக்கும், அனாதை குழந்தைகளுக்கும் உதவுவதும் அவசியமானதாகும்.

You May Also Like:

அறிவை விரிவு செய் கட்டுரை

தொலைக்காட்சியின் நன்மை தீமைகள் கட்டுரை