கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கட்டுரை

kaitholil ondrai katturai in tamil

கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கட்டுரை

நாம் வாழும் உலகம் பொருளாதார செயற்பாடுகளோடு பின்னிப் பிணைந்து காணப்படுகின்றது. அதாவது பொருளாதாரத்தைப் பொறுத்தவரை கைத்தொழில் என்பது முக்கிய இடம் வகிக்கின்றது. கைத்தொழில் என்பது ஏதேனும் ஒரு உற்பத்தியை சந்தைக்கு அனுப்புவதற்காக மேற்கொள்ளப்படும் பொருளியல் செயற்பாடு எனலாம்.

கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • கைத்தொழிலின் அவசியம்
  • கைத்தொழில் கல்வி
  • கைத்தொழிலின் வகைகள்
  • கைத்தொழிலின் பயன்கள்
  • முடிவுரை

முன்னுரை

இன்றைய காலங்களில் பெரும் உற்பத்தி பொருள்களில் செல்வாக்கு அதிகமாக காணப்படுகின்ற போதும் கைத்தொழில் உற்பத்திகளானது பல்வேறு துறைகளிலும் தொடர்வதனை காண முடிகின்றது.

இந்த கைத்தொழில்களானது பல்வேறு வகையிலும் மனிதனுக்கு உதவியாக அமைவதனால் அனைவரும் தமக்கு ஏற்றாற் போல் கைத்தொழில்களை கற்றுக் கொள்வது சிறந்ததாகும்.

கைத்தொழிலின் அவசியம்

பெற்ற பிள்ளை கைவிட்டாலும் ஒருவேளை கற்ற கல்வி கைவிட்டாலும் பழகிய கைத்தொழில் என்றும் உன்னை கைவிடாது என்ற சான்றோர்களின் கருத்து கைத்தொழிலின் அவசியத்தை வலியுறுத்துகிறது.

மேலும் இன்றைய சூழ்நிலையில் கல்வி கற்றாலும் கூட வேலையில்லாத பிரச்சினை அதிகமாகவே காணப்படுகின்றது. எனவே சுய கைத்தொழில் ஒன்றினை கற்றுக் கொள்வதால் வேலையில்லாத பிரச்சினையை குறைக்கவும் இது அவசியமாகின்றது.

கைத்தொழில் கல்வி

பாடசாலை கல்வியை தாண்டி தற்காலங்களில் கைத்தொழில் கல்வி மிகவும் முக்கியமான ஒன்றாகவே காணப்படுகின்றது.

அதாவது தொழில்நுட்பக் கல்வி, படிப்புடன் கூடிய தொழில்கல்வி, சிறு கைத்தொழில் கல்வி மற்றும் குறுந்தொழில் பயிற்சி கல்வி போன்றன. ஒவ்வொரு மாவட்டங்களிலும் இன்று காணப்படுவதனால் தையல் தொழில், தச்சுத் தொழில் மற்றும் மண்பாண்ட தொழில் என பல்வேறு கைத்தொழில்களை மக்கள் கற்றுக் கொள்கின்றனர்.

கைத்தொழிலின் வகைகள்

நாம் வாழும் சமூகத்தினுள் பாய் பின்னுதல், கூடைகள் பின்னுதல், நெசவுத்தொழில், மட்பாடம் தயாரித்தல், கைவினைப் பொருட்கள் மற்றும் அலங்கார பொருட்கள் தயாரித்தல், மின் சாதனங்களை பழுது பார்த்தல் போன்ற பல்வேறு கைத்தொழில் காணப்படுகின்றன.

இவை அனைத்தும் இலகு கைத்தொழில், பாரிய கைத்தொழில், தொழில்நுட்ப விருத்தி கொண்ட கைத்தொழில் என்ற மூன்று பிரதான வகைகளுக்குள்ளும் அடங்குவதனை காண முடியும்.

கைத்தொழிலின் பயன்கள்

வறுமையில் வாடும் மக்களுக்கு கைத்தொழில் பொருளாதரத்தை ஈட்டித் தந்து வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு உதவுவதோடு, சுற்றுச்சூழல் மாசடைவதிலிருந்து தடுத்தல், உள்நாட்டு வளங்களை பயன்படுத்துதல்,

அந்நிய செலாவணியை பெற்றுக் கொடுத்தல், தனிநபர் வருமானத்தை அதிகரித்தல் மற்றும் திறமைகளுக்கும், புதுமைகளுக்கும் வாய்ப்பு அளித்தல் போன்ற பல்வேறு பயன்களை தருவதாக கைத்தொழில்கள் காணப்படுகின்றன.

முடிவுரை

இன்றைய கால சூழ்நிலைகளில் கைத்தொழில் ஒன்றினை கற்றுக் கொண்டால் வறுமையின் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும்.

எனவே கைத்தொழில் ஒன்றினை கற்றுக் கொள்வதன் மூலம் தங்களுடைய சொந்த முயற்சியில் சொந்த காலில் கௌரவமாக வாழ முடியும். ஆகவே நாம் கற்றுக்கொள்ளும் கைத்தொழில் நம்மை வளமாக வாழ வைக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

You May Also Like:

இயற்கையின் நன்மைகள் கட்டுரை

உழவுத் தொழில் பற்றிய கட்டுரை