கொரோனா வைரஸ் பற்றிய கட்டுரை

coronavirus katturai in tamil

இரண்டாம் உலகப்போரின் பின்னர் உலகையே பல இன்னல்களுக்கு உட்படுத்திய பாரியதோர் தொற்றுநோய் வைரஸாக கொரோனா காணப்படுகிறது.

கொரோனா வைரஸ் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. கொரோனா வைரஸின் என்பது
  3. கொரோனா வைரஸ் தாக்கத்தின் அறிகுறிகள்
  4. கொரோனா வைரஸ் எப்படி பரவுகின்றது
  5. தனிமைப்படுத்தல்
  6. சுய தனிமைப்படுத்தல்
  7. கொரோனா வைரஸ் தாக்கத்தின் விளைவுகள்
  8. முடிவுரை

முன்னுரை

கொரோனா வைரசினால் உருவாகியுள்ள உலகளாவிய நோய் தொற்று காரணமாக முன்னொருபோதும் ஏற்பட்டிராத அழிவுகள் ஏற்பட்டு உள்ளது. இந்த கொரோனா வைரஸின் தாக்கமானது தற்போது முற்றாக அழிவுறாமல் சில பிரதேசங்களிலும் சில நாடுகளிடம் பரவிக் காணப்படுகிறது.

இந்நோயின் தொற்று முதன்முதலில் சீனாவின் வூகானில் 2019 டிசம்பரில் அடையாளம் காணப்பட்டு ஜனவரி 30 திகதி அன்று கொரோனா தொற்று உலக அளவில் பொது சுகாதார அவசரநிலையாகவும், மார்ச் 11 திகதி அன்று ஒரு பெருந்தொற்றாகவும் மாறி பல உயிர்களை காவு கொண்டது.

கொரோனா வைரஸ் என்பது

கொரோனா வைரஸ் என்பது பொதுவாக சளியையும் அதனை விட பாரதூரமான நோய்களையும் உருவாக்ககூடிய பாரிய வைரஸ் குழு ஆகும். இது ஒரு தொற்று நோயாகும்

2003 இன் சார்ஸ் வைரஸும் (Severe Acute Respiratory Syndrome) 2012 இன் மேர்சும் (Middle East Respiratory Syndrome) கொரோனா வைரஸின் வெவ்வேறு வடிவங்களால் உருவாகி உள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் அறிகுறிகள்

கொரோனா வைரஸ் தாக்கத்தின் அறிகுறிகளாக தொண்டை வலி, அதிகமான வறட்டு இருமல், மூச்சு திணறல், நெஞ்சு வலி, காய்ச்சல், பொதுவான இளைப்பு அடிக்கடி உடல் நலமின்மை, குமட்டல், வயிற்றோட்டம் வயிற்று வலி, வாந்தி, தோலில் பருக்கள் ஏற்பட்டு அவ்விடம் சிவத்தல், திடீரென ஏற்பட மணம் மற்றும் சுவை அறியாத தன்மை போன்றன காணப்படுகின்றன.

கொரோனா வைரஸ் எப்படி பரவுகின்றது

கொரோனா வைரஸ் சுவாசத்தொகுதியுடன் தொடர்புடைய ஒரு வைரஸ் ஆகும். ஆரம்பமாக நோய் தொற்றுக்குள்ளான நபர் ஒருவர் இருமுதல், தும்முதல் மூலம் வெளியாகும் துளிகள் அல்லது உமிழ்நீர் துளிகள் அல்லது மூக்கில் இருந்து வெளியாகும் திரவம் மூலம் வைரஸ் மற்றவர்களுக்கு பரவுகின்றது. அதனால் அந்த நபர் உரிய சுகாதார முறைகளை பின்பற்றுவது முக்கியமானதாகும்.

தனிமைப்படுத்தல்

கொரோனா வைரஸ் ஆல் பாதிக்கப்பட்டவராவென பரிசோதிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட ஒருவரை மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை மற்றும் உதவி உடன் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் முறை தனிமைப்படுதல் ஆகும்.

சுய தனிமைப்படுத்தல்

சுய தனிமைப்படுத்தல் என்பது கொரோனா வைரஸின் தாக்கத்திற்கான அறிகுறிகள் சாதாரணமாக காணப்படுபவர்கள் தங்களை தாங்களே தாங்கள் இருக்கும் இடத்தில் தனிமைப்படுத்தி மருத்துவ ஆலோசனைகளை தொடர்பாடல் ஊடகங்கள் மூலம் பெற்று தமக்கு தாமே சிகிச்சை அளித்துக்கொள்ளும் முறை சுய தனிமைப்படுத்தல் ஆகும்.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் விளைவுகள்

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக பல சாதகமான விளைவுகளும் பாதகமான விளைவுகளும் ஏற்பட்டு உள்ளது.

அந்த வகைகள் பாதகமான விடயங்களை நோக்குகின்ற போது, கொரோனா பெருந்தொற்று காலப்பகுதியில் பல மக்களும், விலங்குகளும் உணவு தட்டப்பாட்டின் காரணமாக பல இன்னல்களை எதிர்நோக்கினர்,

நோயின் தாக்கத்தினால் பசி பட்டினியினால் பலர் உயிரிழந்தனர், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்படைந்தது, மற்றும் பொருளாதாரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டது.

சாதகமான விடயங்களை நோக்குகின்ற போது, மக்கள் மத்தியில் ஒற்றுமை, பிறருக்கு உதவி செய்யும் மனப்பாங்கு, சமத்துவம் போன்ற பண்புகள் வளர்க்கப்பட்டது, பெரும்பான்மையானோர் தொழில்களை மேற்கொள்ள முடியாமல் வீட்டில் இருந்ததன் விளைவாக வீட்டுத்தோட்ட நடவடிக்கைகள் வளர்ச்சி அடைந்தது,

நிகழ் நிலை வியாபார நடவடிக்கைகள் தோற்றம் வளர்ச்சி பெற்றது, மக்களிடையே சுகாதாரம் பழக்கவழக்கங்களை அதிகரிக்க செய்துள்ளது, தொழில்நுட்பம் மற்றும் இணையத்தின் நன்மைகளை அனைத்து மக்களும் உணர்ந்துள்ளனர்.

முடிவுரை

கொரோனா வைரஸ் ஆனது ஒரு தொற்று நோயாக பரவி உலகில் பல இன்னல்களை ஏற்படுத்தியும் பல நன்மைகளை ஏற்படுத்தியும் உள்ளது. இந்த நோயினால் பல இன்னல்களை அனுபவித்த நாம் இது தொடர்பான விழிப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்.

You May Also Like:

தன் சுத்தம் கட்டுரை

சுத்தம் சுகம் தரும் கட்டுரை