கோட்டம் என்றால் என்ன

தரவு தொகுப்பினை பிரதிபலிக்க கூடியதொரு முறைமையாக இது காணப்படுகின்றது. புள்ளியியல் மற்றும் நிகழ்தகவு போன்ற விடயங்களை விளங்கிகொள்வதற்கும் கோட்டமானது துணை புரிகின்றது.

கோட்டம் என்றால் என்ன

கோட்டம் என்பது நிகழ்தகவு மற்றும் புள்ளியியலில் மெய்மதிப்புறு சமவாய்ப்பு ஒன்றின் சராசரியை பொறுத்து நிகழ்தகவுப் பரவலொன்றில் ஏற்பட்டுள்ள சமச்சீரற்ற தன்மையின் அளவையே கோட்டம் என கூறமுடியும்.

கோட்டத்தின் மதிப்பானது மிகை மதிப்பாகவோ அல்லது எதிர் மதிப்பாகவோ காணப்படும். இது தரவுகளை சேகரித்தல் மற்றும் ஒழுங்கமைத்தல் விடயங்களை மேற்கொள்கின்றது.

கோட்டத்தின் வகைகள்

இது நேர்கணிய கோட்டம் மற்றும் எதிர்கணிய கோட்டம் என இரு வகையாக காணப்படுகின்றது.

நேர்மறை கோட்டம்

ஒரு விநியோகமானது இடதுபுறத்தில் காணப்படுவதனை விட வலது பக்கத்தில் இருக்கும் போது அது நேர்மறை கோட்டமாக காணப்படும். விநியோகமானது நேர்மறையாக காணப்படும் போது அதன் மதிப்பு நேர்மறையாகவே காணப்படும். பெரும்பாலான மதிப்புக்கள் தனது சராசரியை விட்டு வெளியேறக்கூடியவையாக காணப்படுகின்றன.

எதிர்மறை கோட்டம்

இது இடது புறத்தில் அதிகமாக காணப்படும். எதிர்மறை கோட்டமானது ஏற்படும் போது பெரும்பாலான மதிப்புக்கள் சராசரியின் வலது பக்கத்தில் காணப்படுவதோடு தீவிர மதிப்புக்களாக இவ் எதிர்மறையான கோட்டமானது காணப்படும். இது எதிர்மறையான வளைவாக காணப்படுவதோடு முதலீட்டாளர்கள் பெரும் இழப்புக்களை இழக்க நேரிடும்.

கோட்டத்தின் நன்மைகள்

முதலீட்டு வருமானத்தின் செயல் திறனை அளவிடுவதற்கு கோட்டம் சிறந்ததாகும். விநியோகத்தின் தீவிரத்தை அடிப்படையாக கொண்டு தரவினை பகுப்பாய்வு செய்ய முதலீட்டாளர்கள் கோட்ட முறைமையை பயன்படுத்த முடியும்.

புள்ளி விபரவியல் முறைமையில் இதனை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். விநியோகத்திலிருந்து எவ்வளவு தரவு சமச்சீரற்றது என்பதை புரிந்து கொள்ள கோட்டமானது துணைபுரிகின்றது.

கோட்டத்தின் குறைபாடுகள்

சில சந்தர்ப்பங்களில் முதலீட்டாளருடைய தரவுத் தொகுப்பின் போக்கினை கணிப்பது கோட்டத்தின் மூலம் கடினமானதாக காணப்படல்.

உண்மையான முடிவை பிரதிபலிப்பதில் கடினம். அதாவது ஒரு ஆய்வாளர் நிதி மாதிரியை பயன்படுத்தி ஒரு சொத்தின் எதிர்கால செயல் திறனை கணிக்கிறார் என்ற போது இது ஒரு தரவாக காணப்படுகின்றது. ஆனால் தரவு விநியோகமானது வளைந்து காணப்படுமேயானால் அதனை உண்மை தன்மையை பெற்றுக் கொள்வது சிரமமானதாக காணப்படும்.

கோட்டத்தினை அளவிடுதல்

கோட்டமானது பல முறைகளில் அளவிடப்படுகின்றது. இருப்பினும் பியர்சன் பயன்முறை கோட்டம் மற்றும் பியர்சன் மீடிறன் வளைவு ஆகியவையே அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

அதாவது மாதிரி தரவு மூலம் வலுவான பயன்முறை காட்டப்படுகின்ற போது பியர்சன் பயன்முறை கோட்டமானது பயன்படுத்தப்படுகின்றது. தரவு பலமுறைகளை உள்ளடக்கியதாக காணப்படின் அதனுள் பியர்சின் சராசரி கோட்டம் பயன்படுத்தப்படும்.

கலைத்துறை சார்ந்த கோட்டம்

கோட்டமானது கணிதவியலில் மட்டுமல்லாது கலைத்துறை சார்ந்தவற்றிலும் பயன்படுத்தப்படுகின்றது. எண்ணியலில் பரவல் சார்பாக உருவாக்கிய தரவுகளின் சிதறல் படங்கள் மீது கோட்ட முறைமைகளை பயன்படுத்தி அடிப்படையான கோலங்களை கண்டறிய முடியும். மேலும் இதனூடாக சிறந்த கருதுகோள்களை பெற முடியும்.

கோட்ட முறைமைகளின் ஊடாக முன்கூட்டி செல்லும் எதிர்காலத்தை உய்த்தறிந்து கொள்ள முடியும். மேலும் கணினிகளின் வரவுடன் புள்ளியல் முறைகள் மூலம் பல்வேறு உந்துதல் முறைமைகளை கையாண்டு அதனூடாக பல விடயங்களை ஆராய முடிகின்றது.

ஆராய்ச்சி விடயங்களை திட்டமிடுதல் தகவல்களை திரட்டுவதன் மூலமும் பல்வேறு அணுகுமுறைகளை பயன்படுத்துவதன் மூலமும் சிறந்த நேர்கணிய பெறுபேறுகளை பெற்றுக் கொள்ள முடியும். சிறந்த மாதிரிகளை சேகரித்து தரவுகளை தொகுக்க முடியும். மேலும் இதன் மூலமாக கிடைக்கப் பெற்ற முடிவுகளை தொகுத்து காட்சி அளித்தல் போன்றவற்றை பெற முடியும்.

You May Also Like:

கலாச்சார மூலதனம் என்றால் என்ன

உணவு வலை என்றால் என்ன