சப்ஜா விதைகள் எள் போன்று கறுப்பு நிறத்தில் காணப்படும். திருநீற்றுப் பச்சை எனப்படும் மூலிகைச் செடியின் விதையே சப்ஜா விதைகள் ஆகும். சப்ஜா விதை எனப்படுவது கறுப்பு நிறத்தில் எள் போன்று காணப்படும்.
சப்ஜா விதைகளில் ஏராளமான மருத்துவ குணங்கள் காணப்படுகின்றன. இந்த பதிவில் நாம் சப்ஜா விதைகளின் நன்மைகள் பற்றி பார்ப்போம்.
சப்ஜா விதை நன்மைகள்
உடல் சூடு, உஷ்ணம் மற்றும் கண் எரிச்சல் போன்ற நோய்களால் அவதிப்படுபவர்கள் தினமும் இரவில் தூங்க முன்னர் சப்ஜா விதைகள் சிலவற்றை ஊற வைத்து தூக்கத்தால் காலையில் எழுந்ததும் பால், நாட்டுச் சர்க்கரை, ரோஸ் மில்க், நன்னாரி சர்பத், மில்க் ஷேக், தண்ணீர் போன்ற பானங்களில் ஏதேனும் ஒன்றுடன் சேர்த்து குடித்து வர குணமாகும்.
மலச்சிக்கல் நோயினால் அவதிப்படுபவர்கள் தினமும் 1 டீஸ்பூன் சப்ஜா விதைகளை சூடான பாலுடன் கலந்து குடித்து வர பிரச்சனை குணமாகும். சப்ஜா விதைகளில் அதிகளவில் நார்ச்சத்து காணப்படுவதால் இது மலச்சிக்கல் பிரச்சனையை எளிதில் குணப்படுத்தும்.
சப்ஜா விதைகளை தினமும் ஊற வைத்து வெறுமனே அல்லது பாலுடன் சேர்த்து உண்டு வர மூல நோய் பிரச்சனை குணமாகும். அதுமட்டுமல்லாமல் உடலில் உள்ள நச்சுக் கழிவுகள் அனைத்தும் வெளியேறி விடும்.
சப்ஜா விதைகளில் குறைந்தளவில் கலோரிகள் காணப்படுகின்றன. அதாவது 1 டீஸ்பூன் சப்ஜா விதைகளில் 2 – 4% கலோரி அளவே காணப்படுகின்றது. அதிக எடை மற்றும் தொப்பை உடையவர்கள் ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சப்ஜா விதைகளினை உண்டு வந்தால் உடல் எடை மற்றும் தொப்பை என்பன குறையும். சப்ஜா விதைகளை உண்பதனால் பசி எடுக்காது.
சப்ஜா விதைகள் 1 டீஸ்பூன் அளவு எடுத்து நீரில் ஊற வைத்து காலையில் உண்டு வர உடலில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படுகின்றது. இந்த சப்ஜா விதைகள் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த நிவாரணியாக அமைகிறது. அதுமட்டுமல்லாமல் சப்ஜா விதைகள் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றன.
சப்ஜா விதைகளில் அதிகளவில் இரும்புச்சத்து, ஒமேகா3, Fatty acids போன்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுவதால் இவை இரத்தசோகை ஏற்படாமல் பாதுகாப்பதுடன் உடலில் காணப்படும் கெட்ட கொழுப்புக்களை அழிக்கின்றன.
சப்ஜா விதைகளை தினமும் இரவு தூங்கச் செல்லும் போது ஊற வைத்து காலையில் எழுந்ததும் பாலுடன் சேர்த்து உண்டு வர நெஞ்செரிச்சல், அசிடிட்டி போன்ற நோய்கள் குணமாகும்.
அதுமட்டுமல்லாது வயிற்றுப்புண்களை குணப்படுத்தும். இவை தவிர சிறுநீர் பாதையில் உண்டாகும் புண்கள், சிறுநீரக எரிச்சல், சிறுநீர் தொற்று போன்ற நோய்களை குணப்படுத்துகிறது.
சப்ஜா விதைகளை இரவில் ஊற வைத்து தினமும் காலையில் பாலுடன் சேர்த்து உண்டு வர பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் உருவாகும் அடிவயிற்றுவலி, வெள்ளைப்படுதல் போன்ற நோய்கள் விரைவில் குணமாகும்.
சப்ஜா விதைகளை 1 டீஸ்பூன் அளவில் எடுத்து சில மணிநேரம் இளநீரில் ஊற வைத்து பின்னர் எடுத்து உண்டுவர மஞ்சள் காமாலை நோயால் பீடிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக மஞ்சளை காமாலை நோய் குணமாகிவிடும்.
அதிகமான கோடை காலங்களில் குளிர்பானத்தில் இந்த சப்ஜா விதைகளை கலந்து பருகுதல் உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும்.
You May Also Like: