சிற்றிலக்கியம் என்றால் என்ன அதன் வகைகள்

sitrilakiyam endral enna in tamil

தமிழ் இலக்கியங்கள் சிற்றிலக்கியங்கள், பேரிலக்கியங்கள் என இரண்டு வகைப்படும். அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு விடயங்களில் ஏதேனும் ஒன்றோ அல்லது, பலவோ விடுபட்டு மற்றையதைச் சொல்வதே சிற்றிலக்கியம் ஆகும்.

அதாவது பாட்டுடைத் தலைவனின் வாழ்வில் சிறுகூறினை மட்டும் எடுத்துக் கொண்டு அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் நான்கு உறுதிப்பொருள்களுள் ஒன்று மட்டும் பாடப்படவதே சிற்றிலக்கியம் என வரையறை செய்யலாம்.

வடமொழியில் பிரபந்தம் என்னும் சொல்லை தழுவியே தமிழில் சிற்றிலக்கியம் என்னும் வார்த்தை வந்தது. ‘பிரபந்தம்’ என்னும் சொல்லுக்குப் பொருள் ‘நன்கு கட்டப்பட்டது’ என்பது பொருளாகும். தமிழில் பிரபந்தம் என்னும் சொல்லாட்சி நாதமுனிகளே முதன் முதலில் வழங்கினார்.

தமிழில் சிற்றிலக்கியங்கள் தோன்றிய காலம்

பன்னிரண்டாம் நூற்றாண்டின் முந்திய காலகட்டத்திலேயே சிற்றிலக்கியங்கள் பெரும்பாலும் தோன்றியிருக்கலாம் என கூறப்படுகின்றது. இருப்பினும் குறிப்பிட்டுக் கூறக் கூடிய காலம் நாயக்கர் காலமாகும்.

சிற்றிலக்கியத்திற்கு உண்டான இலக்கியத்தை கூறக் கூடிய படைப்புகளை பாட்டியல் நூல்கள் என்பர்.

உதாரணமாக வெண்பா பாட்டியல், சிதம்பரப் பாட்டியல், நவநீதப் பட்டியல் இவ்வாறு சிற்றிலக்கியத்திற்கான இலக்கணம் கூறக்கூடிய படைப்புகள் பல இருந்தாலும், சிற்றிலக்கியத்திற்கு தெளிவாக இலக்கணத்தைக் கூறக்கூடிய படைப்பு பன்னிரு பாட்டியலாகும்.

சிற்றிலக்கிய வகைகள்

பொதுவாக சிற்றிலக்கியத்தின் எண்ணிக்கைகள் அல்லது, வகைகள் 96 ஆகும். எனினும் ஒரு சில படைப்புகளில் இந்த எண்ணிக்கை வேறுபடுகின்றது.

உதாரணமாக பன்னிரு பாட்டியலில் 62 சிற்றிலக்கியங்கள் மட்டும் இருப்பதாக கூறப்படுகின்றது. வெண்பா பாட்டியலில் 52 சிற்றிலக்கியங்கள் எனவும், நவநீதப் பாட்டியலில் 45 சிற்றிலக்கியங்கள் எனவும், சிதம்பரப் பாட்டியலில் 59 சிற்றிலக்கியங்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

எனினும், முதன் முதலில் சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கை 96 வகை எனக் கூறப்பட்டது பிரபந்த மரபிலேயே ஆகும். இதில் ‘பிள்ளைக்கவி முதல்‌ புராணம்‌. ஈறாகப்‌ பிரபந்தம்‌ தொண்ணூற்றாறு’ எனக் கூறப்பட்டுள்ளது.

பரணி

பரணி என்பது ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரனுக்குப் பாடப்படுவதாகும். பரணி நூல்களில் முதலாவது எழுந்த நூல் கலிங்கத்துப் பரணி ஆகும். இந்த பரணி பாடுவதில் வல்லவர் ஜெயங்கொண்டார் ஆவார். பரணிக்கோர் ஜெயங்கொண்டார் என பலபட்டடை சொர்க்கநாதர் பாடியுள்ளார். பெரியவர்களை குழந்தையாக பாவித்துப் பாடும் இலக்கியம் பிள்ளைத் தமிழாகும்.

பிள்ளைக்கவி, பிள்ளைப்பாட்டு என்ற பெயர்களினாலும் இது அழைக்கப்படுவது உண்டு. ஆண்பால் பிள்ளைத்தமிழ், பெண்பால் பிள்ளைத்தமிழ் என இருவகைப்படும். மூன்று மாதம் முதல் இருபத்தொரு மாதம் வரையான குழந்தையின் வாழ்க்கைக் காலத்தைப் பத்துப் பருவங்களாகப் பிரித்துக் காண்பர்.

சிவன் மட்டுமே பிள்ளைத்தமிழ் பாடப்படாமல் விலக்கப்பட்ட ஒரே ஒரு கடவுளாவார். பிள்ளைத்தமிழ் பத்து பருவங்களில் பாடப்பட வேண்டும் என்பது வரையறை ஆகும். எனினும், ஆண்டாள் பிள்ளை தமிழ் பதினோரு பருவங்களிலும், தில்லை சிவகாமியம்மைப் பிள்ளைத்தமிழ் பன்னிரண்டு பருவங்களிலும் பாடப்பட்டுள்ளது.

பருவத்துக்கும் பத்துப் பாடல்களைக் கொண்டு பிள்ளைத்தமிழ் பாடப்படும். இரு பாலினத்தினருக்கும் காப்பு, செங்கீரை, தாள், சப்பானி, முத்தம், வருகை அம்புலி ஆகிய ஏழு பருவங்களும் இருபாலருக்கும் பொதுவாகும். தமிழில் தோன்றிய முதல் பிள்ளைத்தமிழ் குலோத்துங்க சோழன் பிள்ளை தமிழாகும்.

You May Also Like:

இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது

பஞ்சும் பசியும் எனும் நாவலை எழுதியவர்