சூழ்நிலை மண்டலம் என்றால் என்ன

soolnilai mandalam enral enna

மனிதன் மற்றும் விலங்குகள் மற்றும் தாவரங்கள் வாழக்கூடிய பகுதியையும் அவற்றைச் சுற்றியுள்ள சூழலை நாம் சுற்றுச் சூழல் என்கின்றோம். மேலும், சுற்றுச் சூழல் என்பது நம்மைச் சுற்றியுள்ள அனைத்தையும் குறிக்கும்.

இவை உயிருள்ளவையாகவோ அல்லது, உயிரற்றவையாகவோ இருக்கலாம். இந்த உயிரினங்கள் ஒன்றையொன்று சார்ந்து வாழ்வதுடன் சூழலுக்கு ஏற்ற வகையில் தம்மை வடிவமைத்தும் கொள்கின்றன.

இந்தச் சுற்றுச் சூழலில் ஏற்படும் மாற்றங்கள் சூழ்நிலை மண்டலத்தில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்தும். தற்காலத்தில் சூழ்நிலை மண்டலமானது சவால்களுக்குட்பட்டு வருவதனைக் காண முடிகின்றது.

அதனைப் பாதுகாக்க வேண்டுமெனில், கழிவுப் பொருட்களைக் குறைக்க வேண்டும். அல்லது, கழிவுப் பொருட்களை உரியமுறையில் பாதுகாப்பாக அகற்ற வேண்டும் அல்லது, மறுசுழற்சிக்கு உட்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு மனிதனாலும் உருவாக்கப்படும் கழிவுப் பொருட்களினாலும் சூழ்நிலை மண்டலமானது பாதிப்பைச் சந்திக்கின்றது என்பதனை நாம் அனைவரும் உணர வேண்டும்.

எனவே தேவையற்ற பொருட்களையும் அதிகம் குப்பைகளை உருவாக்கும் பொருட்களையும் பயன்படுத்துவதனைக் குறைக்க வேண்டும். ஒருமுறை மட்டும் பயன்படுத்தி வீணாகப் போகும் பொருட்களுக்கு மாற்றீடாக மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் பொருட்களைப் பயன்படுத்தலாம். உரமாக மாற்றலாம்.

அதாவது மக்கும் குப்பைகளை உரமாகப் பயன்படுத்தலாம். குப்பைகளிலிருந்து பெறப்படும் உரம் தாவரங்களுக்கு இயற்கை உரமாகப் பயன்படுவதுடன் மண் வளத்தையும் பாதுகாக்கும்.

சூழ்நிலை மண்டலம் என்றால் என்ன

உயிருள்ளவை மற்றும் உயிரற்றவை யாவும் ஒன்றுசேர்ந்த ஒரு கட்டமைப்பே சூழ்நிலை மண்டலம் என அழைக்கப்படுகின்றது.

மேலும் சூழ்நிலை மண்டல எனப்படுவது ஒரு விதத்தில் சக்தியின் ஓட்டத்தை அல்லது, கடத்தலை முக்கியமாகக் கொண்டுள்ளது என்பதனை ஒப்புக்கொள்வோமாயின், அது ஒருவகைப் பிராணிகளின் அல்லது, உயிரிகளின் செயல்நிலைத் தொகுப்பு (Collection of niches) எனலாம்.

சூழ்நிலை மண்டலத்தின் வகைகள்

சூழ்நிலை மண்டலமானது இரண்டாக வகைப்படுத்தப்படுகின்றது. இதில் இயற்கைச் சூழ்நிலை மண்டலமானது நிலவாழ் சூழ்நிலை மண்டலம், நீர்வாழ் சூழ்நிலை மண்டலம் என இரண்டாகப் பிரிக்கப்படுகின்றது.

இயற்கைச் சூழ்நிலை மண்டலம் என்பது, மனிதத் தலையீடு ஏதுமின்றி தாமாகவே இயற்கையாக உருவாகுபவை ஆகும். இது நீர்வாழ்ச் சூழ்நிலை மண்டலமாகவோ (நீர்வாழ் சூழ்நிலை மண்டலத்திற்கு எடுத்துக்காட்டு குளம், ஆறு, கடல், ஏரி, குட்டைகள் ஆகும்) அல்லது, நிலவாழ்ச் சூழ்நிலை மண்டலமாகவோ இருக்கலாம். (நிலவாழ் சூழ்நிலை மண்டலத்திற்கு எடுத்துக்காட்டு காடு, மலைகள், பாலைவனங்கள் ஆகும்).

நீர்வாழ் சூழ்நிலை மண்டலம் என்பது, நீரில் காணப்படும் சூழ்நிலை மண்டலமாகும். நிலவாழ்ச் சூழ்நிலை மண்டலம் என்பது நீருக்கு வெளியில் அதாவது நிலப்பகுதியில் காணப்படும் சூழ்நிலை மண்டலமாகும்.

செயற்கைச் சூழ்நிலை மண்டலம் என்பது மனிதர்களால் உருவாக்காப்பட்டு பராமரிக்கப்படும் சூழ்நிலை மண்டலமாகும். எனினும் இவை இயற்கைச் சூழ்நிலை மண்டலங்களின் சில பண்புகளையும் கொண்டுள்ளன. எனினும் இவை யாவும் இயற்கைச் சூழ்நிலை மண்டலங்களையும் விட மிக எளிமையானவையாகும்.

செயற்கைச் சூழ்நிலை மண்டலமும் நிலவாழ்ச் சூழ்நிலை மண்டலம் (எடுத்துக்காட்டு: நெல் வயல், தோட்டம்),

நீர்வாழ்ச் சூழ்நிலை மண்டலம் (எடுத்துக்காட்டு: மீன்வளர்ப்புத் தொட்டி, மனிதனால் கட்டப்படும் குளம், நீர்வாழ் பொருட்காட்சி சாலை) என இரண்டு வகைப்படுகின்றன.

You May Also Like:

இயற்கை வளங்கள் கட்டுரை

கடல் வளம் பற்றிய கட்டுரை