டிஜிட்டல் இந்தியாவில் பெண்களின் பங்கு கட்டுரை

digital indiavil pengalin pangalippu

டிஜிட்டல் இந்தியாவில் பெண்களின் பங்கு கட்டுரை

இந்தியாவின் சிறப்பான திட்டங்களை ஒன்றாக காணப்படுகின்ற டிஜிட்டல் இந்தியா என்ற திட்டத்தில் பெண்களின் பங்களிப்பானது குறைவாகவே காணப்படுகின்றமை மறுக்க முடியாத உண்மையாகும்.

டிஜிட்டல் இந்தியாவில் பெண்களின் பங்கு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • டிஜிட்டல் இந்தியா திட்டம்
  • திட்டத்தின் நோக்கம்
  • டிஜிட்டல் இந்தியா வாரத்தின் நோக்கங்கள்
  • பெண்களின் பங்களிப்பின்மைக்கான காரணங்கள்
  • முடிவுரை

முன்னுரை

இந்தியாவில் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் இந்தியா திட்டமானது சிறந்ததோர் திட்டமாக காணப்படுகிறது.

இத்திட்டத்தினை மத்திய அரசு பொறுப்பேற்று உள்ளது. இதற்கான செயல்பாடுகளிலும் மத்திய அரசானது வேகம் காட்ட தொடங்கியுள்ளது.

ஆனால் இந்த திட்டத்தில் பெண்களின் பங்களிப்பு என்பது குறைவானதொன்றாகவே காணப்படுகின்றமை வேதனைக்குரிய விடயமாக காணப்படுகிறது.

இக்கட்டுரையில் டிஜிட்டல் இந்தியா திட்டம் பற்றியும் அதில் பெண்களின் பங்களிப்பு பற்றியும் நோக்குவோம்.

டிஜிட்டல் இந்தியா திட்டம்

இந்திய அரசின் தலையாயத் திட்டங்களில் ஒன்றாக “டிஜிட்டல் இந்தியா” என்கின்ற திட்டம் காணப்படுகிறது.

இதனுடைய நோக்கம் இந்திய மக்களை டிஜிட்டல் அதிகாரம் உள்ளவர்களாகவும், ஒரு அறிவார்ந்த பொருளாதாரமாகவும் மாற்றம் செய்வது ஆகும்.

இது இந்திய நாட்டின் பிரதமரான திரு.நரேந்திர மோடி அவர்களால் 2015 ஆம் ஆண்டு ஜூலை முதலாம் தேதி தொடங்கப்பட்டது. இதனுடன் பல புது சேவைகளும் தயாரிப்பகளும் (டிஜிட்டல் பெட்டகம்) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

திட்டத்தின் நோக்கம்

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் பிரதான நோக்கங்களாக மூன்று காணப்படுகின்றன. அவையாவன,

  • ஒவ்வொரு குடிமகனுக்கும் உட்கட்டமைப்பு வசதி பயன்பாடு.
  • தேவைக்கேற்ற ஆளுமை மற்றும் சேவைகள்.
  • ஒவ்வொரு குடிமகனுக்கும் அதிகாரம் மேம்பாடு.

டிஜிட்டல் இந்தியா வாரத்தின் நோக்கங்கள்

டிஜிட்டல் இந்தியா வாரத்தின் நோக்கங்களாக பின்வருவன காணப்படுகின்றன. அவையாவன,

  • மிண்ணிம மையங்களான பொது சேவை மையங்கள், அஞ்சலகங்கள், பள்ளிகள், கிராம சபைகள் போன்றவற்றில் பிரச்சாரம், பிரசுரங்கள் மற்றும் கல்வியும் மூலமாக மக்களை சென்றடைதல்.
  • அனைத்து இணைய பயனாளிகளையும் டிஜிட்டல் ஊடகப் பிரச்சாரங்கள் மூலமாக ஒன்றிணைத்தல்.
  • எல்லோருக்கும் இத்திட்டத்தின் நோக்கம், சேவைகள் மற்றும் பயன்கள் குறித்து தெரியப்படுத்துதல்.
  • மின் சேவைகள் குறித்து பிரபலப்படுத்தப்படுவதும் அதன் சென்றடையும் திறனை மேம்படுத்துவதுமாகும்.
  • குடிமக்களை டிஜிட்டல் இந்தியா திட்டத்துடன் இணைய ஊக்கப்படுத்துவதும் மற்றும் உற்சாகப்படுத்துவதும் ஆகும்.

இதையே டிஜிட்டல் இந்தியா வாரத்தின் நோக்கங்களாக காணப்படுகின்றன.

பெண்களின் பங்களிப்பின்மைக்கான காரணங்கள்

இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துவோரில் பெண்களின் எண்ணிக்கை என்பது குறைந்த சதவீதமாகவே காணப்படுகிறது. இதனை ஆண்களுடன் ஒப்பிடும் போது மூன்றில் ஒரு பங்கினர் மாத்திரமே இணையத்தை பயன்படுத்துபவராக காணப்படுகின்றனர்.

இந்தியாவில் மொபைல் பயன்பாட்டை எடுத்துக் கொள்வோமாயின், 43 சதவிகித ஆண்கள் மொபைல் பயன்படுத்துகின்றனர். ஆனால் பெண்களில் 28% மாத்திரமே மொபைல் பயன்படுத்துகின்றனர்.

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளிலும் மற்றும் மத்திய பிரதேசத்தில் தற்பொழுதும் பெண்கள் கல்வி கற்கவும் மொபைல் பயன்படுத்துவதற்கும் பல தடைகள் காணப்படுகின்றன.

தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை 5 சதவீதமாக மாத்திரமே காணப்படுகிறது. பெண்களுக்கான தொழில்நுட்ப பணிகள் பல இடங்களில் புறக்கணிக்கப்படுகின்றன.

இதுபோன்ற பல்வேறு காரணங்களால் டிஜிட்டல் இந்திய திட்டத்திற்கு பெண்களின் பங்களிப்பு என்பது குறைவானது ஒன்றாகவே காணப்படுகின்றது.

முடிவுரை

டிஜிட்டல் இந்தியா என்ற திட்டமானது நாட்டினையும் நாட்டினுடைய பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஒரு சட்டமாகும்.

இதில் பெண்களின் பங்களிப்பு என்பது குறைவானதாக காணப்படுவதற்கு பெண்களுக்கு எதிரான பல அடக்குமுறைகள் நிகழ்வதே காரணமாக காணப்படுகின்றது.

இவற்றை சரி செய்வதற்கு பெண்களுக்கு தொழில்நுட்பம் சார் கல்வியிலும், பணியிலும் அதிக முன்னுரிமை கொடுக்கப்படலும், அடக்குமுறைகள் ஒழிக்கப்படுவதும் அவசியமாகும்.

You May Also Like:

மகளிர் தினம் கட்டுரை

பெண் கல்வி கட்டுரை