உலகில் காணப்படக்கூடிய பல்வேறு நாடுகள் நவீனத்துவத்தில் இருந்து மாறி அதிநவீனத்துவத்தில் காலடி எடுத்து வைத்திருப்பதனை காணலாம். இதன் அடிப்படையாகவே இந்தியாவையும் அதிநவீனத்துக்கு எடுத்துச் செல்லும் நோக்காகவே இந்த டிஜிட்டல் இந்தியா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டிஜிட்டல் இந்தியா கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- டிஜிட்டல் இந்தியவின் தொலைநோக்கம்
- டிஜிட்டல் இந்தியாவின் மூலம் கிடைக்கக்கூடிய தொழில் வாய்ப்புகள்
- புதிய கல்வி நடவடிக்கைகள்
- புதிய நகர உருவாக்கங்கள்
- முடிவுரை
முன்னுரை
2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதி, டிஜிட்டல் அதிகாரம் பெற்ற சமூகம் மற்றும் அறிவுப் பொருளாதாரமாக இந்தியாவை மாற்றும் நோக்குடன் முன்வைக்கப்பட்ட ஓர் திட்டமே இந்த டிஜிட்டல் இந்தியா திட்டமாகும்.
தற்காலங்களில் தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் வலுப்பெற்றுள்ளமையினால் கிராமம் நகரம் என அனைத்து பிரதேசத்து மக்களுக்கும் தொழில்நுட்பத்தின் நன்மைகள் கிடைக்கும் வகையிலேயே இந்த டிஜிட்டல் இந்தியா திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
டிஜிட்டல் இந்தியவின் தொலைநோக்கம்
டிஜிட்டல் இந்தியா திட்டமானது முக்கியமாக மூன்று தொலைநோக்கு அம்சங்களை கொண்ட அமைந்ததாகவே காணப்படுகின்றது.
அந்த வகையில் முதலாவது ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு முக்கியப் பயன்பாடாக டிஜிட்டல் உற்கட்டமைப்பு, இரண்டாவது தேவைகளுக்கு ஏற்ப ஆளுகை மற்றும் சேவைகள், மூன்றாவது குடிமக்களின் டிஜிட்டல் அதிகாரமளித்தல்.
இவ்வாறான மூன்று தொலை நோக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டே இந்த டிஜிட்டல் இந்தியா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டமையினை காணலாம்.
டிஜிட்டல் இந்தியாவின் மூலம் கிடைக்கக்கூடிய தொழில் வாய்ப்புகள்
தொழில்நுட்பம் சார் புதிய வேலை வாய்ப்புகளுக்கு அதிகம் இடம் அளிப்பதாக இந்த டிஜிட்டல் இந்தியா திட்டம் காணப்படுகின்றது.
அந்த வகையில் இந்தியாவுக்கு தேவையான மின்னணுப் பொருட்களில் 65% வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதனால், இவ்வாறான பொருட்களை உற்பத்தி செய்வதற்கான ஊக்குவிப்புகளையும், ஆதரவினையும் வழங்குவதாக இந்த திட்டம் காணப்படுகின்றது.
அத்தோடு அனைத்து செயற்பாடுகளும் தொழில்நுட்பமயமாக்கத்தின் கீழ் கொண்டுவரப்படுவதன் மூலம் 18 இலட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் எனவும் அறியப்படுகிறது.
புதிய கல்வி நடவடிக்கைகள்
டிஜிட்டல் இந்தியா செயற்பட்டத்தினை சிறப்பாக செயல்படுத்துவதற்காக மாணவர்களை அரசாங்கம் சிறந்த முறையில் தயார்படுத்துவதனை காணலாம்.
அதன் அடிப்படையிலேயே தற்காலங்களில் மாணவர்கள் கற்க கூடிய கல்வித்துறை எதுவாக இருந்தாலும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் செல்வாக்கு அங்கு மேலோங்கி இருப்பதனையும் நாம் காண முடியும்.
அந்த வகையில் பொறியியல், மருத்துவம், வானவியல் மற்றும் ஆராய்ச்சி தொடர்பான துறைகளிலும் இணையத்தால் இணைக்கப்பட்ட பொருள்கள் பற்றிய பாடமும் இணைக்கப்பட்டிருப்பதனை காணலாம்.
மேலும் இணையத்தால் பிணைக்கப்பட்ட பொருள்கள் பற்றிய கல்வி சான்றிதழ் கற்கையாக கல்வி நிறுவனங்களினால் அறிமுகம் செய்யப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
புதிய நகர உருவாக்கங்கள்
டிஜிட்டல் இந்தியாவின் மிக முக்கியமான ஒரு கருத்தாகவே புதிய நகரங்களை உருவாக்குதல் என்பது காணப்படுகின்றது.
அந்த வகையில் இந்தியாவில் காணப்படக்கூடிய சுமார் 6 லட்சம் கிராமங்களில் குறைந்தது இரண்டரை லட்சம் கிராமங்களையாவது ப்ராட் பேண்ட் இணையத்துக்கான தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கின்றது.
மேலும் இந்தியாவில் முக்கியமான பகுதிகளில் 100 ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கி அவற்றில் அதிநவீன வசதிகள் ஏற்பாடு செய்யப்படும் என மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
முடிவுரை
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் அரசாங்கம் மக்களுக்கு எங்கும் எதிலும் ஸ்மார்ட் வசதிகளையே செய்து கொடுக்க முயற்சிக்கின்றனர்.
அந்த வகையில் உலக நாடுகளுள் இந்தியா தனக்கான செல்வாக்கினை அதிகப்படுத்தி கொள்வதற்கான ஒரு உந்து சக்தியாகவே இந்த டிஜிட்டல் இந்தியா திட்டம் காணப்படும் என கருதலாம்.
You May Also Like: