டெங்கு ஒழிப்பு கட்டுரை

dengue olippu katturai in tamil

டெங்கு ஒழிப்பு கட்டுரை

நுளம்புகளால் ஏற்படக்கூடிய ஆள்கொல்லி நோய்களுள் டெங்கு முக்கியமான ஒன்றாகும். அதிகமாக உயிர்ச் சேதங்களை ஏற்படுத்தக்கூடிய இந்த டெங்கிலிருந்து ஒவ்வொருவரும் பாதுகாப்பு பெற்றுக் கொள்வது அவசியமாகும்.

இந்த டெங்கு தொடர்பான அச்சம் மக்கள் மத்தியில் பரவலாக காணப்படுவதனை அவதானிக்க முடிகின்றது.

டெங்கு ஒழிப்பு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • டெங்கு என்றால் என்ன
  • டெங்கு வைரஸை கட்டுப்படுத்தும் விதம்
  • டெங்குவினால் ஏற்படும் பாதிப்புக்கள்
  • டெங்கு ஏற்படாமல் தடுக்கும் வழிமுறைகள்
  • முடிவுரை

முன்னுரை

உலகில் பல்வேறு நாடுகளில் உயிராபத்துகளை ஏற்படுத்தும் மிக முக்கியமான நோய்களில் டெங்குவும் ஒன்றாகும்.

எமது நாட்டை பொறுத்தவரையில் பல இலட்சக்கணக்கான உயிர்களை அச்சுறுத்திய ஒரு நோயாகவே இது காணப்படுகின்றது. மனித நடவடிக்கைகளின் காரணமாகவே இந்த டெங்கு அதிகமாக பரவுகின்றது.

எனவே டெங்கு பற்றியும் அதனை எவ்வாறு ஒழிப்பது என்பது பற்றியும் பின்வருமாறு அவதானிக்கலாம்.

டெங்கு என்றால் என்ன

டெங்கு என்பது ஒரு வகையான வைரஸ் கிருமி ஆகும். அதாவது இடிஸ் எனும் பெண் நுளம்பின் மூலமாக இது பரவுகின்றது.

மனிதனில் இருந்து இன்னொரு மனிதனுக்கு நோய் காவி நுளம்பின் ஊடாக பரப்பப்படுகின்றது. டெங்கு ஆரம்பத்தில் ஆப்பிரிக்க கண்டத்தில் உருவான போதும் தற்போது உலகெங்கிலும் உள்ள வெப்பமண்டல பல நாடுகள் அனைத்திலும் பரவியுள்ளது.

டெங்கு வைரஸை கட்டுப்படுத்தும் விதம்

டெங்கு நோய்க்கு ஆளான ஒருவருக்கு கடுமையான காய்ச்சல் வாந்தி என்பன ஏற்படுவதனால் அவருடைய உடம்பில் நீர் சத்துக்கள் குறைவடையும்.

எனவே நீர்ச்சத்து உள்ள உணவுகளையும் அதிகமாக தண்ணீரையும் குடித்தல், குருதிச்சிறுதட்டுக்கள் குறைவதால் தினமும் பப்பாளி இலைச்சாற்றை குடித்தல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்க கூடிய உணவுகளை உட்கொள்ளுதல்,

நன்றாக ஓய்வெடுத்தல் மற்றும் நோய் தொற்று ஏற்பட்ட உடனேயே வைத்தியர்களை நாடி சிகிச்சை பெறுதல் போன்றவற்றின் மூலமாக டெங்குவை ஒருவர் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்.

டெங்குவினால் ஏற்படும் பாதிப்புக்கள்

டெங்கு வைரஸ் ஆனது ஒருவருடைய உடம்புக்குள் சென்றால் அவருடைய உடம்பை பலவீனப்படுத்தி வயிற்று வலி, தலைவலி, வாந்தி போன்ற நோய்களை ஏற்படுத்துவதோடு

மூக்கு வழியான குருதிப் பெருக்கு, சிறுநீரோடு குருதி வெளியாகுதல், சுவாச சிக்கல்கள் ஏற்படுதல் மற்றும் நாளடைவில் உயிரையே கொல்லுதல் போன்றவாறான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. எனவே நாம் டெங்கு பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

டெங்கு ஏற்படாமல் தடுக்கும் வழிமுறைகள்

டெங்கு நுளம்புகள் தண்ணீரில் முட்டையிட்டு பெருகு அதன் மூலம் பெறுவதனால் எமது வீட்டு சூழலில் இருக்கக்கூடிய நீர் நிலைகள், நீர் தொட்டிகள் இன்பவற்றை அடிக்கடி சுத்தம் செய்வதோடு தேவையற்ற நீர் நிலைகளை அகற்றவும் வேண்டும்.

மேலும் தூங்கும் முன் நுளம்பிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக நுளம்பு வலைகளை பயன்படுத்துதல் அல்லது நுளம்பை விரட்டக்கூடிய ஏதாவது பொருட்களை பயன்படுத்துதல்

மற்றும் இந்த டெங்கு வைரஸின் மூலம் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை மக்களுக்கு கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற வழிமுறைகளின் ஊடாக டெங்கு ஏற்படாமல் தடுத்துக் கொள்ள முடியும்.

முடிவுரை

எம்மையும் எம்மைச் சார்ந்தவர்களையும் டெங்கு போன்ற கொடிய நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக எங்களது சூழலை நாம் எப்பொழுதும் சுத்தமாகவே வைத்திருக்க வேண்டும்.

ஆரோக்கியமான நாட்டையும் எதிர்காலத்தையும் உருவாக்க டெங்கு போன்ற கொடிய நோய்கள் தொற்றாவண்ணம் பாதுகாப்போடு செயற்படுவதே சிறந்ததாகும்.

You May Also Like:

சுத்தம் சுகம் தரும் கட்டுரை

சாலை பாதுகாப்பு கட்டுரை