தரவுகளை உள்ளீடு செய்தல் என்றால் என்ன

இன்று பல்வேறு செயற்பாடுகளின் போது தரவு உள்ளீட்டு முறைமையினை பயன்படுத்துகின்றனர். தரவு உள்ளீட்டின் மூலமாக இலகுவாக தரவுகளை சேகரிக்க முடியும்.

தரவுகளை உள்ளீடு செய்தல் என்றால் என்ன

தரவுகளை உள்ளீடு செய்தல் என்பது கணினி அல்லது பிற மின்னணு சாதனத்தில் தரவுகளை உள்ளீட்டு தரவுத் தளத்தில் சேமிப்பதே தரவுகளை உள்ளீடு செய்தல் எனப்படும்.

இது தட்டச்சு அல்லது இயந்திரம் ஊடாகவே மேற்கொள்ள முடியும். இன்று கணினியினை பயன்படுத்தி இதனை மேற்கொள்கின்றனர். இன்று பெரும்பாலான நிறுவனங்களுக்கு அடிப்படை மற்றும் அவசியமானதொன்றாக தரவுகளை உள்ளீடு செய்தல் முறைமை காணப்படுகின்றது.

தரவு உள்ளீடுகளானவை கையால் எழுதப்பட்ட அல்லது ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்கள், விரிதாள், ஆடியோ, வீடியோ படிவங்களின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றன.

துல்லியமாக தரவினை பகுப்பாய்வு செய்து திட்டங்களை உருவாக்குவதற்கானதொரு அடிப்படையாக தரவுகளை உள்ளீடு செய்தல் காணப்படுகின்றது.

தரவுகளை உள்ளீடு செய்தலின் நன்மைகள்

நிறுவனங்கள் தனது வணிக நடவடிக்கைகளை வளர்ப்பதில் மிகவும் பிரதானமானதாக தரவுகளை உள்ளீடு செய்தல் காணப்படுகின்றது. அதாவது பெரிய வணிகத்துறை அல்லது நிறுவனங்களை நிர்வகிப்பதற்கு துணைபுரிகின்றது.

நிறுவனங்களின் நிர்வாக ரீதியான செலவுகள் மற்றும் தகவல்களை இலகுவாக பெற்றுக்கொள்ள தரவு உள்ளீட்டு முறைமை உதவுகின்றது.

விலைப்பட்டியல் முதல் சிறந்த பதிவுகளை மேற்கொள்ளுதல் மற்றும் ஒரு தகவலை துள்ளியமானதாகவும், பாதுகாப்பாகவும் உயர் தரவு உள்ளீட்டு முறைமைகளை மேற்கொள்வதற்கும் இது துணைபுரிகின்றது.

பல்வேறு வகையான லாபத்தினை ஈட்டிக்கொள்வதற்கு இத்தரவு உள்ளீட்டு முறைமை துணைபுரிகின்றது. தரவுகளை உள்ளீடு செய்வதன் மூலமாக குறைந்த செலவில் தரவுகளை உள்ளீடு செய்ய முடியும்.

தரவு உள்ளீடு செய்தலின் தீமைகள்

தரவு உள்ளீடு செய்தலில் காலதாமதம் ஏற்படல். அதாவது போதியளவு நேரமின்மை காரணமாக தரவு உள்ளீடு முறைமை ஊழியர்களை பாதிக்கின்றது.

தகவல்களின் பற்றாக்குறை ஊடாக ஊழியர்களை பாதிப்படையச் செய்வதோடு அவர்களின் முன்னேற்றத்தினையும் தடை செய்கின்றது.

தவிர்க்கக்கூடிய பிழைகள் மீண்டும் மீண்டும் ஏற்படுதல். அதாவது ஒரு மனிதன் ஒரு கடினமான வேலையை சிந்திக்கும் போது அவன் தவறுகளை செய்ய கட்டுப்படுகின்றான். இதன் காரணமாக தரவுகள் உள்ளீடு சரியான முறையில் இடம்பெறுவதில்லை.

தரவுகளின் சீரான தன்மையினை பேணுவது கடினமாக காணப்படுகின்றது. மேலும் கைமுறை தரவுகளை உள்ளீடு செய்வதற்கு அதிக பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். இதன் காரணமாக தரவுகளை சரிவர கட்டுக்கோப்பிற்குள் ஒருங்கமைக்க முடிவதில்லை.

தரவுகளை உள்ளீடு செய்தலின் வகைகள்

எண் தரவு உள்ளீடு

எண் தரவு உள்ளீடு என்பது எண்கள் மற்றும் தசமங்கள் அல்லது பின்னங்களின் வடிவத்தில் காணப்படக்கூடியதாகும். மேலும் கணக்கியல், தணிக்கை, புள்ளிவிபரவியல் பேன்ற துறைகளிலும் இது பயன்படுத்தப்படுகின்றது.

எண் மற்றும் எழுத்து தரவு உள்ளீடு

இது எண்கள் மற்றும் எழுத்துக்களை உள்ளடக்கியதாக காணப்படும். எண் தரவு உள்ளீடு போலல்லாமல் எண்ணெழுத்து தரவு உள்ளீடானது எந்தவொரு துறையிலும் மட்டுப்படாது செயற்படுகின்றன. தரவு செயலாக்கம், மருத்துவ விடயங்கள் போன்றவற்றில் இம்முறைமை காணப்படுகின்றன.

பட ரீதியான தரவு உள்ளீடு

இது படங்கள் டிஜிட்டல் வடிவாக மாற்றப்பட்டு கணணியில் உள்ளிடப்படும். இவ்வகையான தரவுகள் மருத்துவ துறையில் ஸ்கேனிங், எக்ஸ்ரே, எம்ஆர்ஐ ஸ்கேன் என்று டிஜிடல் வடிவமாக மாற்றப்பட்டு பின்னர் கணணியில் உள்ளிடப்படும். தானாகவே தரவை கணினியில் உள்ளீடு செய்யும் முறையாகும். பதிவுகளை பராமரித்தல், விற்பனையை கண்காணிப்பது போன்றவற்றிற்கு இதனை பயன்படுத்த முடியும்.

மேற்குறிப்பிட்ட வகையில் தரவு உள்ளீடு செய்தலானது இன்று பல நிறுவனங்களில் இடம்பெற்று வருகின்றதனைக் காணலாம்.

You May Also Like:

மின்புலம் என்றால் என்ன

சமுதாயம் என்றால் என்ன