தொற்றா நோய்கள் கட்டுரை

thotra noigal katturai in tamil

மனித ஆரோக்கியத்துக்கு பங்கம் விளைவிக்கக் கூடிய அம்சமாகவே இந்த நோய்கள் காணப்படுகின்றன. இவ்வாறான நோய்கள் தொற்று நோய்கள் மற்றும் தொற்றாத நோய்கள் என இருவகையாக வகைப்படுத்தப்படுவதனை காணலாம்.

இதன் அடிப்படையில் தொற்றா நோய்கள் மூலமாக பாதிக்கப்படுபவர்களே இன்று சமூகத்தில் அதிகம் உள்ளனர். ஆகவே தொற்று நோய்கள் பற்றிய தெளிவு அவசியமானதாகும்.

தொற்றா நோய்கள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • தொற்றா நோய்கள் என்றால் என்ன
  • தொற்றா நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்
  • தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்தும் முறைகள்
  • சமகாலத்தில் தொற்றா நோய்கள்
  • முடிவுரை

முன்னுரை

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழிக்கு இசைவாக, மனிதர்கள் செழிப்புடன் வாழ வேண்டுமாயின் நோயற்ற ஆரோக்கியமான வாழ்வினை பெற்றிருக்க வேண்டும் என கூறப்படுகின்றது.

அதாவது தற்காலங்களில் தொற்றாத நோய்களான இருதய நோய், புற்றுநோய், நீரிழிவு, குருதி அமுக்கம் மற்றும் சுவாச நோய்கள் போன்றன அதிகமாகவே காணப்படுகின்றன. எனவே இவ்வாறான தொற்றா நோய்கள் தொடர்பான அறிவு எமக்கு அவசியமானதாகும்.

தொற்றா நோய்கள் என்றால் என்ன

ஒரு நபருக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய நோய் இன்னும் ஒரு நபருக்கு நோய் காவி மூலம் தொற்ற முடியாதயின் இவ்வாறான நோய்கள் தொற்றாத நோய்கள் என அடையாளம் காணப்படுகின்றன.

அதாவது இந்த நோய்கள் ஒரு நபரிடம் இருந்து இன்னொரு நபருக்கு பரவுவது கிடையாது. இவை பெரும்பாலும் ஊட்டச்சத்துக் குறைபாடுகளினால் ஏற்படுகின்ற நோய்களாகவே காணப்படுகின்றன.

தொற்றா நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்

பிறப்பின் மூலமாகவே சில தொற்றா நோய்கள் ஏற்படுவதாக காணப்படுகின்ற போதிலும், பல வகையான தொற்றா நோய்கள் புகைத்தல், புகையிலை பாவித்தல், ஆரோக்கியமற்ற உணவு உட்கொள்ளல், மது அருந்துதல், மன அழுத்தம் மற்றும் உள, உடல் ரீதியான அக்கறையின்மை போன்ற காரணிகளே முக்கியமாக தொற்றாத நோய்கள் அனைத்தும் ஏற்படுவதற்கு ஏதுவாக உள்ளன.

இவ்வாறான தொற்றாத நோய்களின் மூலம் இன்று சமூகத்தில் பல்வேறு உயிர் ஆபத்துக்கள் இடம்பெறுவதனை காணலாம்.

தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்தும் முறைகள்

பொதுவாக அதிகமான தொற்றாத நோய்களினை மருத்துவ சிகிச்சைகளின் மூலமே கட்டுப்படுத்த முடியும். அதிலும் சத்திர சிகிச்சைகளினால் இருதய நோய்கள் மற்றும் நாடி நாளங்களில் ஏற்படக்கூடிய அடைப்புகள் போன்றவற்றை குணப்படுத்துவதனை காணலாம்.

ஆனால் இவ்வாறான தொற்றாத நோய்கள் எம்மை அண்டாமல் பாதுகாப்பதற்கு சீரான உணவு பழக்க வழக்கம், உடற்பயிற்சி, அதிகமாக நீர் அருந்துதல், சிறந்த முறையில் ஓய்வெடுத்தல், யோகா பயிற்சி மற்றும் மாலை நேரங்களில் விளையாட்டுகளில் ஈடுபடல் போன்ற செயற்பாடுகளை நாம் சிறந்த முறையில் கைக்கொள்வோமே ஆனால், எம்மால் பல்வேறு தொற்றாத நோய்களில் இருந்து பாதுகாப்புப் பெற முடியும்.

சமகாலத்தில் தொற்றா நோய்கள்

தற்காலங்களில் மனிதர்களின் ஆரோக்கியம் என்பது பெரும் கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது. அதாவது நவீன கால உணவுகள் மற்றும் செயற்பாடுகள் என்பன ஆரோக்கியத்தை சீர்குலைப்பனவாகவே அதிகம் காணப்படுகின்றன.

அந்த வகையில் உலக சனத் தொகையில் 33 வீதமானவர்கள் தொற்றாத நோய்களுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் உலக மரணங்களில் 63% தொற்றாத நோய்களின் மூலம் தான் நிகழ்கின்றன என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

அத்தோடு தெற்காசியாவிலும் மார்படைப்பு, சர்க்கரை நோய், புற்றுநோய் போன்ற நோய்களின் மூலமாகவே அதிகமான மரணங்கள் நிகழ்கின்றன என ஆய்வுகளின் வழி தெரிய வந்துள்ளன.

முடிவுரை

உலகில் வாழக்கூடிய ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்வது அவசியமானதாகும். இந்த வகையில் தொற்றாத நோய்கள் தொடர்பான விழிப்புணர்வுகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.

உணவுக்கும் மனித ஆரோக்கியத்திற்கும் அதிகமான தொடர்பு உள்ளது என்பதனை நாம் புரிந்து கொள்வதோடு,சிறந்த உணவுப் பழக்க வழக்கங்களையும் உடற்பயிற்சிகளையும் கைக்கொள்வது அவசியமானதாகும்.

You May Also Like:

தொற்று நோய் பற்றிய கட்டுரை

ஆரோக்கியமான உணவு கட்டுரை