நிறுவனம் என்ற வார்த்தையானது பொருளாதாரம் தொடர்பாக நாம் அடிக்கடி கேட்கும் வார்த்தையாகும். ஆனால் அனைவருக்கும் அதன் அர்த்தம் தெளிவாகத் தெரியாது. இந்த வார்த்தையும் அதனுடன் தொடர்புடைய செயற்பாடுகளும் நவீன வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதாகும்.
இன்று உலகளாவிய ரீதியில் பல்லாயிரக்கணக்கிலான நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவைதான் நவீன பொருளாதாரத்தின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வருகின்றன என்றால் அதுமிகையல்ல.
ஒரு நிறுவனத்தின் கட்டமைப்பு முறை, பணி செய்பொருள், வாடிக்கையாளர், புவிப்பிரிவு ஆகிய நான்கில் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு அமையலாம். ஒன்றுக்கு மேற்பட்டவை ஒன்றுக்குள் ஒன்றாக அமைந்த கலப்புக் கட்டமைப்பாகவும் இருக்கலாம். பெரிய நிறுவனங்கள் அத்தகைய கட்டமைப்பைக் கொண்டிருக்கும்.
மேலும் நிறுவனங்களை புரிந்து கொள்வதற்கான ஆறு நிலை மாதிரியை வைஸ்போர்ட் முன் வைக்கின்றார். குறிக்கோள், அமைப்பு முறை, உறவுமுறை, பரிசுகள், தலைமைப் பதவி, உதவும் முறைகள் என்பனவாகும்.
ஒரு நிறுவனம் ஊழியர்களுக்கு செவிமடுத்து அவர்களது கருத்துகளுக்கு முக்கியத்துவம் வழங்கினால் செயல்திறன் அதிகரிப்பதுடன் ஊழியர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறும் விகிதமும் குறையும்.
ஊழியர்களின் விருப்பம், கவலை, கோரிக்கைகள் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து அதற்கேற்ப நடவடிக்கை எடுத்தால், நிறுவனம் அவர்களது கருத்துகளுக்கு செவிமடுக்கிறது என்பதையும் அவர்கள் மீதுள்ள அக்கறை உணர்வும் வெளிப்படுத்தும் எனவும் நம்பலாம்.
நிறுவனம் என்றால் என்ன
நிறுவனம் என்பது ஒரு வகை வணிகக் கட்டமைப்பாகும். ஒரு நோக்குக்காக பல நபர்களின் நடத்தைகளை நெறிப்படுத்த அமைக்கப்பட்ட ஒரு சமூக கட்டமைப்பும் இயங்கமைப்பும் ஆகும்.
அதாவது வணிகத்தில் ஈடுபடும் ஓர் அமைப்பு பொதுவாக வணிக நிறுவனம் அல்லது நிறுமம் (Company) என்று அழைக்கப்படுகிறது.
நிறுவனத்தின் வகைகள்
தனி உரிமை தொழில்
ஒரு தனியுரிமை நிறுவனத்தில், ஒருவரே வணிகத்தின் ஒரே உரிமையாளர் ஆவார். இந்த வகை வணிகமானது நேரடியான மற்றும் எளிதாக தொடங்கக் கூடியது. மற்றும் கூட்டாண்மை அல்லது நிறுவனத்துடன் ஒப்பிடும்போது குறைவான நிர்வாகத் தேவைகளைக் கொண்டதாகும். விரைவாகவும், அதே வேளை சுதந்திரமாகவும் தீர்மானங்களை நிறைவேற்ற முடியும்.
தனி உரிமை நிறுவனத்தில் இலாபம் முழுவதும் உரிமையாளரைச் சேரும். இந்த வியாபார (தொழில்) அமைப்பில் உரிமையாளரை நிறுவனத்திலிருந்து வேறாக பிரிக்க முடியாது. இதில் வரம்பற்ற தனிப்பட்ட பொறுப்பு, அதாவது வணிகத்தின் அனைத்து கடன்கள் மற்றும் கடமைகளுக்கும் நிறுவன உரிமையாளரே முழுப் பொறுப்பு ஆகும்.
கூட்டாண்மை நிறுவனம்
கூட்டாண்மை என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களிடையே உருவாக்கப்படும் ஒரு வணிகமாகும்.
தொடக்க செலவுகள் பொதுவாக கூட்டாளர்களிடையே சமமாக பிரிக்கப்படுகின்றன. இலாபங்கள் எவ்வாறு பகிரப்படும் என்பதை காட்ட ஒரு சட்ட ஒப்பந்தம் வரையப்பட வேண்டும்.
பங்குதாரர் எடுக்கும் எந்தவொரு வணிக முடிவுகளுக்கும் அனைத்து பங்குதாரர்களும் நிதி ரீதியாக பொறுப்பு உடையவர்கள் ஆவர். எனவே ஒரு ஒப்பந்தம் முறிந்தாலோ அல்லது தெரியாமல் கடன்கள் ஏற்பட்டாலோ, அனைவருக்கும் நிதி ரீதியான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகமாகும்.
கூட்டாளர் அல்லது கூட்டாளர்கள் இருக்கும்போது, சரியான நபர் அல்லது பணிபுரியும் நபர்களைக் கண்டுபிடிப்பது சவாலாக இருக்கலாம், மேலும் கூட்டாளர்களிடையே ஏற்படும் மோதல்கள் வணிகத்தில் சிக்கல்களை உருவாக்கலாம். ஆனால் கூட்டாண்மை சரியாக இருந்தால், வணிகம் செழிக்கும்.
You May Also Like: