எம்மைச் சுற்றி பல்வேறு பொருட்கள் காணப்படுகின்றன அத்தகைய பொருட்களையே பருப்பொருளாக கொள்ள முடியும். பருப்பொருளால் ஆனவற்றையே பொருட்கள் என நாம் அழைக்கின்றோம்.
பருப்பொருள் என்றால் என்ன
பருப்பொருள் எனப்படுவது எம்மைச் சூழவுள்ள திண்ம, திரவ, வாயு போன்ற பொருட்களை உள்ளடக்கியதாக காணப்படுபவையே பருப்பொருள் ஆகும்.
அதாவது உலகில் காணப்படும் இடத்தை அடைத்துக் கொள்ளக்கூடியதும் நிறையை கொண்டமைந்ததாக காணப்படும் அனைத்து பொருட்களும் பருப்பொருட்களாகும்.
பருப்பொருளானது திண்மம், திரவம், வாயு என மூன்று நிலைகளில் காணப்படுவதோடு பருப்பொருளை சடப்பொருள் மற்றும் பொருட்கள் என்ற பெயர்களில் அழைக்க முடியும்.
பருப்பொருளின் இயல்புகள்
பருப்பொருளானது பல்வேறுபட்ட தனிப் பண்புகளை கொண்டமைந்து காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். அந்தவகையில் அதன் பண்புகளை பின்வருமாறு நோக்கலாம்.
ஒவ்வொரு பருப்பொருளின் துகள்களுக்கிடையேயும் ஓர் ஈர்ப்பு விசை காணப்படுவதோடு இது பருப்பொருளுக்கு பருப்பொருள் மாறுபடக்கூடியதாக அமைந்து காணப்படுகின்றது.
பருப்பொருளின் நிலைகளுள் ஒன்றான திண்மப் பொருளில் உள்ள விசையானது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்களை ஒன்றாகப் பிணைத்து காணப்படும்.
மீள்ச்சியற்ற பண்பினை பருப்பொருளானது கொண்டமைந்து காணப்படுகின்றது. அதாவது தகைவு, கண்ணாடி போன்றவற்றை இதற்கு உதாரணமாக கொள்ளலாம்.
பருப்பொருளின் நிலைகள்
பருப்பொருளானது திண்மம், திரவம், வாயு என மூன்று நிலைகளில் காணப்படுகின்றது. அந்த வகையில் அதன் நிலைகளை பின்வருமாறு தெளிவாக நோக்கலாம்.
1. திண்மம்
திண்மம் என்பது தனக்கான ஓர் உருவத்தினை கொண்டமைந்து காணப்படும். இதில் உள்ள அணுக்களானது ஒன்றுக்கொன்று நிலையான ஒரு தொடர்பினை கொண்டுள்ளது.
அதாவது ஓர் அணுவின் பக்கத்தில் பிரிதொரு அணு அமைந்து காணப்படும். அந்தவகையில் திண்மப்பொருளிற்கு மேசை, கட்டில், சைக்கிள் போன்றவற்றை உதாரணமாக கொள்ளலாம்.
திண்மப் பொருளானது குறிப்பிட்ட பருமன் மற்றும் ஓர் வடிவத்தை கொண்டமைந்து காணப்படுவதோடு திண்மப் பொருள்களின் துகள்களுக்கிடையில் இயல்புகள் குறைவாகவே காணப்படும். திண்மத்தின் துகள்களானவை எளிதில் நகராது மேலும் அத்துகள்கள் ஒன்றையொன்று ஈர்கக்கூடியதாக அமைந்து காணப்படுகின்றது.
2. திரவம்
திரவமானது குறித்த கனவளவை பெற்று அமைந்திருக்கும். அதாவது இதற்கென்று குறிப்பிட்ட வடிவமொன்று கிடையாது இது பெற்றிருக்கும் கொள்கலனின் வடிவத்தையே காட்டி நிற்கும். திரவத்திற்கு உதாரணமாக நீர், எண்ணெய், பெற்றோல் போன்றவற்றை குறிப்பிடலாம்.
திரவப் பொருள்களின் துகள்களுக்கிடையேயான இடைவெளிகள் அதிகமாக காணப்படுவதோடு அந்த துகள்களுக்கிடையே உள்ள ஈர்ப்பு விசையானது திண்மப் பொருளை விட குறைந்ததாகவே காணப்படுகின்றது.
3. வாயு
வாயுவினை பொருத்தவரையில் இதற்கென்று குறிப்பிட்டதொரு வடிவமோ அல்லது பருமனோ கிடையாது. அது இடத்தை அடைக்கக் கூடியதாகவும் நிறை உடையதாகவும் காணப்படுகின்றது. வாயுவிற்கு உதாரணமாக காற்றை குறிப்பிடலாம்.
வாயுவின் துகள்களுக்கிடையில் உள்ள ஈர்ப்பு விசையானது மிகவும் குறைவாக காணப்படுவதோடு இதன் துகள்களானவை அங்கும் இங்கும் இயங்கக்கூடியதாக காணப்படுகின்றத. மேலும் இதன் துகள்கள் மிக வேகமாக பரவக்கூடியதொன்றாகவும் காணப்படுகின்றது.
பருப்பொருளானவை திண்மம், திரவம், வாயு என மூன்று நிலைகளில் காணப்படுவதோடு பருப்பொருள்களினுடைய அணுக்களானவை மிகச் சிறியதாகவே காணப்படுகின்றது.
பருப்பொருளின் அமைப்பினை வெற்றுக் கண்களால் கூட காணமுடியாது. ஏனெனில் இதனை அறிவிவியல் தொழிநுட்பங்களின் ஊடாகவே காணமுடியும்.
You May Also Like: