பா வகையால் பெயர் பெற்ற நூல்

சங்க காலப் புலவர்கள் பா வகையால் பாடல் பாடுவதை வழக்கமாகக் கொண்டு விளங்கினர். அவ்வாறே சங்க காலத்தில் எழுந்த அகத்தினை புறத்திணை சார்ந்த இலக்கியங்கள் வெவ்வேறு பா வகையால் பாடப்பட்டன. அவ்வகையில் பாவகையால் பெயர் பெற்ற நூல் என்ற சிறப்பை கொண்ட நூல் பரிபாடல் ஆகும்.

பா என்றால் என்ன?

பா என்பது ஒரு பாடலின் ஓசையே பா எனப்படும். இப்பாவகையானது எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை போன்ற ஆறு உறுப்புக்களை கொண்டதே பா எனப்படும். இப்பா வகையானது வஞ்சிப்பா, வெண்பா, கலிப்பா, ஆசிரியப்பா என நான்கு வகைப்படும்.

இப்பாவினாலான சங்க இலக்கியம் கலித்தொகையும் பரிபாடலும் ஆகும். ஆனால் பா வகையில் பெயர் பெற்ற இலக்கியம் பரிபாடல் ஆகும்.

பா வகையால் பெயர் பெற்ற நூல்

கலித்தொகை பரிபாடல் இரண்டுமே பா வகையினால் ஆக்கப்பட்டு இருப்பினும் பாவகையால் பெயர் பெற்ற நூல் பரிபாடல் ஆகும்.

அதாவது பரிபாடல் என்ற நூலானது நான்கு வகையான பாவகைகளையும் பரிந்து சென்று இடம் கொடுப்பதால் பரிபாடலானது பாகையால் பெயர் பெற்ற நூல் என்று சொல்லப்படுகின்றது.

அதுமட்டுமின்றி தொல்காப்பியம் கூறும் பரிபாடல் என்ற பா வகையினால் பாடப்பட்டதனால் பாவகையினால் பெயர் பெற்ற நூல் பரிபாடல் என்று கொள்ளப்படுகின்றது.

பரிபாடல் நூலின் விபரம்

சங்ககாலத்தில் அகமும் புறமும் சார்ந்த நூல் பரிபாடல் ஆகும். பா வகையால் சிறப்பு பெற்ற நூல், திருமால், முருகன், கொற்றவை போன்ற தெய்வங்கள் பற்றி இந்நூலில் பாடப்பட்டுள்ளன.

அத்தோடு மதுரை நகர் வையையாறு பற்றியும் 70 பாடல்கள் காணப்படுகின்றன. இப்பாடல்களை பன்னிரண்டு புலவர்கள் பாடியுள்ளனர். இப்பாடல்களின் 22 பாடல்களே எஞ்சி காணப்படுகின்றன.

பரிபாடல் என்ற நூலில் தாளமே இல்லை. தமிழில் முதன் முதலில் இசையால் பாடப்பட்ட நூல் பரிபாடல் ஆகும். அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு பற்றியும் கூறும் நூல் பரிபாடல் ஆகும். பரிபாடலுக்கு உரை இயற்றியவர் பரமேலழகர் ஆவார்.

பரிபாடல் கூறும் சிறப்பான செய்திகள்

அம்பா ஆடல் என்பது தை நீராடல் ஆகும். தை நீராடல் தற்போது மார்கழி நோன்பாக மாறியுள்ளது.

நெய்தல், குவளை, ஆம்பல், சங்கம், கமலம், வெள்ளம் என்பவை நீண்ட காலங்களை குறிக்கும் பேரெண்களாகும்.

உலகத்தில் தோற்றம் குறித்து கூறும் நூல் பரிபாடல்

பரிபாடலின் வேறு பெயர்கள்

  • பரிபாட்டு
  • ஓங்கு பரிபாடல்
  • இசைப்பாட்டு
  • பொருட்கலவை நூல்
  • தமிழின் முதல் இசைபாடல் நூல்

எனவே இதன் மூலம் பாவகையால் பெயர் பெற்ற நூல் பரிபாடல் என்பதையும் அந்நூல் பற்றியும் அறியலாம்.

You May Also Like:

அகம் புறம் பற்றி விளக்குக

வீதி விபத்து கட்டுரை