பிளாஸ்டிக் ஒழிப்பு வாசகங்கள்

plastic olippu slogans in tamil

சூழலை மாசடையச் செய்வதில் பிளாஸ்டிக்கே பிரதான பங்கினை வகிக்கின்றது. பிளாஸ்டிக் ஆனது இன்று பல்வேறு வகையில் பயன்படுத்தக் கூடியதொரு பாவனையாக மாறியுள்ளது.

ஏனெனில் பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட தளபாடங்கள், சமையல் உபகரணங்கள், அலங்கார பொருட்கள் என பல்வேறுபட்ட பொருட்கள் கண்ணைக் கவரும் வண்ணமும், இலகுவாக பாவிக்க கூடியதாகவும் உள்ளது.

இதன் காரணமாகவே இன்று அதன் பாவனை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. பிளாஸ்டிக் ஆனது மக்காத குப்பை என்பதனால் இதனை பாவித்து விட்டு குப்பையில் போட்டாலும் மண்ணை சீரற்றதாக ஆக்கிவிடுகிறது.

மேலும் பிளாஸ்டிக் பாவனையானது வறட்சி மற்றும் சூழல் மாசடைவு, உடலியல் நோய்கள் என பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுத்துகின்றது. இவ்வாறு பிளாஸ்டிக் பாவனை அதிகரித்து கொண்டே செல்லுமேயானால் எம்மால் சுவாசிக்க முடியாத ஒரு நிலையே எதிர்காலத்தில் ஏற்படும்.

பிளாஸ்டிக் பாவனையை தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதோடு மட்டுமல்லாமல் பிளாஸ்டிக் பாவனைக்கு பதிலாக இயற்கையினால் கிடைக்கப் பெறும் பொருட்களை பயன்படுத்துவது எமக்கும் எமது சூழலுக்கும் உகந்ததாகும்.

எமக்கு தீங்கிழைக்கும் பிளாஸ்டிக் பாவனை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வூட்டுவது ஒவ்வொரு தனிமனிதனுடையதும் கடமையாகும். அந்த வகையில் பிளாஸ்டிக் ஒழிப்பு வாசகங்கள் சிலவற்றை இந்த பதிவில் காணலாம்.

பிளாஸ்டிக் ஒழிப்பு வாசகங்கள்

மண்ணுக்குள் மக்காது, ஓசோனை ஓட்டையாக்கும் பிளாஸ்டிக்கை ஒழிப்போம்.!

அனைத்தையும் அழிக்கும் பிளாஸ்டிக் அரக்கனை நாமும் அழித்திடுவோம்.!

பிளாஸ்டிக்கை ஒழித்து துணிப்பைகளை பயன்படுத்துவோம்.!

நாகரீகமான பிளாஸ்டிக் பயன்பாடு! நமக்கு ஏற்படுத்துவதோ பெரும் கேடு.!

பிளாஸ்டிக் பாவனையை தடை செய்வோம்! புற்று நோயிலிருந்து விடுதலை பெறுவோம்.!!

மாசற்ற காற்றை பெற பிளாஸ்டிக் பாவனையை இன்றே ஒழிப்போம்.!

பிளாஸ்டிக்கிற்கு நண்பனாக இருந்து! சுற்றுச் சூழலுக்கு எதிரியாகி விடாதே.!

வறட்சியை தடுக்க, மக்காத குப்பையின் பயன்பாட்டை தடுப்போம்.!

உயிர் கொல்லி பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்! நலமாக வாழ்வோம்.!

பூமியை பாதுகாக்க பிளாஸ்டிக்கை அடியோடு ஒழிப்போம்.!

பிளாஸ்டிக்கை இல்லாமல் செய்வதே நாம் வாழ்வதற்கான வழி.!

பூமியை பிளாஸ்டிக்கை பயன்படுத்தி மூச்சுத் திணற வைக்காதீர்கள்.!

பிளாஸ்டிக் ஒரு சாபம் அதை ஒழிப்போம் என்று இன்றே உறுதி மொழி எடுங்கள்.!

பிளாஸ்டிக்கிற்கு குட்பாய் சொல்லுங்கள் வாழ்க்கை உங்களை வரவேற்கும்.!

கடல்களை காப்பாற்ற பிளாஸ்டிக்கை தடை செய்யுங்கள்.!

பிளாஸ்டிக் இல்லாத வரலாற்றை உருவாக்குங்கள் பூமியை மகிழ்ச்சியாக ஆக்குங்கள்.!

ஒரு பூமி! ஒரு வாய்ப்பு! பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிப்போம்.!

பூமியின் அழகை காப்பாற்ற! பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்போம்.!

பிளாஸ்டிக் இல்லாத உலகமே! சிறந்த எதிர்காலம்.!

பிளாஸ்டிக்குக்கு அடிமையான உலகமே! ஆபத்தில் இருக்கும் உலகம்.!

சூழலை விசமாக்கி! உயிர்களை கொல்லும் பிளாஸ்டிக்கை ஒழிப்போம்.!

பூமியின் கண்ணீர்க்கு பிளாஸ்டிக் டம்ளரில் நாம் குடிக்கும் தண்ணீரே காரணம்.!

பிளாஸ்டிக் பொருட்களில் உணவை உண்ணாதீர், பலவித நோய்களுக்கு ஆளாகாதீர்.!

இயற்கை வளங்களை காத்திட இன்றே.! தடுப்போம் பிளாஸ்டிக் பாவனையை.!

பசுமைச் சூழலே! நாம் வாழும் வாழ்க்கைக்கு அழகு, அதை அழிக்கும் பிளாஸ்டிக் வேண்டாமே.!

கெடுதி விளைவிக்கும் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்.!

நீர் வாழ் உயிரிகளை அழிக்கும் பிளாஸ்டிக்கை ஒழிப்போம்.!

பிளாஸ்டிக் பயன்பாடு! சுகாதாரக் கேடு.!

மண்ணுக்கு உரத்தை அளிப்போம்! பிளாஸ்டிக்கை இன்றே ஒழிப்போம்.!

You May Also Like:

மது ஒழிப்பு வாசகங்கள்

நெகிழி மறுசுழற்சி கட்டுரை