புதிய கல்வி கொள்கை நன்மைகள் கட்டுரை

puthiya kalvi kolgai katturai in tamil

இந்திய அரசாங்கத்தினால் நாட்டின் நலன் கருதியும், குடிமக்களின் கல்வித் தரத்தை அதிகரிக்கும் நோக்குடனும் கால ஓட்டங்களுக்கு ஏற்ற வகையில், புதிய கல்விக் கொள்கைகள் வகுக்கப்பட்டு அதை நடைமுறைப்படுத்தப்படுவதனை காணலாம்.

ஆரம்பக் கல்வி தொடங்கி உயர்கல்வி வரைக்குமான அனைத்து கல்வி வடிவமைப்புக்களினையும் உள்ளடக்கியதாகவே கல்விக் கொள்கை காணப்படுகின்றது.

புதிய கல்வி கொள்கை நன்மைகள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • டிஜிட்டல் கல்வி வசதி
  • மாணவர்களுக்கான முன்னுரிமை
  • பன்மொழிப் பயன்பாடு
  • சிறப்பு குழந்தைகளுக்கான முன்னுரிமை
  • முடிவுரை

முன்னுரை

1986 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்திய கல்விக் கொள்கை, அதற்கு பின்னரான பல்வேறு கல்விக் கொள்கை என்பற்றினை அடுத்து, 2022 ஆண்டு உருவாக்கப்பட்ட கல்விக் கொள்கையே தற்காலங்களில் நடைமுறையில் உள்ளது.

அதாவது ஓர் பாரிய நேர்மறையான மாற்றத்தினை சமூகத்தின் மத்தியில் உருவாக்குவதற்காகவே இக்கல்விக் கொள்கைத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இந்த கல்விக் கொள்கை கிராமப்புற மற்றும் நகர்ப்புற இந்தியாவில் கல்வியோடு இணைந்த தொழிற்பயிற்சியையும் முன் வைக்கிறது. இந்த கல்விக் கொள்கை 2030ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் கல்வி முறையை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

டிஜிட்டல் கல்வி வசதி

ஆரம்ப காலங்களில் நேருக்கு நேரான கல்வி மாத்திரமே சாத்தியம் என நம்பப்பட்டது. ஆனால் இந்த covid-19 சூழ்நிலைக்கு பின்னர் நிகழ்நிலை கல்வியும் சாத்தியம் என்று உறுதிப்படுத்தப்பட்டது.

அந்த வகையில் இன்று மாணவர்கள் புதிய கல்விக் கொள்கையின் மூலம் zoom, class, Google meet, online learning போன்ற செயலிகளைப் பயன்படுத்தி கையடக்க தொலைபேசியிலோ அல்லது கணினியிலோ தங்களுடைய கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதனை காணலாம்.

புதிய கல்விக் கொள்கை திட்டமானது மாணவர்களின் கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களுக்கு வாய்ப்பளித்தமையானது பாரியதோர் நன்மையாகவே காணப்படுகின்றது.

மாணவர்களுக்கான முன்னுரிமை

புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பாடங்களை தெரிவு செய்து கொள்ளும் வசதி வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் மாணவர்களின் விருப்புக்கு ஆதரவு கிடைக்கிறது. மற்றும் அரசாங்கம் பாடசாலைகளின் வசதி வாய்ப்புகளை அதிகரித்தமையும் மாணவர்களுக்கான நன்மையாகவே காணப்படுகின்றது.

எனவே இந்த புதிய கல்விக் கொள்கையானது மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றது.

பன்மொழிப் பயன்பாடு

புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் மாணவர்கள் மீது இந்த மொழியை தான் கற்றாக வேண்டும் என்ற எந்த கட்டுப்பாடுகளும் திணிக்கப்படுவதில்லை. தங்களுக்கு விரும்பிய மொழிகளினை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

விருப்ப பாட தெரிவுகளில் இந்தியாவின் இதர செம்மொழிகளில் இலக்கியங்களும் கற்பிக்கப்படுவதோடு, வெளிநாட்டு மொழிகளளையும் கற்பதற்கான வாய்ப்பு கிடைக்கின்றது. ஆகவே இங்கு பன்மொழியின் பயன்பாடு காணப்படுகின்றது.

சிறப்பு குழந்தைகளுக்கான முன்னுரிமை

ஆரம்பக் கல்வி தொடக்கம் உயர்கல்வி வரைக்குமான அனைத்து கல்வி நடவடிக்கைகளிலும் சிறப்பு குழந்தைகளையும் இணைக்கும் செயல்திட்டம், இந்த புதிய கல்விக் கொள்கையில் உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

அதாவது உடல் ரீதியான குறைபாடுகள் உள்ள பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு தேவையான தொழில்நுட்ப கருவிகள், உதவி உபகரணங்கள், பயிற்சி முறைகள் மற்றும் பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்கள் என குழந்தைகளை முன்னுரிமைப்படுத்தும் அம்சங்களும் இதில் அடங்கியுள்ளன.

முடிவுரை

இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்படக்கூடிய தற்கால புதிய கல்விக் கொள்கையானது, ஆரம்பக் கல்வி தொடக்கம் உயர்கல்வி வரையுமான விரிவான ஓர் வடிவமைப்பாகவே காணப்படுகின்றது.

அதாவது கிராமம், நகரம் என்ற வேற்றுமைகள் கடந்து கல்வியோடு இணைத்து தொழில் பயிற்சிகளையும் வழங்கும் நோக்கோடு செயல்படுகின்றது. இதன் அடிப்படையில் இந்தியாவின் கல்வி முறைமையினை அபிவிருத்தி அடையச் செய்வதற்காக புதிய கல்விக் கொள்கை காணப்படுகின்றது.

You May Also Like:

இணையவழிக் கல்வி கட்டுரை

கல்வி புரட்சி கட்டுரை