இந்த உலகின் மிகப்பெரிய தலைவர்களையும், அறிஞர்களையும், சிந்தனையாளர்களையும், ஆராய்ச்சியாளர்களையும் உருவாக்குவதற்கு அடித்தளமாக அமைந்து காணப்படுவது புத்தகங்களே ஆகும்.
புத்தகம் பற்றிய கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- புத்தகம் என்பது
- புத்தகத்தின் முக்கியத்துவம்
- நூலகம்
- எது சிறந்த புத்தகம்?
- முடிவுரை
முன்னுரை
“புத்துலகம் படைக்க புத்தகம் படைப்போம்” என்கிறார் அப்துல் கலாம் அவர்கள். புதிய சிறந்த உலகம் ஒன்று படைக்கப்பட வேண்டுமாயின் அதற்கு மிகச் சிறந்த புத்தகங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
ஒருவரின் நடத்தைகளும் வாழ்விலும் மாற்றங்களை ஏற்படுத்தும் சாதனமாகிய புத்தகங்கள் அனைவராலும் பேணி பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இக்கட்டுரையில் புத்தகம் பற்றி நோக்குவோம்.
புத்தகம் என்பது
புத்தகம் என்னும் சொல்லானது “பொத்தகம்” இன்னும் சொல்லிலிருந்து திருபு அடைந்த சொல்லாகும். இது கருத்துக்களை மற்றும் எண்ணங்களை எழுத்து உருவில் காட்டும் ஓர் அரிய கருவியாகும்.
ஆரம்ப காலகட்டத்தில் பனையோலையில் எழுதி அப்படி எழுதப்பட்ட பனை ஓலைகளை ஒன்றாக சேர்த்து துளையிட்டு நூல் கயிற்றில் கோர்த்து வைத்து உபயோகித்தனர்.
ஆரம்பத்தில் ஏடுகளில் எழுதியவர்கள் காகிதங்களைக் கண்டுபிடித்தவுடன் அதில் எழுத ஆரம்பித்து கையெழுத்து புத்தகமாக காணப்பட்டு அதன் பின் அச்சு இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் அவை அச்சிடப்பட்டு தற்போதைய வழக்கில் இருக்கும் புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
புத்தகத்தின் முக்கியத்துவம்
புத்தகங்களானவை எப்பொழுதும் நிகழ்ந்ததை நிகழ்ந்தவாறு இப்பொழுதும் நாம் அறிந்து கொள்ள உதவும் ஒரு சாதனமாக காணப்படுகிறது.
எங்கோ நடந்த நிகழ்வை ஆராய்ந்து சரிவர கண்டுபிடித்து அனைவரும் அவ்விடயங்களை அறிய உதவுகின்றது.
எமது அறிவை விரிவு செய்து கொள்வதற்கு புத்தகங்கள் முக்கியமானதாக காணப்படுகின்றது.
இலத்திரனியல் சாதனங்களில் காணப்படும் விடயங்களை வாசிப்பதை விட புத்தகங்கள் காணப்படும் கருத்துக்களை வாசிப்பது இலகுவானதாகவும் கண்களுக்கும், மூளைக்கும் புத்துணர்ச்சி வழங்குவதாகவும் காணப்படுகிறது.
நூலகம்
நூலகம் என்பது புத்தகங்கள் அனைத்தையும் சரிவர சேகரித்து சேமித்துப் பாதுகாக்கும் உலகின் அரிய வகை பெட்டகமாகும். ஒரு நூலகம் பல கோயில்களுக்கு நிகரானது.
ஆபிரகாம் லிங்கனிடம் “உங்கள் மனதிற்கு பிடித்த இன்பமயமான ஒரு இடத்தின் பெயரை சொல்லுங்கள்” என்று வினவிய போது, ” என் மனதுக்கு பேரன்பத்தை அள்ளி அள்ளி வழங்கும் ஒரே இடம் நூலகமே” என்று பதில் அளித்துள்ளார்.
மற்றும் அறிஞர் அண்ணா அவர்கள் ” ஒவ்வொருவரின் வீடுதோறும் நூலகம் என்பது அமைக்கப்பட வேண்டும்.” என்று கூறுகின்றார். இக்கூற்றுகள் அனைத்தும் நூலகத்தின் சிறப்பை எடுத்துக்காட்டுகின்றது.
எது சிறந்த புத்தகம்
பாடநூல் புத்தகங்கள் அனைத்தும் படித்து மிகுதியாக மதிப்பெண் பெறுவதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது.
ஆனால் பொது நூல்கள் வாழ்க்கை முறை மற்றும் ஒழுக்க நெறிகளை நோக்கமாகக் கொண்டது. இவை ஒருவரின் நல்வாழ்வுக்கு அடித்தளம் அமைக்கும் நற்குணங்களை வெளிப்படுத்தும் சாதனமாகும்.
அவ்வாறான நற்குணங்களை ஒருவருடைய ஏற்படுத்தும் நூல்களே சிறந்த புத்தகங்கள் ஆகும்.
ஒரு புத்தகத்தை படிக்க ஆரம்பித்தது முதல் அதை படித்து முடிக்கும் வரை கீழே வைக்க விடாமல் ஒருவரின் ஆர்வத்தை தூண்ட செய்கின்ற புத்தகமே சிறந்த புத்தகம் என்றும் பக்கத்துக்கு பக்கம் அடிக்கோடிட்டு சேமித்து வைக்கக்கூடிய அற்புதமான வரிகளை தாங்கிக் கொண்டிருக்கின்ற புத்தகங்களே சிறந்த புத்தகங்கள் என்று கூறப்படுகின்றது.
முடிவுரை
மனிதனின் உயர்விற்கு உதவும் அரிய சாதனங்களாக காணப்படும் புத்தகங்களை சரியான முறையில் பேணிப் பாதுகாத்து இளைய சமுதாயத்திற்கு புத்தகங்களின் சிறப்புகளை தெளிவுபடுத்துதல் வேண்டும்.
You May Also Like: