புத்த மதத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாக புத்த பூர்ணிமா காணப்படுகின்றது. பௌத்த சமயத்தை சார்ந்தோர்களால் புத்த பூர்ணிமா கொண்டாடப்படுகின்றது இதனை வெசாக் என்றும் பௌத்தர்கள் அழைக்கின்றனர்.
இந்த புத்த பூர்ணிமா தினத்தில் புத்தரின் வாழ்க்கை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள் இடம் பெறும்.
புத்த பூர்ணிமா என்றால் என்ன
புத்த பூர்ணிமாவானது அனைத்து பௌத்தர்களாலும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். புத்த பூர்ணிமாவானது கௌதம புத்தரின் ஒரு தினமாகவே கொண்டாடப்படுகின்றது.
அதாவது கௌதம புத்தரின் பிறந்த நாளேயே புத்த பூர்ணிமாவாக கொண்டாடுகின்றனர். இது மே மாதத்தில் பௌர்ணமி நாளன்று அனைத்து பௌத்த மதத்தினராலும் கொண்டாடப்படும்.
புத்த பூர்ணிமா எவ்வாறு கொண்டாடுவது
புத்த பூர்ணிமா நாளில் வீட்டை சுத்தப்படுத்தி விளக்கேற்றி வழிபாட்டில் ஈடுபட வேண்டும். அந்நாளில் புத்தரை மனதார வேண்டி வாழ்வின் அனைத்து நலன்களையும் பெற பிராத்தனைகளை மேற்கொள்ளல் வேண்டும்.
இந்நாளில் வீடுகள் மற்றும் கடைகளில் வெசாக் எனப்படும் கையால் செய்து அலங்கரிக்கப்பட்ட காகித விளக்குகள் காணப்படும். மேலும் தெருக்களில் வண்ணமயமாக இந்த விளக்குகளை அலங்கரித்து தொங்க விடுவார்கள்.
பௌத்தர்கள் போதி பூஜையினை மேற்கொள்வார்கள். அதாவது இதனூடாக ஆசிர்வாதத்தினை புத்தரிடம் இருந்து பெற்றுக் கொள்கிறார்கள்.
மேலும் புத்த பூர்ணிமா நாளில் பல நன்கொடைகளை மேற்கொள்கின்றார்கள். அதாவது உதவி தேவைப்படுவோரிடம் சென்று அவர்களுக்கு பல உதவிகளை செய்கின்றார்கள்.
பகல் நேரத்தில் வெள்ளை ஆடைகளை அணிந்து விகாரைக்கு சென்று விளக்கேற்றுகிறார்கள். இந்நாளில் மது மற்றும் இறைச்சி விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் மது அருந்தக் கூடாது மேலும் சைவ உணவை மாத்திரமே புத்த பூர்ணிமா நாளில் உண்ண வேண்டும் என்பது இந்நாளின் சிறப்பினை எடுத்துக்காட்டுகின்றது.
இந்நாளில் மக்கள் போதி மரத்தின் முன் கூடி பூஜை வழிபாடுகளை மேற்கொள்கின்றனர். இதனூடாக புத்த பெருமானிடம் ஆசிர்வாதத்தை பெற்றுக் கொள்கின்றனர். புத்த பூர்ணிமா பண்டிகை நாளில் பல்வேறு சமய நிகழ்வுகளானவை புத்தரின் வாழ்க்கையினை முன்னிறுத்தியே இடம் பெறுகின்றது.
புத்த பூர்ணிமாவின் முக்கியத்துவம்
இந்நாளானது அமைதி மற்றும் தியானம் வழிபாடு போன்ற விடயங்களில் எம்மை ஈடுபடுத்திக் கொள்வதற்கு துணை புரிகின்றது. இதனூடாக அனைவரும் புத்தருடைய ஆசிர்வாதத்தினை பெற்றுக் கொள்கின்றனர்.
புத்த பெருமான் இந்த உலகில் அடைந்து வந்த துன்பங்களில் இருந்து மக்களை எவ்வாறு பாதுகாப்பது தொடர்பில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு ஏனைய தலைமுறையினருக்கும் இந்த பண்டிகை பற்றி தெளிவூட்டுகின்றது.
ஏழை எளிய மக்களுக்கு இந்நாளில் உணவுகள், பாணங்கள் போன்றவற்றை வழங்குவதனூடாக உதவி தேவைப்படுவோரின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதனை காணமுடிகின்றமை சிறப்பிற்குரியதாகும்.
புத்த பூர்ணிமா நாளில் பல்வேறு சமய வழிபாடுகள் இடம் பெறுவதின் ஊடாக அனைத்து பௌத்தர்களின் கவலைகளும் நீங்கி அவர்களது வாழ்வு வளம் பெறுவற்கு இப்பண்டிகை நாள் துணைபுரிகின்றது.
இந்த பண்டிகை நாளானது மூன்று முக்கியத்துவங்களை கொண்ட ஒரு நாளாகவே திகழ்கின்றமை இந்த நாளின் முக்கியத்துவத்தினை எடுத்துக்காட்டுகின்றது.
அதாவது கௌதம புத்தர் லும்பினி எனும் இடத்தில் பிறந்தார் என்பதனையும் புத்தகாய எனும் இடத்தில் தவம் புரிந்தார் என்றும் புத்தர் பரிநிர்வணம் அடைந்தார் என்றும் மூன்று முக்கியத்துவங்களை பிரதானமாக கொண்ட இந்தநாள் பண்டிகையாக திகழ்கின்றது.
You May Also Like: