உலகில் அனைவரும் ஒரே மாதிரியான வாழ்க்கை வாழ்வதில்லை. ஒரு சிலர் ஆனந்தமாகவும், வேறு சிலர் கவலைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலை நமக்கு மட்டும் பொருந்தாது. நாம் வாழும் பகுதியை சார்ந்ததாகவும் இருக்கின்றது என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எவ்வாறெனில் நான்கு நிலைகளாக நாம் அதனைப் பிரித்துக் கொள்ளலாம்.
சோகமான வாழ்க்கை, போகமான வாழ்க்கை, யோகமான வாழ்க்கை, ஞானமான வாழ்க்கை ஆகியனவே அவை மூன்றுமாகும். இந்த நான்கு நிலைகளில் தான் ஒரு மனிதனுக்கு வாழ்க்கை அமைந்துள்ளது. அதன்படியே மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கின்றான்.
நமக்கு தேவையான உணவு, உடை, இருப்பிடம் உள்ளிட்ட வாழ்க்கைக்கு தேவையான அனைத்து வசதிகளும் இருந்தும் ஆனந்தம் தன்னுடைய வாழ்க்கையின் முழுமையான ஒன்றாகக் கருதிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்ற மனிதர்கள் பல பேர் உள்ளனர். அவர்கள் எல்லாம் போகமாக வாழக்கூடிய மனிதர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
மேலும் அறிவுத் தெளிவு இல்லாதவர்களுக்குப் பணம் வந்துவிட்டால் மனிதர்களுக்குப் பலபல போகங்களையும் அனுபவிக்க வேண்டுமென்று தோன்றலாம். போகங்களிலேயே மிகவும் சிறந்த போகம் பெண்போகம் என்று என்னுகின்றனர். பணத்தைச் சம்பாதிக்க வேண்டுமென்று அலைகின்றனர். இது மிகவும் தவறானதாகும்.
இந்த உடம்பும், ஐம்புலன்களும் முறையாக நோய்நொடி இல்லாமல் போகம் அனுபவிக்க ஒத்துழைக்கும் வரைக்கும்தான் அது போகம். இல்லையெனில் அது நோய்தான். இதனை அனைவரும் அறிதல் வேண்டும். நிறையச் செல்வம் இருக்கும் திமிரால் பலவித போகம் அனுபவிப்பது என்பது நாளடைவில் சோகமான வாழ்க்கைக்கே வழிவகுக்கும். இதனை யாரும் மறத்தலாகாது.
போகம் என்றால் என்ன
உலகளாவிய சந்தோசத்தை அனுபவிக்க கூடியது போகமாகும். இறைநிலை சந்தோசத்தை அடையக்கூடியது யோகமாகும். ஆணும், பெண்ணும் புணர்தல் போகமாகும். அதாவது, இரண்டு உருவங்கள் இணைவது போகமாகும்.
அதாவது போகம் இன்பத்திற்காக செய்யப்படுவது ஆகும். போகம் என்றால் இன்பத்தை அனுபவிப்பது ஆகும்.
மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய முக்கிய ஐம்புலன்களினால் நாம் அழுத்தம் ஒலி, ஒளி, ஒலி, சுவை, மணம் ஆக எந்த பொருளோடு தொடர்பு கொள்வதன் மூலம் இன்பத்தை அனுபவித்தாலும் அந்த அனுபவம் தான் போகம் ஆகும்.
மேலும் போகம் என்பது இல்லறத்தாருக்கும், துறவறத்தாருக்கும் பொதுவான வாழ்க்கை மகிழ்ச்சியாகும்.
இல்லறம் என்பதே இல்லம் கொண்டு பொருளேந்தி, காத்து, துய்த்து, பிறருக்கு உதவி வாழக்கூடிய நெறியாகும்.
துறவரம் என்பது பொருள் ஈட்டுவதை மட்டும் நிறுத்தி அறிவுத்துறையில் முழுமை பெற்று அந்த முழுமைப்பேற்றை மக்களுக்கு வழங்கி அவர்களை நல்வழிப்படுத்துதல். தன்னை சமுதாயத்திற்கு அர்ப்பணம் செய்து கொண்டு விருப்பு, வெறுப்பு இன்றி அறிவுத்துறையில் தொண்டாற்றுதல் துறவறம் ஆகும்.
மகிழ் போகம் அனைவருக்குமே வேண்டும். துறவில் உள்ளவர்க்கும் உணவு வேண்டும். அவர்களும் உணவு உண்ணும் போது உடல் ஏற்றுக்கொள்ளும் முறையில் உணவினை இனிமையாகவே அமைத்துக் கொள்வார்கள்.
எந்த ஜீவனுக்கும், உடலுக்கும், உயிருக்கும் அந்த நேரத்தில் தேவையாய் பொருத்தமாய் வந்த அனுபோகம் இன்பமாம் என்ற வகையில் புலன்களைக் கொண்டு இன்பமடையும் போகம் என்பது எல்லோருக்கும் பொதுவே ஆகும்.
You May Also Like: