ஐம்பெரும் தமிழ்க் காப்பியங்களுள் ஒன்றாகவே மணிமேகலை காணப்படுகிறது. இக்காப்பியத்தை சீத்தலை சாத்தனார் இயற்றினார். மணிமேகலை காப்பியமானது தன்னகத்தே பல்வேறு சிறப்புக்களை கொண்டமைந்ததாக காணப்படுகிறது.
நிலையாமை, யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை ஆகியவற்றை சுட்டிக்காட்டி அறம் ஒன்றே வாழ்வின் பண்பும் பயனும் ஆகும் என்பதனை தெளிவாக கூறுகின்ற ஒரு தமிழ்க்காப்பியமே இந்த மணிமேகலையாகும்.
மணிமேகலை காப்பியத்தின் சிறப்புகள்
மணிமேகலை காப்பியமானது தன்னகத்தே பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டமைந்து காணப்படுகிறது. அந்த வகையில் அதன் சிறப்புக்கள் வருமாறு.
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றாக திகழ்கின்றது.
தமிழில் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றாகவே மணிமேகலை காப்பியம் சிறந்து விளங்குகின்றது. இது ஒரு பௌத்த காப்பியமாகும்.
அறக்கருத்துக்களை கூறுவதில் சிறப்பு மிக்க காப்பியமாக திகழ்கின்றது.
மணிமேகலை காப்பியமானது யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை, இளமை நிலையாமை போன்ற மூன்று அறக்கருத்துக்களை கொண்டமைந்ததாக காணப்படுகிறது.
சமுதாய சீர்திருத்த காப்பியமாகும்.
மணிமேகலை காப்பியமானது சமுதாய சீர்திருத்த கருத்துக்கள் பலவற்றை கொண்டதாக காணப்படுகிறது. அதாவது பரத்தைமையை ஒழித்தல், கள்ளுண்ணாமை, சிறைக்கோட்டங்களை அறக்கோட்டமாக மாற்றியமைத்தல் போன்ற சீர்திருத்த கருத்துக்களை கொண்டதாக காணப்படுகிறது. சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுகளை அகற்றி உயர்ந்த சமுதாயத்தை படைப்பதற்கான ஒரு காப்பியமாக மணிமேகலை திகழ்கின்றது.
காப்பியரீதியான பெருமை காணப்படுகிறது.
அதாவது ஐம்பெரும் காப்பிய நூல்களையும் தமிழன்னையின் ஐந்து அணிகலன்கலாக ஆன்றோர்கள் கற்பித்துள்ளார்கள். அந்த வகையில் மணிமேகலையானது ஒரு சிறப்பு வாய்ந்த காப்பியமாகும்.
துறவற வாழ்க்கையினை வலியுறுத்தும் காப்பியமாகும்.
சுகபோக வாழ்க்கை கிடைப்பதனை பொருட்டாக எண்ணாமல் துறவு வாழ்க்கைக்கு போன இளம்பெண்ணின் கதையினை மையமாக கொண்டதாக காணப்படுகிறது.
பௌத்த காப்பியமாகும்.
தமிழில் தோன்றிய முதல் சமய காப்பியமாக இவ் மணிமேகலை காப்பியமே காணப்படுகிறது. இந்நூல் பௌத்த மத சார்புடைய நீதிகளை எடுத்துக்கூறும் பேரிலக்கியமாக திகழ்கின்றது. மேலும் உலக இன்ப நாட்டத்தினை முழுமையாக வெறுத்து பௌத்த மத துறவி தன் பவத்திறம் அறுக என நோற்றுச் சிறப்பு பெற்றதனை செந்தமிழ் நலம் சிறக்க பாடியுள்ளமை சிறப்பிற்குரியதாகும்.
மணிமேகலை காப்பியத்தில் தனக்கு நிகரில்லாத தலைவியாகவே மணிமேகலை எடுத்துக்காட்டப்படுகிறாள் என்பதினுடாக மணிமேகலை காப்பியத்தின் சிறப்புக்கள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.
மணிமேகலை காப்பியத்தின் சமுதாய சிறப்புக்கள்
மணிமேகலை காப்பியத்தில் சமுதாய சிந்தனைகள் இயற்கையாகவே அமைந்துள்ளமையினை காணலாம்.
அதாவது மக்களின் கூட்டுணர்வை வெளிப்படுத்தும் சமுதாய உணர்வை மணிமேகலை காப்பியமானது சிறப்பாக விளக்கியுள்ளது. காலத்தின் பிறப்பால் சாதிகள் அமைத்து சமுதாய உணர்வு தோன்றியதாக காணப்படவில்லை.
மாறாக தொழில் அடிப்படையில் ஒன்று சேர்ந்த மனித இனம் சமுதாயமாக கருதப்பட்டு மணிமேகலையில் சமுதாய ஒற்றுமை மிகவும் நேர்த்தியாக காணப்படுகிறது.
அந்தணர் பற்றிய குறிப்புக்களும், அரச மரபு பற்றிய செய்திகளும், வணிகர்களின் தொழில் முறைமையும், கடைக்கோடி மக்களாம் வேளாளர்களின் வாழ்வியல் உணர்வுகளும் மணிமேகலை காப்பியத்தில் இடம் பெற்றுள்ளமையானது சமுதாய சிறப்பினையே எடுத்தியம்புகிறது.
மணிமேகலை காப்பியமானது வைதீகசமய செயற்பாடுகளை மறுத்து சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுகளை அகற்றி உயர்ந்த சமுதாயத்தை படைத்து காட்டுவதற்கான ஒரு காப்பியமாகும். மேலும் தொழிலாளர் சமுதாயம் பற்றியும் கூறியுள்ளது.
இந்த மணிமேகலை காப்பியமானது சமுதாய பழக்கவழக்கங்கள், தத்துவச் சிறப்பு, தத்துவச் சமுதாயம் போன்ற சமுதாய ரீதியான சிறப்புக்களை உள்ளடக்கியதாக காணப்படுகிறது.
மணிமேகலை காப்பியமானது பல்வேறு சிறப்புக்களை தன்னகத்தே கொண்டமைந்த காப்பியமாக திகழ்கின்றது.
You May Also Like: