முஹர்ரம் மாதத்தின் சிறப்புகள்

muharram matam sirappugal in tamil

இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமே இந்த முஹர்ரம் மாதமாகும். இது ஒரு புனித மாதமாக காணப்படுகின்றது.

முஹர்ரம் மாதம் என்றால் என்ன

முஹர்ரம் மாதம் என்பது இஸ்லாமிய சந்திர நாட்காட்டியின் முதல் மாதமாகும். இது குர்ஆனில் புனிதப்படுத்தப்பட்ட அல் அஸ்ஹருல் ஹரும் என குறிப்பிடப்பட்ட நான்கு மாதங்களில் ஒன்றாகும்.

முஹர்ரம் மாதத்தின் சிறப்புகள்

அல்லாஹ் புனிதமாக்கிய மாதங்களில் சிறப்புமிக்க மாதமாக முஹர்ரம் மாதம் காணப்படுகின்றது.

இந்த மாதத்தின் சிறப்பு பற்றி பின்வரும் அல்குர்ஆன் வசனமானது தெளிவுபடுத்துகிறது.

அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை ஓர் ஆண்டுக்கு பன்னிரெண்டுதான் இவ்வாறே வானங்களையும் பூமியையும் படைத்த நாளில் அல்லாஹ்வின் புத்தகத்தில் பதியப்பட்டுள்ளது. அவற்றில் 4 மாதங்கள் சிறப்புற்றவை. இதுதான் நேரான மார்க்கம் ஆகும். ஆகவே இவற்றில் நீங்கள் உங்களுக்கு தீங்கிழைத்து கொள்ள வேண்டாம். (அலகுர்ஆன் 9:36)

உலகில் வாழ்ந்த மிகப் பெரும் கொடுங்கோலர்களில் ஒருவனான பிர்அவ்ன் இம்மாதத்தின் பத்தாம் நாளில் தான் அழியப்பட்டான். மேலும் மூஸா நபியும் அவர்களுடைய இறை விசுவாசிகளும் பாதுகாக்கப்பட்ட ஓர் அற்புத மாதமாகும்.

முஹர்ரம் மாதத்தில் நோன்பு நோற்பது சிறப்பிற்குரியதாகும். ஏனெனில் இம்மாதம் சிறப்பும் மேன்மையும் பொருந்தியதொரு மாதமாக காணப்படுகின்றது.

இது பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹரைரா (ரழி) அறிவிக்கிறார்கள்: ரம்ழான் மாதத்தில் உள்ள நோன்புகளுக்கு பிறகு சிறந்த நோன்பு அல்லாஹ்வுடைய மாதம் முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும். பர்ளான தொழுகைக்கு பிறகு சிறந்த தொழுகை இரவு தொழுகையாகும். (முஸ்லிம்:747) முஹர்ரம் மாதத்தில் ஆஷுரா நோன்பு நோற்பது சிறப்புமிக்கதாகும்.

அதாவது முஹர்ரம் பிறை 9, 10 ஆகிய நாட்களில் நோன்பு நோற்பது சிறந்த வணக்கமாக காணப்படுகின்றது. மேலும் இம்மாதத்தில் 9ம் நாள் நோன்பு இருக்க தவறிவிட்டாலும் 10ம் நாள் மட்டுமாவது நோன்பு இருக்க முடியும்.

இந்நாளில் நோன்பு நோற்பவர்களது பாவங்கள் மன்னிக்கப்படும். இம்மாதத்தில் போர் செய்வது தடுக்கப்பட்டதாகும்.

முஹர்ரம் மாதமும் ஆஸரா நோன்பின் சிறப்புக்களும்

முஹர்ரம் மாதத்தில் 9, 10 ஆகிய நாட்களில் இவ் ஆஸரா நோன்பானது நோற்கப்படும். எனவே இவ்வாறான புனிதமிக்க நாளில் நோற்கப்படும் ஆஷுரா நோன்பின் சிறப்புக்கள் பற்றி பின்வரும் ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஸரா) நோன்பு நோற்பதை அதற்கு முந்தைய ஓராண்டின் பாவத்திற்கு பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என எதிர்பார்க்கிறேன். அறிவிப்பாளர்: ஹழ்ரத் அபூ கதாதா (நூல்:முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்களிடம் ஆஸரா நோன்பு பற்றி கேட்கப்பட்ட போது அதற்கவர்கள் அது கடந்த ஆண்டின் பாவத்திற்கு பரிகாரமாகும் என்றார்கள். (நூல்:முஸ்லிம்) இந்த ஹதீஸினூடாக கடந்த வருட பாவங்கள் இந்த நோன்பு நோற்பதினூடாக மன்னிக்கப்படுகின்றன.

மற்றுமொரு ஹதீஸில் அடுத்த ஆண்டு வரை நான் உயிரோடு இருந்தால் ஒன்பதாவது நாளிலும் நோன்பு நோற்பேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்:முஸ்லிம்) இந்த ஆஷுரா நோன்பானது சுன்னத்தான நோன்புகளிலும் சிறப்புமிக்கதொரு நோன்பாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் நிச்சயமாக ஆஷுரா தினமானது அல்லாஹ்வின் தினங்களில் ஒன்றாகும். அத்தினத்தில் விரும்பியவர் நோன்பை நோற்கட்டும், விரும்பியவர் நோன்பை விட்டு விடட்டும் என கூறினார்கள். (நூல்:முஸ்லிம்)

மேற்குறிப்பிட்ட வகையில் முஹர்ரம் மாதத்தில் சிறப்பு மிக்கதொரு நோன்பாக இந்த ஆஷுரா நோன்பானது காணப்படுகின்றது.

You May Also Like:

ஆஷூரா என்றால் என்ன

நற்செயல் என்றால் என்ன