மெய்யியல் என்றால் என்ன

meiyiyal

மெய்யியல் என்றால் என்ன

மெய்யியல் என்பது வரலாற்று காலம் தொட்டே அறிவின் மிகப் பழமையானதும், மதிப்பு மிக்கதுமான ஓர் பிரிவாக இருந்து வருகின்றது. மனிதர்கள் எதற்காக வாழ வேண்டும்? அவர் தம் வாழ்வின் நோக்கங்கள் எவை? என்பது பற்றி உணர்வதற்கு அறிவு அவசியமானதாகும்.

இத்தகைய அறிவினை மெய்யியலே நமக்கு அளிக்கின்றது. எல்லா விஞ்ஞானங்களுக்கும் ஆரம்ப சிந்தனையாக இருந்தமையால் மெய்யியல் எல்லா விஞ்ஞானங்களுக்கும் விஞ்ஞானமாக சுட்டிக் காட்டப்படுகின்றது. (Mother of Science).

ஆரம்ப காலங்களில் வாழ்ந்த மக்கள் தம்மைப் பற்றியும், தமக்கு புறம்பானவை பற்றியும் ஆராய ஆரம்பித்தபோது பல வினாக்களை அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

குறிப்பாக இந்த உலகம் எதற்காக இயங்குகின்றது? இந்த உலகத்தினது இருப்பு எத்தகையது? போன்ற பல கேள்விகளை கேட்டு அவர்கள் தங்கள் விசாரணையை ஆரம்பித்தனர்.

இந்த ஆரம்ப தேடலே உலகளாவிய ரீதியில் மெய்யியல் சிந்தனைகளின் தோற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் பங்களிப்புச் செய்தது எனலாம்.

மெய்யியல் என்றால் என்ன

மெய்யியல் என்ற சொல்லானது ‘Philosophia’ இன்னும் கிரேக்கச் சொல்லிலிருந்து தோற்றம் பெற்றதாகும். இது ஆங்கிலத்தில் Philosophy என்று அழைக்கப்படுகின்றது. இது Philo, Sophia எனும் இரண்டு சொற்களின் இணைவினால் அமையப் பெற்றுள்ளது.

பிலோ என்றால் விருப்பம், நேசம் அல்லது விளைவினைக் குறிக்கின்றது. சோபியா என்றால் ஞானம் எனும் அர்த்தத்தை குறிக்கின்றது. இது அறிவை நேசிப்பது என்று பொருள்படும்.

எனவே Philosophy எனும் சொல்லானது ஞானத்தின் விருப்பு அல்லது ஞான நேயமென அர்த்தப்படுகின்றது. இந்திய சிந்தனையில் ‘தரிசனம்’ எனும் சொல் இதற்கு இணையான சொல்லாக பயன்படுத்தப்படுகின்றது.

தத்துவ அறிஞரான அரிஸ்டோட்டில் “உண்மையை அறிய முயலும் விஞ்ஞானமே மெய்யியல்” என்கின்றார்.

மேலும் பிளாட்டோ மெய்யியல் பற்றிக் கூறும் போது “உண்மை, நன்மை, அழகு பற்றிய விமர்சன ரீதியான பகுப்பாய்வே மெய்யியல் என்கின்றார்.

மெய்யியலின் பிரதான கூறுகள்

வரலாற்றின் ஆரம்பத்தில் பல பிரிவுகளாக மெய்யியல் வளர்ச்சி அடையவில்லை. பிற்பட்ட காலத்திலேயே மெய்யியல் வளர்ச்சி அடைந்தது. பொதுவாக மெய்யலை 4 கூறுகளாகப் பிரிப்பர். அவையாவன அறிவாராட்சியியல், அழகியல், ஒழுக்கவியல், பௌதீக அதீதம் என்பனவாகும்.

அறிவாராய்ச்சியியல்

மெய்யியல் ஆய்வின் அறிவாற்றியல் மிகவும் முக்கியமானதாகும். அறிவு என்றால் என்ன? அது அபிப்பிராயத்தில் இருந்து எவ்வகையில் வேறுபடுகின்றது? அறிவென ஒன்று உண்மையில் உள்ளதா? அல்லது வெறும் அபிப்பிராயத்துடன் நாம் திருப்தி அடைய வேண்டுமா? போன்ற வினாக்களை அறிவாராய்ச்சியியல் ஆராய்கின்றது.

அறிவு, நம்பிக்கை, உண்மை, பொதுமை போன்ற பல எண்ணக்கருக்களை விசாரணைக் உட்படுத்துகின்றது.

பௌதிக அதீதம்

பௌதிக அதீதம் என்பது உள்பொருள் பற்றி சிந்திப்பதும், விசாரணை செய்வதும், ஏற்றுக் கொள்வதும், நிராகரிப்பதுமாகும். இதனைத் தான் சிலர் முதல் மெய்யியல் என்பர்.

ஒழுக்கவியல்

மெய்யலின் முக்கிய பகுதியாக ஒழுக்கவியல் காணப்படுகின்றது. இது மனிதனது ஒழுக்க சிந்தனையுடன் தொடர்புடையதாகும்.

அழகியல் அல்லது இரசனையியல்

அழகியல் என்பது கட்டுணர்தல் எனப் பொருள் கொள்ளப்படுகின்றது. இது உணர்வு சார்ந்த சிந்தனை ஆகும். ஆங்கிலத்தில் அழகியல் என்ற சொல் Aesthetics என அழைக்கப்படுகின்றது. இது ‘Aesthetikos’ எனும் கிடைக்கச் சொல்லிலிருந்து தோற்றம் பெற்றதாகும்.

இது கலைகளின் மெய்யியல் அழகியற்கலை அல்லது அழகியல் விழுமியங்களைப் பற்றி ஆராய்கின்றது.

You May Also Like:

கல்வி புரட்சி கட்டுரை