யுகாதி பண்டிகை என்றால் என்ன

ugadi pandigai enral enna

ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் வாழும் இந்து மக்கள் இப்பண்டிகையினை மிக சிறப்பாக கொண்டாடி வருகின்றார்கள். பிரம்ம தேவர் தனது படைத்தல் தொழிலை இந்நாளிலேயே தான் தொடங்கியுள்ளார் என்றும் குறிப்பிடுகின்றனர்.

யுகாதி பண்டிகை என்றால் என்ன

குறிப்பாக இந்தியாவின் ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் வாழும் மக்களின் வருடப்பிறப்பு தினமே யுகாதி பண்டிகை.

யுகாதி பண்டிகை என்பது யாதெனில் யுகாதி என்பது யுகத்தின் ஆரம்பத்தை குறித்து நிற்பதோடு அந்நாளில் கொண்டாடப்படும் பண்டிகை யுகாதி பண்டிகை ஆகும்.

அதாவது சித்திரை மாதத்தின் முதல் நாளிலேதான் பிரம்மா உலகத்தை படைத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளதோடு அந்நாளில் கொண்டாடப்படும் பண்டிகையே யுகாதி பண்டிகை ஆகின்றது.

யுகாதி பண்டிகை கொண்டாடும் முறை

யுகாதி பண்டிகைகையானது இந்துக்களினால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும்.

இப்பண்டிகைகையானது கொண்டாடப்படும் முறையினை நோக்குவோமானால் பிரம்ம முகூர்த்த வேளையில் அல்லது சூரிய உதயத்திற்கு முன்பாக தெய்வத்திற்கு விளக்கு ஏற்றி வழிபாட்டில் ஈடுபட வேண்டும்.

மேலும் இஷ்ட தெய்வங்களுக்கு முன்னால் படையல் வைத்து ஆர்த்தி செய்ய வேண்டும் மேலும் அந்நாளில் செய்த படயலை வறியவர்களுக்கு கொடுத்து உதவுதல் வேண்டும்.

யுகாதி பண்டிகை நாளில் இறைவனுக்கு படையல் வைத்து சூரியனை வழிபடுவார்கள். மேலும் மாலைப்பொழுதில் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வார்கள்.

அந்நாளில் அனைவரும் சந்தோசமாக இருப்பதோடு கவலைகள் மற்றும் கஸ்டங்களை மறந்து செயற்படுவார்கள். இதன் மூலமாக ஒரு சிறந்த நாளாக அந்நாள் அமைகின்றது.

யுகாதி பண்டிகை நாளில் சிறப்பு உணவாக யுகாதி பச்சடியினை இந்துக்கள் செய்வார்கள். இது மாங்காய், புளி, வெல்லம், வேப்பம் பூ, உப்பு போன்றவற்றை கொண்டு செய்யப்படுகின்றது.

யுகாதி பண்டிகையின் முக்கியத்துவம்

யுகாதி பண்டிகை நாளில் ஏராளமானோர் தொழில்களை மேற்கொள்கின்றனர். அதாவது இந்நாளில் துவங்கப்படும் காரியங்கள் பாரிய வளர்ச்சியை ஏற்படுத்தும் என்பது நம்பிக்கையாகும்.

அதாவது இந்நாளில் திருமணங்கள் நடத்துவது இந்நாளின் முக்கியத்தினை வெளிப்படுத்துகின்றது.

இந்நாளானது அனைவருடைய வாழ்க்கையிலும் மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தும் ஒரு நாளாக காணப்படுகின்றது.

நாம் வாழ்கின்ற வாழ்க்கையில் இன்பம் துன்பம் மாறி மாறி இடம் பெறுவது நிதர்சனமாகும். அந்தவகையில் துன்பம் ஏற்படுகின்றபோது துவண்டுவிடாமல் நம்பிக்கையுடன் வாழ்க்கையை வாழ்வதற்கு இந்த யுகாதி பண்டிகையானது துணைபுரிகின்றது.

யுகாதி பண்டிகையானது வாழ்க்கையில் பொறுமை, சகிப்புதன்மையுடையவராக ஒரு மனிதனை மாற்றுவதற்கு துணைபுரிகின்றது. யுகாதி நாளானது மிகவும் முக்கியமானதொரு நாளாக காணப்படுவது சிறப்பிற்குரியதாகும்.

யுகாதி பண்டிகையானது தன்னுள்ளே பல்வேறுவகையான சிறப்புக்களை கொண்டமைந்து காணப்படுதோடு இப் பண்டிகை நாளானது அனைவரையும் ஒற்றுமையுடன் இணைப்பதற்கு துணைபுரியும் ஒரு நாளாக காணப்படுகின்றது.

யுகாதி பண்டிகையின் மற்றுமொரு முக்கியத்துவமாக யுகத்தின் ஆரம்பத்தினை சுட்டிக்கட்டும் ஒரு பண்டிகையாக காணப்படுவது சிறப்பிற்குரியதாகும். இதனுடாக அன்றய நாளானது மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளாகவே யுகாதி பண்டிகை நாள் காணப்படுகின்றது.

அந்த வகையில் ஒவ்வொரு இந்துக்களின் வாழ்விலும் மிகவும் சிறப்புக்குரியதொரு நாளாக யுகாதி பண்டிகை நாள் திகழ்கின்றது.

மேலும் இந்நாளில் அனைத்து இந்து மக்களும் சந்தோசமாகவும் ஒற்றுமையாகவும் திகழ்வதோடு மட்டுமல்லாமல் வாழ்க்கை சிறப்பாக அமைய இந்நாளில் பூஜைகளினையும் விசேடமாக மேற்கொள்வார்கள்.

இப்பண்டிகை தினத்தில் சிவனை வழிப்படுவதன் மூலம் அனைத்து காரியங்களும் சிறப்பாக நடைபெறும் என்றும் நம்புகின்றனர்.

You May Also Like:

போகம் என்றால் என்ன