வரலாறு கற்பதன் பயன் கட்டுரை

வரலாறு கற்பதன் பயன் கட்டுரை

வரலாறு என்பது இறந்த காலத்தைப் பற்றி கற்று நிகழ்காலத்துக்கு தேவையான தகவல்களை பெற்றுக் கொள்வதோடு சிறந்த எதிர்காலத்தை அமைத்துக் கொள்வதற்கும் உதவுவதாக காணப்படும்.

அதாவது சரியான வரலாற்றை கற்றுக் கொண்டு எதிர்கால சந்ததியினருக்கு கடத்துவதானது சிறந்த சமுதாயத்தை உருவாக்க வழிவகுக்கும்.

வரலாறு கற்பதன் பயன் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • வரலாறு என்றால் என்ன
  • வரலாற்றின் முக்கியத்துவம்
  • வரலாறு கற்பதன் பயன்கள்
  • சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் வரலாற்றின் பங்கு
  • முடிவுரை

முன்னுரை

மனித இனம் பல்வேறு கட்டங்களின் ஊடாக படிமுறை வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த நாகரீக வளர்ச்சி கட்டங்களை பற்றி மனிதன் அறிந்து கொள்வதன் மூலம் அவன் சிறப்பாக செயற்பட உதவியாக அமையும். எனவே வரலாறை கற்பது அவசியமானதாகும்.

வரலாறு என்றால் என்ன

“வரலாறு என்பது மறக்க முடியாத இறந்தகால நிகழ்வுகளின் தொகுப்பாகும்” என கிரேக்க கால அறிஞரான அரிஸ்டோட்டில் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது ஆதிகால மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கையை எவ்வாறு முன்னெடுத்துள்ளான், பழக்கவழக்கங்கள் எவ்வாறு காணப்பட்டுள்ளன, அவர்களுடைய கல்வி கலாசார நிலைகள் எவ்வாறு அமைந்துள்ளன, உணவு முறை மற்றும் தொழில் முறை போன்றன எவ்வாறு எல்லாம் இன்றைய காலகட்டம் வரை படிப்படியாக வளர்ச்சி அடைந்துள்ளன என்பதனை கற்கும் ஒரு கலையே வரலாறு ஆகும்.

வரலாற்றின் முக்கியத்துவம்

எமது முன்னோர்களின் வாழ்வினை பற்றி அறிந்து கொள்ளவும், அவர்கள் வாழ்க்கையை நடத்துவதற்கு வைத்திருந்த யுக்தி முறைகளையும் கருவிகளையும் பற்றி அறிவதற்கு உதவுவதோடு மீண்டும் வரலாறு என்பது பிழைக்காமல் இருப்பதற்கும் இந்த வரலாற்றுக் கற்கை முக்கியமானதாக உள்ளது.

வரலாறு கற்பதன் பயன்கள்

எமது கலாச்சாரத்தின் தொடக்கம் மற்றும் ஏனைய கலாச்சார பழக்க வழக்கங்கள் பற்றியும், பழங்காலத்தில் பயன்படுத்திய பொருட்களைப் பற்றியும், நாட்டின் தேசிய தனித்துவத்தை பற்றியும், நாம் வாழும் உலகம் பற்றியும், சமூகம் பற்றியும்,

இறந்த காலத்தின் ஊடாக நிகழ்காலத்தை விளங்கி எதிர்காலத்தை எவ்வாறு கட்டி அமைக்கலாம் என்பது பற்றியும், கடந்த கால வெற்றி தோல்விகளை அறிந்து எதிர்காலத்தை எவ்வாறு முன்னெடுக்கலாம் என்பது பற்றியும் வரலாற்றை கற்பதனால் அறிந்து கொள்ளலாம். இவை அனைத்தும் வரலாறை கற்பதன் பயன்களாக காணப்படுகின்றன.

சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் வரலாறின் பங்கு

நாம் வாழும் இந்திய நாடானது பல்வேறு சமூகத் தன்மைகளைக் கொண்ட ஒரு நாடாகும். எனவே இங்கு பல்வேறு இனங்கள், சமூக குழுக்கள் வாழ்கின்றன. இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான கலாச்சார பழக்க வழக்கங்கள் காணப்படுகின்றன.

ஆகவே நாம் வரலாற்றை கற்பதனால் எமது கலாச்சாரங்களை மாத்திரம் இல்லாமல் பிற சமூகத்தையும், கலாச்சார பழக்க வழக்கங்களையும் தெரிந்து கொள்வதன் மூலம் ஏனையவர்களையும் மதிக்கும் தன்மை ஏற்படுவதனால் சமூகத்தில் நல்லிணக்கம் உருவாகும்.

முடிவுரை

இன்றைய நவீன உலகம் பல்வேறு வியத்தகு விந்தைகளை செய்தாலும் கூட அவற்றுக்கு அடித்தளமாக வரலாறு அமைந்திருப்பதனை காணலாம்.

எனவே ஒவ்வொரு மனிதனும் தமது வரலாறை சரியாக கற்றுக் கொள்வது அவரது உரிமையாகும். இவ்வாறு கற்றுக் கொண்டு எதிர்கால சந்ததியினருக்கு முறையாக கடத்துவதின் மூலமே சிறந்த ஒரு சமுதாயத்தை உருவாக்க முடியும்.

You May Also Like:

சங்க இலக்கிய வரலாறு கட்டுரை

யதார்த்தவாதம் என்றால் என்ன