வாதம் என்றால் என்ன

vatham enral enna

திருமூலர் “அண்டமே பிண்டம், பிண்டமே அண்டம்” எனக் கூறியுள்ளார். அதாவது உடம்பில் இருப்பதே உலகிலும் இருக்கிறது. உலகில் இருப்பதே உடம்பிலும் இருக்கின்றது.

நமது உடலானது பஞ்சபூதங்களால் ஆனது. நீர், நிலம், நெருப்பு, ஆகாயம், காற்று ஆகியனவாகும். உடம்பில் உள்ள சதை, உறுப்புக்கள், எலும்புகள் நிலத்தையும், வயிறு, குடல், கர்ப்பப்பை, நுரையீரலில் உள்ள காலியிடம் ஆகாயத்தைக்கும் குறிக்கும்.

நம்மைச் சுற்றியுள்ள ஆகாயம் பூமியின் அளவு என்றும் மாறுவதில்லை. அதே போல் தான் நம் உடலில் உள்ள ஆகாயம் மாறாது. ஆனால் ஆகாயத்துடனும், நிலத்துடனும் காற்று, வெப்பம், நீர், சேரும் போது ஆகாயமும், நிலமும் மாறுதலுக்கு ஆளாகும்.

அதேபோல் நமது உடலில் காற்று, நீர், வெப்பம் தான் ஆகாயத்தின் தன்மையையும், நிலத்தின் தன்மையையும் மாற்றும். இதனால்தான் இந்த மூன்றையும் அடிப்படையாக வைத்து நோயை அறிகின்றனர்.

வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் உடலில் சரியான அளவில் இருந்தால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். வாதமானது இயற்கையாகவே வயதாக வயதாக உடலில் அதிகமாகும். நுரையீரலின் மூலமாக வரும் காற்று ரத்தத்துடன் சேர்வதால் வாதமாக மாறுகின்றது.

இந்த வாதமானது உடலில் சேர்ந்தால் தான் உடலில் உள்ள எல்லா செல்களும் வளர்ச்சி அடையும். வாதத்தின் தன்மை குளிர்ச்சி வறட்சி ஆகும். இந்த வாதத்தின் இருப்பிடம் தொப்புள் கீழ்பகுதி நரம்பு, எலும்புகள், குடல் பகுதி, இடுப்புப் பகுதிகளாகும்.

வாதம் என்றால் என்ன

நமது உடலில் தேங்கிய காற்று வாதமாகும். நமது உடலில் உள்ள காற்று, வெப்பம் நீரைத் தான் வாதம், பித்தம், கபம் என்கின்றோம். சித்த மருத்துவ அடிப்படையில் ஒருவரின் உடல் நலத்தில் இவை மூன்றும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

வாதத்தின் தொழிற்பாடு

வாதமானது உடலில் பல தொழிற்பாடுகளை மேற்கொள்கின்றது. அவையாவன, சுவாசம், ரத்த சுழற்சி கழிவுகளை வெளியேற்றுதல், ஐம்புலன்களின் வேலையை சரியாக செய்தல், எல்லாவிதமான அசைவுகளுக்கும் செயல்களுக்கும் வாதம் காரணமாக உள்ளது.

வாதம் ஏற்படக் காரணங்கள்

அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வது, தூங்காமல் இருப்பது, அதிகளவில் வேலை செய்தல், அதிகமான மன அழுத்தம், சிறுநீர், பசி, தாகம் போன்றவற்றை அடக்குதல், கோபம், பயம், அதிக குளிர்ச்சியான உணவு உண்ணுதல் போன்ற காரணங்களினால் வாதம் ஏற்படுகின்றது.

வாதத்தால் ஏற்படும் நோய்கள்

உடலில் வாதநாடி குறைவாகவோ அல்லது, மிகுதியாகவோ காணப்படும் போது வாதம் தொடர்பான நோய்கள் ஏற்படும்.

வாதம் அதிகமானால், நகம் வெடிப்பு, கால் வெடிப்பு, குதிக்கால் வலி, ஒற்றைத் தலைவலி, முகவாதம், நரம்புவலி, வலிப்பு, கருவளையம், குடல் இறக்கம், கல்லீரல் வீக்கம், சிறுநீரகக் கற்கள், இடுப்புவலி, மூட்டுப்பிடிப்பு, கணுக்கால்வலி, முட்டிவலி,

சுவையின்மை, கண் இமை வாதம், குரல்வளைய வலி, குரல்வளைய வீக்கம், கர்ப்பப்பை நீர்க் கட்டிகள், உடல் இளைத்து கருத்து விடுதல், நடுக்கம், மலச்சிக்கல், தலைச்சுற்று, படபடப்பு, கைகால் குடைச்சல், நரம்புப் பிடிப்பு, தூக்கம் கெடுதல், உடற்சோர்வு போன்ற பல நோய்கள் ஏற்படலாம்.

You May Also Like:

உடற்கல்வி என்றால் என்ன