வாழ்வின் ஐந்து பருவங்கள்

மனித வாழ்வானது பல்வேறு வகையான நிலைகளை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது. அந்த வகையில் மனித வாழ்வானது ஐந்து படி முறைகளாக அமைந்துள்ளது.

வாழ்வின் ஐந்து பருவங்கள்

அதாவது ஒரு மனித வாழ்வானது ஐந்து பருவங்களாக காணப்படுகின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றை பின்வருமாறு நோக்கலாம்.

1. குழந்தைப் பருவம் (குழந்தை மற்றும் ஒரு வயது வரை)

இது குழந்தை பிறந்தது முதல் 1 வயது வரைக்குமான காலப்பகுதியாகும். குழந்தைகள் இந்த வயதில் நிறை மற்றும் உயரத்தில் விரைவாக அதிகரித்து காணப்படுவர்.

இப்பருவத்தில் தாய்ப்பாலூட்டல் மற்றும் போசாக்கான உணவுகளை வழங்குதல் அவசியமானதாகும். இக்காலப்பகுதியில் இருந்து மனித வாழ்வின் வளர்ச்சிக் கட்டங்கள் ஆரம்பிக்கப்படுகின்றன.

இவ்வாறான பருவத்தில்தான் குழந்தை தனது சூழலை கற்றுக் கொள்ளவும் அது படி செயற்படவும் கற்றுக் கொள்கின்றது.

2. குறுநடை போடும் குழந்தை பருவம் (ஒன்று முதல் ஐந்து வயது வரை)

ஒன்று முதல் ஐந்து வயது வரையான குழந்தை பருவத்திலேயே ஒரு குழந்தை தன்னகத்தே பல திறன்களை வளர்த்து கொண்டு வருகின்றது. இந்நிலையில் அறிவாற்றல் நிலையை ஏற்படுத்துவதோடு அவ்வாறு செயற்படவும் கற்று கொள்கின்றது.

அனைவரையும் பார்த்து பல்வேறு செயல்களை மேற்கொள்கின்றது. இவ்வாறான வயதிலேயே சரி, தவறு என்பவற்றை கற்றுக் கொடுப்பதன் மூலம் சரிவர அவர்களுக்கு அறிவை வழங்க முடியும். இவர்கள் விளையாட்டினை அதிகம் விரும்ப கூடியவர்களாகவே காணப்படுகின்றனர்.

3. குழந்தை பருவம் (3 முதல் 11 வயது வரை)

இப்பிரிவினுள் ஆரம்ப குழந்தை பருவமானது 3 முதல் 8 வயது வரையும் நடுத்தர குழந்தை பருவமானது 9 முதல் 11 வயது வரையும் காணப்படுகின்றது. இப்பகுதியில் குழந்தைகளானவர்கள் அறிவாற்றல் நிறைந்தவர்களாக காணப்படுகின்றார்கள்.

இப்பருவத்தில் விளையாட்டில் ஈடுபடுபவர்களாகவும் கற்றலுக்கான விடயங்களிலும் செல்வாக்கு செலுத்துவார்கள். மேலும் இவர்கள் தொழிநுட்ப திறன்கள் போன்றவற்றை பெற்று காணப்படுவார்கள். புத்தி கூர்மையுடையவர்களாகவும் பிரச்சினைகளை எதிர் கொள்ள கூடியவர்களாகவும் இவர்கள் காணப்படுவர்.

4. இளமைப் பருவம் (பதின்ம பருவம் 12 முதல் 18 வயது வரை)

மனித வாழ்வில் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழக் கூடிய பருவமாகவே இளமைப் பருவம் காணப்படுகின்றது. இளமைப் பருவத்தில் சமூக மற்றும் உணர்வுகள் ரீதியாக பல மாற்றங்கள் இடம் பெறும்.

வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது தொடர்பான பல துறை சார்ந்த கற்றல் மற்றும் செயற்பாடுகளை கொண்டமைந்து காணப்படுவர்.

இந்த இளமைக் காலப்பகுதிகளிலே சிலர் தீய வழிகளிலும் செல்வதுண்டு இவ்வாறான தீய வழிகளை தவிர்த்து நல்ல வழிகளில் செல்வது எமது வாழ்வை சிறப்பான பாதையில் கொண்டு செல்லும்.

5. முதிர் வயது

முதுமை வயதானது 50 முதல் இறப்பு வரை நீடிக்க கூடியதாகும். இந்த கட்டத்தில் தனி நபர்கள் தனது செயற்பாடுகளை சமூகத்திற்காக பங்களிப்பு செய்கின்றார்கள். மேலும் தன்னார்வ மற்றும் தொண்டு செய்கின்ற நிறுவனங்களுக்கு பல நன்கொடைகளை மேற்கொள்கின்றனர்.

முதுமை வயதை அடையும் போது முதுமையானவர்களை சிறு குழந்தைகளாகவே பார்த்தல் வேண்டும்.

மேற்குறிப்பிட்ட வகையில் ஒரு மனிதனுடைய வாழ்வானது ஐந்து கட்டங்களாக காணப்படுகின்றது. மேலும் இளமைப் பருவமானது மனிதனுடைய வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைவதோடு வாழ்க்கையை சிறந்த முறையில் வாழ்வதற்கு இப்பருவமானது உறுதுணையாக அமைகின்றது.

You May Also Like:

கலால் வரி என்றால் என்ன

பருப்பொருள் என்றால் என்ன