அச்சம் என்பது மனிதனும் ஏற்படும் பயம் என்னும் ஓர் உணர்வு. இது பாவமான சில கெட்ட செயல்களை செய்யும் போது தயக்கத்தையும் குற்றவுணர்வையும் ஏற்படுத்தி தீய செயல்களை தவிர்க்க உதவும்.
எனினும் பெரும்பாலான பல சந்தர்ப்பங்களில், நல்ல செயல்களுக்கான முயற்சிகளும், ஊக்குவிப்புகளும் தயங்கத்தினால் தடைப்படுகிறது. ஆகவே தான் அச்சம் தவிர்ப்பது சிறப்பு ஆகும்.
அச்சம் தவிர் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- பயம் என்பது
- ஏன் அச்சம்
- தைரியம் அவசியம்
- அச்சம் தவிர்
- முடிவுரை
முன்னுரை
அச்சம் அல்லது பயமானது மனிதனுள் ஏற்படும் ஒரு மன உணர்வு. இது மனிதனுள் சாதகமான விளைவுகளை மட்டுமல்லாமல் பல பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்துகிறது.
உதாரணமாக பயம் ஏற்படும் போது கவனமும் மூளையின் கூர்மை, துல்லியமும் ஒருமித்து, வேலை செய்து நல்ல ஆற்றலோடு, அந்த பயத்தை சந்திக்கக்கூடிய எல்லா வலிமையும் மனப்பக்குவத்தையும் ஏற்படுகிறது.
அதே சமயம் பலருக்கு பதற்றம், மன அழுத்தம், படபடப்பு மற்றும் நல்ல பல முயற்சிகளுக்கு தடையான தயக்கமும் ஏற்படுகிறது. ஆகவேதான், அச்சம் தவிர் என்றார் பாரதியார்.
அச்சம் மனித முன்னேற்றத்திற்கும், சந்தோஷமான வாழ்விற்கும் ஒரு பெரிய தடையாகின்றது. இதனால் அச்சத்தை தவிர்த்துக்கொள்வது சிறந்தது.
பயம் என்பது
பயம் அல்லது அச்சம் என்பது முன்னெச்சரிக்கைகாக இயல்பாக எழும் ஒருவித சாதாரண மன உணர்வு ஆகும். இந்த உணர்வு இல்லாத மனிதர்களே இருக்க முடியாது. இது ஒரு குறைபாடோ அல்லது பிரச்சனையோ இல்லை.
எதிர்கொள்ளப்படும் சவால்களுக்காகவும் சூழ்நிலைகளுக்காகவும் தயார்படுத்திக் கொள்வதற்கு இந்த உணர்வு இயற்கையாகவே மனிதன் மட்டுமல்லாது விலங்குகளிலும் உண்டு.
இதனை சவாலை சந்திப்பதற்கு உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் தயார்படுத்தும் ஒருவித அறிகுறியாக கூறலாம்.
ஏன் அச்சம்
பயம் ஒரு விதமான கற்பனையினால் ஏற்படுகிறது. எதிர்காலத்தில் நடக்கப் போகிறவற்றை நினைத்தோ அல்லது ஏதோ ஒரு ஆபத்தை நினைத்தோ அல்லது வலி ஏற்படும் போதோ, மற்றும் சிலரது அறியாமையினாலும், சிலருக்கு குழப்பம் மற்றும் சந்தேகங்கத்திலும், பலவீனத்தினாலும், தைரியமின்மையினாலும் அச்சம் ஏற்படுகின்றது.
தைரியம் அவசியம்
வெற்றி பெற முடியாது என்ற அச்சத்தாலும் தன்னம்பிக்கை இல்லாமை போன்ற காரணத்தாலும் தான் பலர் முயற்சிக்கான முதல் அடியை எடுத்து வைக்க தயங்குகின்றனர். முதல் அடியை எடுத்து வைக்காதவர் எப்போதுமே வாழ்வில் அடுத்த நிலைக்கு செல்ல முடியாது.
அச்சம் என்பது ஓர் அடிப்படை உணர்ச்சி. நம்மில் பலர் வாழ்வில் மகிழ்ச்சியை உணர்வதை விட அதிகம் பயத்தையே உணர்கின்றோம். நாம் அனைவரும் எம்மில் வளர்க்க வேண்டிய முக்கியமான பண்புகளில் ஒன்றாக தைரியம் காணப்படுகின்றது. ஏனென்றால் தைரியம் இல்லாத மனிதனிடம் பிற நல்ல குணங்கள் வளர்வது கடினம் ஆகும்.
பயம் ஏற்பட்டு அதிலிருந்து மீண்டு வந்து விட்டால் அது ஏற்படுவதில் எந்த பிரச்சினையும் இல்லை. அதுவே, அந்த பயத்தினால் எந்த வேலையும் செய்ய முடியாமல் தடுமாறும் போது பிரச்சனை ஏற்படுகிறது. பயம் வரும் போது மனதை தளர விடாமல் தைரியப்படுத்திக்கொள்ள வேண்டும்.
அச்சம் தவிர்
ஆபத்து ஏற்படப்போகிறது என்ற உணர்வு ஏற்படும் போது அச்சம் என்பது இயல்பாகவே தோன்றிவிடுகிறது. இந்த உணர்வு கவலை, பதற்றம், மன அழுத்தம், படபடப்பு என பல்வேறு விதத்தில் வெளிப்படுத்தப்படுகின்றது.
பயம் என்பது முழுக்க முழுக்க நம் மன எண்ணம் மட்டுமே ஆகும். அது எம் கற்பனையாலும் எம் எண்ணத்தாலும் விளைவது ஆகும் ஆகும். இந்த பயம் என்ற உணர்வை எம் மனதை திடப்படுத்துவதன் ஊடாக வெற்றி கொள்ள முடியும்.
முடிவுரை
இந்த பயம் என்ற உணர்வு இயல்பாகவே எழுந்தாலும் அந்த பயத்தையும் தாண்டி சாதனைகளும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.
பயப்படும் சந்தர்ப்பங்களில் துவண்டு போகாமல் தன் மீதும், தன் ஆற்றல் மீதும் நம்பிக்கை வைத்து சவால்களை எதிர்கொள்ளும் போது, தன்மீதே மரியாதையும் தைரியமும் வளர்வதோடு முன்னேறிச்செல்வதற்கான ஆற்றல் தானாகவே உருவாக வழிவகுக்கிறது.
எனவே அச்சம் தவிர்த்து தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் வளர்த்து இலக்கினை அடைவோமாக.!
You May Also Like: