ஆசிரியர் தினம் பேச்சு போட்டி

teachers day speech in tamil

அனைவருக்கும் எனது மனமார்ந்த முதற்கண் வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன். அறிவு கண் திறந்து கல்வியை மட்டுமே எமக்கு புகட்டாமல் வாழ்க்கை கல்வியையும் கற்றுத்தந்த ஆசிரியர்களை முன்னிட்டு இன்றைய தினத்தில் ஆசிரியர் தினம் பற்றியே பேசப்போகின்றேன்.

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்விலும் ஒரு பிரதானமானதொரு இடத்தினை ஆசிரியர்களே பெற்றுள்ளனர்.

இன்று நாட்டில் வாழ்கின்ற மக்களின் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதன் ஊடாக ஒரு சிறந்த சமூகத்தை உருவாக்க கூடியவர்களாக ஆசிரியர்களே திகழ்கின்றனர். இதன் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் ஆசிரியர்களை கௌரவிக்கும் முகமாக ஆசிரியர் தினத்தை கொண்டாடி வருகின்றது.

ஒரு சிறு பிள்ளையின் வாழ்வில் தாயின் பங்கு எந்த இடத்தை வகிக்கின்றதோ அதே போன்று சிறுபராயத்திலிருந்து பல்வேறு விடயங்களை கற்றுக் கொள்வதற்கு ஆசிரியர்களே வழியமைத்து தருகின்றனர்.

அந்த வகையில் ஆசிரியரானவர்கள் மாணவர்களுக்கு சிறந்த அறிவினை வழங்கக் கூடியவராகவும் மாணவர்களின் வழிகாட்டியாகவும் காணப்படுகின்றனர்.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதில் தனது பெற்றோருக்கு அடுத்ததாக குருவாக போற்றப்படுபவர்கள் ஆசிரியர்களாகவே திகழ்கின்றனர். இத்தகைய ஆசிரியர்களை கண்ணியப்படுத்தி போற்றுவது எமது அனைவரினதும் கடமையாகும்.

முக்கியத்துவமிக்க ஆசிரியர்கள்

ஒரு மனிதனானவன் தனது எதிர்கால வாழ்வில் சிறந்த விஞ்ஞானியாகவோ, வைத்தியராகவோ, சிறந்த தலைவராகவோ பல சாதனைகளை அடைந்து கொள்வதற்கு பக்கபலமாக ஆசிரியர்களே திகழ்கின்றார்கள்.

ஆண்டு தோறும் அயராது உழைக்கும் ஆசிரியர்களை மதிப்பளிக்க கூடிய வகையில் ஆசிரியர் தினமானது கொண்டாடப்படுகின்றது.

ஆசிரியரானவர்கள் மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்கக் கூடியவர்களாவர். அதாவது ஒவ்வொரு மாணவர்களும் ஒவ்வொரு தனித்துவமுடையவர்களாகவே காணப்படுவர்.

சிலர் கற்றலை இலகுவாக புரிந்து கொள்ள கூடியவர்களாக இருப்பர். ஆனால் சிலர் கற்றலில் ஈடுபாடற்றவர்களாகவும் விளையாட்டில் அதிக ஈடுபாடு உடையவராகவும் காணப்படுவர்.

இவ்வாறாக வேறுபட்ட இயல்புகளை கொண்டவர்களுக்கு மத்தியில் இவர்களது திறன்களை இணங்கண்டு சமூகத்திற்கு மத்தியில் உயர்ந்த இடத்தில் திகழவைக்கும் பெருமைக்குரியவர்கள் ஆசிரியர்களே ஆவார்கள்.

மாணவர்களுடைய அறிவு வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் பொறுப்புமிக்கவராக செயற்பட்டு அவர்கள் சிறந்த இலக்குகளை அடைவதற்கு பக்கபலமாக ஆசிரியர்களே துணை நிற்கின்றனர்.

ஒரு மாணவர்களுடைய எதிர்காலமே ஆசிரியரின் கையிலேயேதான் உள்ளது என்ற வகையில் ஒரு சிறந்த ஆசிரியரானவர் எதிர்காலத்தில் பல சமூக சாதனையாளர்களை உருவாக்க வித்திட்டவர்கள் ஆவர். இவ்வாறான ஆசிரியர்களுக்காக கொண்டாடப்படுகின்ற ஒரு நாளாக ஆசிரியர் தினமானது காணப்படுகின்றது.

ஆசிரியர் தினக் கொண்டாட்டம்

ஒவ்வொரு நாடுகளிலும் வெவ்வேறு திகதிகளில் ஆசிரியர்களை கௌரவிக்கும் முகமாக ஆசிரியர் தினமானது கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆசிரியர் தின நாளில் தங்களுடைய பாடசாலைகளில் மாணவர்கள் தங்களது ஆசிரியர்களை பற்றி கவிதைகள், பேச்சுப் போட்டி, பாடல் என பல நிகழ்வுகளை நடாத்துவர்.

அன்றைய நாளில் ஆசிரியர்கெளுக்கென்று பல போட்டிகள் நடாத்தப்பட்டு பரிசுகள் வழங்கியும் ஆசிரியர்களை கௌரவப்படுத்துவர்.

வகுப்பறைகளை அலங்கரித்து மாணவர்கள் தங்களது ஆசிரியர்களுக்கு வாழ்த்து அட்டைகள் மற்றும் கையால் தயாரிக்கப்பட்ட பல பரிசுப் பொருட்களை வழங்குகின்றனர். இவ்வாறாகவே ஆசிரியர் தின கொண்டாட்டமானது வெகு விமர்சையாக இடம்பெறும்.

பேராசிரியர் ராதாகிருஷ்ணன் அவர்களும் ஆசிரியர் தினமும்

இந்தியாவில் செப்டம்பர் 5ம் திகதி ஆசிரியர் தினமாக கொண்டாடுகின்றனர். இதற்கான காரணம் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் என்பவரின் பிறந்த நாளாகும்.

ஏனெனில் இவர் கல்வியில் அதிக ஈடுபாடு கொண்டதொருவராகவும், இராஜதந்திரியாகவும், இந்திய ஜனாதிபதியாகவும் காணப்பட்டதோடு மிக முக்கியமாக ஓர் ஆசிரியராகவே காணப்பட்டார். மாணவர்களுக்கு மிகவும் பிரியமான ஒருவராகவும் இவர் திகழ்ந்தார்.

இவர் அரசியலில் நுழைவதற்கு முன்பதாக கல்கத்தா பல்கலைக்கழகம், மைசூர் மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் போன்றவற்றில் ஆசிரியராக பணிபுரிந்தார். மேலும் மாணவர்களால் சிறந்த ஆசிரியராகவும் மதிக்கப்பட்ட ஒருவராகவே திகழ்ந்தார்.

இவ்வாறாக 1962 இல் இந்திய குடியரசு தலைவராக இவர் பதவியேற்ற போது இவரிடம் கல்வி பயின்ற மாணவர்கள் இவரது பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுவதற்கு அனுமதி வேண்டினர்.

இதன் காரணமாக பேராசிரியர் ராதாகிருஷ்ணன் அவர்கள் செப்டம்பர் 5ம் திகதியை ஆசிரியர் தினமாக கொண்டாட அனுமதி வழங்கினார்கள். அதற்கமைய இன்று வரை அவரது பிறந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகின்றனர்.

ஒரு நல்ல ஆசிரியரால் மட்டுமே மாணவர்களுள் உள்ள சிறந்த நல்ல பண்புகளை வெளிப்படுத்த முடியும் என்ற வகையில் ஆசிரியர்களை மதித்து நடப்பது எம் அனைவரினதும் கடமையாகும்.

You May Also Like:

கல்வி வளர்ச்சி நாள் பேச்சு போட்டி

ஆசிரியர் பற்றிய கட்டுரை